Home
News

EPFO 3.0.. ஏடிஎம் மூலம் PF பணத்தை எடுக்கலாம்.. எப்போது அமலுக்கு வருகிறது? வெளியான முக்கிய தகவல்..

தொழிலாளர் வைப்பு நிதி கணக்கில் இருக்கும் பணத்தை எளிமையாக எடுக்கும் வகையிலான புதிய மாற்றங்கள் விரைவில் அமலுக்கு வர இருக்கின்றன. குறிப்பாக மத்திய அரசு EPFO 3.0 என்ற ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் படி தொழிலாளர்கள் தங்களுடைய பிஎஃப் (PF) கணக்கில் இருக்கும் பணத்தை ஏடிஎம் இல் இருந்து எப்படி பணம் எடுக்கிறோமோ அதேபோல எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவும் 2025 மே அல்லது ஜூன் மாதம் EPFO 3.0 பயன்பாட்டிற்கு வரும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய மாற்றம் அமலுக்கு வந்ததும் ஏடிஎம் வழியாக பிஎப் பணத்தை எளிமையாக எடுக்க முடியும். முன்பு பிஎப் பணத்தைப் பெறுவது என்பது மிகப் பெரிய செயல்முறையாக இருந்தது. அதாவது நாம் பிஎப் பணத்திற்கு விண்ணப்பித்து சில நாட்கள் காத்திருந்து அதன்பின்பு தான் பணத்தைப் பெறமுடியும்.

EPFO 3.0.. ஏடிஎம் மூலம் PF பணத்தை எடுக்கலாம்..

அதேபோல் EPFO 3.0 திட்டத்தின் மூலம் பல எளிமையான சேவைகளைக் கொண்டுவருவோம் என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். அதாவது பிஎப் பணத்தை யுபிஐ (upi) மூலம் எடுக்கும் வசதியும் கொண்டுவரப்பட உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரி இப்போது ஏடிஎம் மூலம் பிஎப் பணத்தை எப்படி எடுப்பது என்று பார்க்கலாம்.

பிஎப் பணத்தை ஏடிஎம் மூலம் எடுப்பது எப்படி?
அதாவது ஏடிஎம்கள் மூலம் பிஎப் பணத்தை எடுப்பதற்கு வசதியாக கார்டுகளை வழங்கும் பணியிலும் தொழிலாளர் அமைச்சகம் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த வசதி தான் 2025 மே அல்லது ஜூன்-க்குள் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இது EPFO​​ சந்தாதாரர்களுக்கு மேலும் வசதியை அளிக்கும். அந்த கார்டுகளை ஏடிஎம் கார்டுகள் போல பயன்படுத்தி பணம் எடுக்க முடியும். மேலும் அந்த கார்டுகள் உங்கள் போன் மற்றும் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் தற்போது பிஎப் கணக்கில் மாத ஊதியத்தில் தொழிலாளர் சார்பில் சரிசமமாக 12 சதவீதம் பணம் செலுத்தப்படுகிறது. ஆனால் இந்த வரம்பை மாற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. எனவே விரைவில் வரும் புதிய விதிகளில் ஊழியர்கள் 12%க்கும் அதிகமான தொகையை PF-க்கு அளிக்க முடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டம் மூலம் ஓய்வுக்குப் பிறகு பெரிய ஓய்வூதிய நிதி கிடைக்கும்.

அதேபோல் EPFO அதன் ஐடி (IT) உள்கட்டமைப்பை மேம்படுத்தப் போகிறது. குறிப்பாக இது பி.எஃப் தொகையை க்ளெய்ம் செய்யும் பயனாளிகளுக்கு தங்கள் வைப்புத்தொகையைக் குறைந்தபட்ச மனித தலையீட்டுடன் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும். அதேபோல் ஐடி மேம்படுத்தல் ஜூன் 2025க்குள் முடிவடையும் என்று தகவல் வெளியாகி உள்ளது. EPFO IT சிஸ்டம் அப்கிரேடு செய்வதன் முக்கிய நன்மைகள் என்னவென்றால், பி.எஃப் பயனர்களின் க்ளெய்ம்கள் விரைவாக செட்டில் செய்யப்படும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும், மோசடி வழக்குகள் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு ஊழியர்கள் மாறும் போது, நிறுவனத்தின் தேவை இல்லாமல், UAN வைத்துள்ள பி.எப் சந்தாதாரர்கள் தாமாகவே இணையதளம் வழியாக, விண்ணப்பித்து பி.எப் கணக்கை புதிய நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ளும் வகையில் எளிமைப்படுத்தியது EPFO அமைப்பு.

இதேபோல் EPFO 3.0 திட்டத்தின் மூலம் பல்வேறு எளிமையான சேவைகளை வழங்க உள்ளது மத்திய அரசு. குறிப்பாக EPFO 3.0 திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
EPFO 3.0 to be introduced in May-June: After that, PF money can be withdrawn through ATM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X