Home
News

ஏப்ரல் முதல் எல்லாம் மாறும்.. EPFO கொண்டுவரும் புதிய வசதி.. இனி பணம் எடுக்க சிரமம் இருக்காது.

இபிஎஃப்ஓ (EPFO) என்று அழைக்கப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organization) தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்த அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு வசதியும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் PF பயனர்களுக்கு ஒரு முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது முன்பு பிஎப் பணத்தைப் பெறுவது என்பது மிகப் பெரிய செயல்முறையாக இருந்தது. அதாவது நாம் பிஎப் பணத்திற்கு விண்ணப்பித்து சில நாட்கள் காத்திருந்து அதன்பின்பு தான் பணத்தை பெறமுடியும். இந்நிலையில் EPF உறுப்பினர்கள் தங்கள் பணத்தை சுலபமாக எடுக்க UPI வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஏப்ரல் முதல் எல்லாம் மாறும்.. EPFO கொண்டுவரும் புதிய வசதி..

அதன்படி EPF உறுப்பினர்கள் தங்கள் உரிமைக்கோரல் தொகையை இனி யுபிஐ (UPI) மூலம் பெறுவதற்கான முயற்சியில் EPFO அமைப்பு ஈடுபட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான பிளானை EPFO அமைப்பு தயாரித்துள்ளது. மேலும் யுபிஐ தளங்களில் இந்த வசதியை அறிமுகப்படுத்த நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என்று கூறப்படுகிறது.

financialexpress வெளியிட்ட தகவலின்படி, ஏப்ரல் பிற்பகுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் யுபிஐ மூலம் PF பணத்தை எடுக்கும் புதிய வசதி அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. பொதுவாக பிஎப் பணத்தை எடுக்க சில நாட்கள் ஆகும். ஆனால் இந்த யுபிஐ ஒருங்கிணைப்பின் மூலம் விரைவாக பரிவர்த்தனையை முடிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் இதன் முக்கிய நன்மை என்னவென்றால், பிஎப் பணம் எடுக்கும் கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவு, பின்பு கிராமப்புறங்களில் இருப்பவர்களும் எளிதாக வீட்டில் இருந்தே பணம் எடுக்க முடியும். ஆனாலும் தற்போது வரை EPFO இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. விரைவில் யுபிஐ மூலம் PF பணத்தை எடுக்கும் வசதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் EPFO​​ 3.0 என்ற திட்டத்தை செயல்படுத்தி ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் நடைமுறையை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தது என்னவென்றால், இந்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதம் EPFO உறுப்பினர்களுக்கு மொபைல் அப்ளிகேஷன் மற்றும் டெபிட் கார்டு வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

ஏப்ரல் முதல் எல்லாம் மாறும்.. EPFO கொண்டுவரும் புதிய வசதி..

எனவே இதன் மூலம் EPF உறுப்பினர்கள் தங்களுடைய PF தொகையை நேரடியாக ஏடிஎம்-இல் இருந்து எடுக்க முடியும். EPFO உறுப்பினர்களுக்கு ஏடிஎம் கார்டு வழங்கப்பட்டாலும், தங்கள் முழு பங்களிப்புத் தொகையைத் திரும்பப் பெற முடியாது எனக் கூறப்படுகிறது. அதாவது பணம் திரும்ப பெறுவதற்கான வரம்பு EPFO அமைப்பால் நிர்ணயிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் EPFO அதன் ஐடி (IT) உள்கட்டமைப்பை மேம்படுத்தப் போகிறது. குறிப்பாக இது பி.எஃப் தொகையை க்ளெய்ம் செய்யும் பயனாளிகளுக்கு தங்கள் வைப்புத்தொகையைக் குறைந்தபட்ச மனித தலையீட்டுடன் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும். அதேபோல் ஐடி மேம்படுத்தல் ஜூன் 2025க்குள் முடிவடையும் என்று தகவல் வெளியாகி உள்ளது. EPFO IT சிஸ்டம் அப்கிரேடு செய்வதன் முக்கிய நன்மைகள் என்னவென்றால், பி.எஃப் பயனர்களின் க்ளெய்ம்கள் விரைவாக செட்டில் செய்யப்படும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும், மோசடி வழக்குகள் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
EPF withdrawal via UPI process may be introduced in April: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X