Home
News

புது ரூல்ஸ்.. EPFO-வில் இருந்து PF பணத்தை எடுக்க புது விதி.. EPFO 3.0 திட்டத்தின் புதிய மாற்றங்கள்.. கவனிங்க..

இந்திய அரசாங்கம் விரைவில் அணைத்து EPFO பயனர்களும் பெரிதும் பயனடையும் வகையில் EPFO 3.0 வெர்ஷன் திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய EPFO 3.0 வெர்ஷன் திட்டத்தின் மூலம், EPFO பயனர்கள் பல நன்மைகளை அனுபவிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த EPFO 3.0 திட்டத்தில் ATM கார்டு மூலம் உங்கள் PF தொகையை வேண்டிய நேரத்தில் எடுத்துக்கொள்ள அனுமதிக்கும் புதிய சேவையும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பல கோடி ஊழியர்களின் வைப்பு தொகை ஒவ்வொரு மாதமும் தவறாமல் அவரவர் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஒவ்வொரு பிஎப் கணக்கிலும் பல லட்சம் ரூபாய் இருப்பு இருந்தாலும், அவசர தேவைக்காக அந்த கணக்கில் இருக்கும் பணத்தை வெளியில் எடுப்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கிறது. இது பல நேரங்களில் பலருக்கும் சிக்கலாக அமைகிறது.

EPFO 3.0: புது ரூல்ஸ்.. EPFO-வில் இருந்து PF பணத்தை எடுக்க புது விதி..

புது ரூல்ஸ்.. EPFO-வில் இருந்து PF பணத்தை எடுக்க புது வழி:

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) தற்போதைய விதி படி, EPFO பயனர்கள் அவர்களுடைய PF கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க பல விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டியதுள்ளது. அதன் பிறகு, 3 அல்லது 4 நாட்களுக்கு பிறகே, பணம் விண்ணப்பதாரரின் கைகளுக்கு வந்து சேரும். இது மிகவும் மந்தமான போக்காக இருக்கிறது. அவசர தேவைக்கு பணத்தை உடனே கையில் எடுக்கும் சேவை வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

EPFO 3.0 மூலம் புது விதி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த புதிய விதி மூலம் EPFO பயனர்கள் ஒவ்வொருவருக்கும் ஏடிஎம் கார்டு (ATM card) போன்ற ஒரு புதிய EPFO கார்டு வழங்கப்படவுள்ளது. இந்த EPFO கார்டை பயன்படுத்தி இனி பணத்தேவை தேவைப்படும் பொழுது EPFO பயனர்கள் அருகில் இருக்கும் ATM மையங்களில் இருந்து நேரடியாக பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

EPFO 3.0 மூலம் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் EPFO வித்ட்ராவல் கார்டு (EPFO withdrawal card):

இந்த புதிய EPFO கார்டை பயன்படுத்தி, உங்கள் PF கணக்கில் இருக்கும் இருப்பு தொகை பணத்தை மட்டுமே எடுக்க முடியும் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். இந்த பிரத்தியேக EPFO 3.0 வித்ட்ராவல் கார்டு வரும் ஜூன் 2025 இல் அறிமுகம் செய்யப்பட்டு, EPFO பயனர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய EPFO 3.0 வெர்ஷனில் இன்னும் பல புதிய ரூல்ஸ்களை நாம் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

என்ன தான் உங்களிடம் EPFO கார்டு வழங்கப்பட்டாலும், உங்கள் பிஎப் கணக்கில் இருக்கும் மொத்த தொகையையும் உங்களால் வெளியில் எடுக்க முடியாது என்பது கவனிக்கத்தக்கது. எப்போதும் போல, EPFO விதிகளின் படி, உங்கள் பிஎப் கணக்கில் இருக்கும் ஒட்டுமொத்த இருப்பில் இருந்து, ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை மட்டுமே உங்களால் ATM கார்டு மூலம் பணமாக கையில் எடுக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

புதிய EPFO வித்ட்ராவல் கார்டு (EPFO withdrawal card) மூலம் மக்கள் அருகில் உள்ள ATM மையங்களில் இருந்து அவர்களுடைய பிஎப் கணக்கை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நிச்சயமாக பணம் எடுப்பதற்கும் வரம்பு இருக்கும். அதனால் எதிர்காலத்திற்காக சிறிது பணத்தை சேமிக்க முடியும் என்று EPFO அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த புதிய EPFO 3.0 விதிகள் வரும் ஜூன் 2025 முதல் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
EPFO 3.0 New EPFO Withdrawal Card Rules To Take PF Money From ATM Coming Soon In June 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X