Home
News

EPFO 3.0: பி.எப் கணக்கில் வருகிறது புதிய வசதி.. இனி பணத்தை சுலபமாக எடுக்கலாம்.. இதோ முழு விவரம்..

EPFO எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டமாக உள்ளது. அதாவது நாட்டில் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் என்றே தனித்தனி PF கணக்கு வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த PF கணக்கில் ஒவ்வொரு மாதமும் வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில் பி.எப் கணக்கில் புதிய வசதியைக் கொண்டு வர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) ஓய்வூதிய சேமிப்பு திட்டத்தின் மூலம் ஊழியர்கள் பெறும் சம்பள தொகையில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு பகுதி முதலீடு செய்யப்படுகிறது. அதேபோல் தொழிலாளர் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து ஒரு தொகையும் இந்த கணக்கில் டெபாசிட் செய்யப்படும். குறிப்பாக இந்த தொகை ஒவ்வொரு ஊழியர்களும் ஓய்வு பெறும் போது எடுத்துக்கொள்ள முடியும்.

EPFO 3.0: பி.எப் கணக்கில் வருகிறது புதிய வசதி..

ஒருவேளை ஓய்வுக்கு முன்பே தொழிலாளர்கள் இந்த பணத்தை மருத்து செலவுகள், கல்வி, வீட்டுக் கடன்கள், திருமணம், வீடு கட்டுதல் போன்ற அவசரமான தேவைகளுக்கு முன்பாகவே எடுத்த கொள்ளலாம். ஆனாலும் சில நிபந்தனைகளுடன் இந்த பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. குறிப்பாக மருத்து அவசரம் மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் இருக்கும் போது பிஃஎப் உறுப்பினர்கள் சில நிபந்தனைகளுடன் ரூ.1 லட்சம் வரை தொகையைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இபிஎப்ஒ 3.0 (EPFO 3.0) திட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் கூடுதல் வசதிகளைக் கொண்டுவர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி தொழிலாளர்கள் செலுத்த வேண்டி தொகைக்கான உச்ச வரம்பு நீக்கப்படவுள்ளது. எனவே தொழிலாளர் விரும்பினால் பி.எப் கணக்கில் கூடுதலாகப் பணத்தைச் சேமிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது தற்போது பி.எப் கணக்கில் மாத ஊதியத்தில் தொழிலாளர் மற்றும் நிர்வாகம் சார்பில் சரிசமமாக 12 சதவீதம் பணம் செலுத்தப்படுகிறது. குறிப்பாக பி.எப் கணக்கில் தொழிலாளர் 12 சதவீதத்துக்குக் கூடுதலான தொகையைச் சேமித்தாலும், நிர்வாகம் சார்பாக செலுத்தப்படும் 12 சதவீத தொகையில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது.

அதேசமயம் பி.எப் கணக்குக்கு வங்கியில் வழங்கப்படுவதைப் போல டெபிட் கார்டு வழங்கத் திட்டமிடப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே உங்கள் பி.எப் தொகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் திரும்பப் பெற விருப்பம் இருந்தால் ஏடிஎம் மூலம் அந்த தொகையை எடுத்துக் கொள்ளலாம். அதுவும் இபிஎப்ஒ அடுத்த ஆண்டு துவக்கத்தில் தான் பி.எப் கணக்கை நிர்வகிப்பதில் கொண்டு வரப்படும் மாற்றங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

EPFO 3.0: பி.எப் கணக்கில் வருகிறது புதிய வசதி..

அதேபோல் பி.எப் கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் பணத்தை எடுத்துக் கொள்ளும் இந்த புதிய வசதி அடுத்த ஆண்டு மே அல்லது ஜுன் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

குறிப்பாக இபிஎப்ஒ 3.0 (EPFO 3.0) திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதாவது இந்த திட்டம் மூலம் தொழிலாளர்கள் தங்களது விருப்பப்படி தங்களுடைய கணக்கில் கட்டுப்பாடுகள் இன்றி பணத்தை டெபாசிட் செய்து சேமிக்க முடியும். அதேபோல் ஒரு அவசர தேவைக்கும் பணத்தை எடுக்கவும் இந்த புதிய திட்டம் மிகவும் உதவியாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
EPFO 3.0: Employees can withdraw PF money withdrawals from ATM: Govt making plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X