EPFO சர்ப்ரைஸ்.. இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்.. எப்போது முதல் தெரியுமா?
இந்தியாவில் EPFO எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்பது மிகவும் சிறந்த முதலீட்டுத் திட்டமாக உள்ளது. குறிப்பாக நாட்டில் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் என்றே தனித்தனி PF கணக்கு வழங்கப்படுகிறது. இந்த PF கணக்கில் ஒவ்வொரு மாதமும் வரவு வைக்கப்படுகிறது
அதேபோல் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தில் உள்ள சந்தாதாரர்கள், தங்கள் பிஎஃப் கணக்கை எளிதாக நிர்வகிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக EPFO 3.0 என்ற திட்டத்தை செயல்படுத்தி ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் நடைமுறையை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு ஊழியர்கள் மாறும் போது, நிறுவனத்தின் தேவை இல்லாமல், UAN வைத்துள்ள பி.எப் சந்தாதாரர்கள் தாமாகவே இணையதளம் வழியாக, விண்ணப்பித்து பி.எப் கணக்கை புதிய நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ளும் வகையில் எளிமைப்படுத்தியது.
இதன் அடுத்த கட்டமாக EPF உறுப்பினர்கள் தங்கள் உரிமைக்கோரல் தொகையை யுபிஐ (UPI) மூலம் பெறுவதற்கான முயற்சியில் EPFO அமைப்பு ஈடுபட்டுள்ளது. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான பிளானை EPFO அமைப்பு தயாரித்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் யுபிஐ தளங்களில் இந்த வசதியை அறிமுகப்படுத்த நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என்று கூறப்படுகிறது.
குறிப்பாக EPFO அமைப்பின் கீழ் இருக்கும் சுமார் 7.4 மில்லியன் உறுப்பினர்களுக்கு எளிதாகப் பணம் எடுப்பதற்கு உதவுவதற்கும் யுபிஐ ஒருங்கிணைப்பு செயல்பாட்டில் ஆர்வம் காட்டி வருகிறது EPFO அமைப்பு. அதுவும் UPI உடன் EPF கணக்குகள் இணைக்கப்பட்டால் அனைத்து உறுப்பினர்களும் டிஜிட்டல் வாலெட் மூலம் தங்கள் உரிமை கோரல் தொகையை எளிதாக பெற முடியும்.
அதேபோல் கிராமங்களில் இருக்கும் சில இபிஎப் உறுப்பினர்கள் தங்களது பிஎஃப் பணத்தை எடுக்க அல்லது மாற்றம் செய்ய நகரங்களுக்கு தான் செல்ல வேண்டி இருக்கிறது. இந்த யுபிஐ வசதி மட்டும் கொண்டுவரப்பட்டால் கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் தங்கள் மொபைல் போன் மூலம் எங்கு இருந்து வேண்டுமானாலும் பணப்பரிவர்த்தனை செய்துகொள்ள முடியும்.

அதேபோல் தற்போது பி.எப் கணக்கில் மாத ஊதியத்தில் தொழிலாளர் சார்பில் சரிசமமாக 12 சதவீதம் பணம் செலுத்தப்படுகிறது. ஆனால் இந்த வரம்பை மாற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. எனவே விரைவில் வரும் புதிய விதிகளில் ஊழியர்கள் 12%க்கும் அதிகமான தொகையை PF-க்கு அளிக்க முடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டம் மூலம் ஓய்வுக்குப் பிறகு பெரிய ஓய்வூதிய நிதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர EPFO அதன் ஐடி (IT) உள்கட்டமைப்பை மேம்படுத்தப் போகிறது. குறிப்பாக இது பி.எஃப் தொகையை க்ளெய்ம் செய்யும் பயனாளிகளுக்கு தங்கள் வைப்புத்தொகையைக் குறைந்தபட்ச மனித தலையீட்டுடன் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும். அதேபோல் ஐடி மேம்படுத்தல் ஜூன் 2025க்குள் முடிவடையும் என்று தகவல் வெளியாகி உள்ளது. EPFO IT சிஸ்டம் அப்கிரேடு செய்வதன் முக்கிய நன்மைகள் என்னவென்றால், பி.எஃப் பயனர்களின் க்ளெய்ம்கள் விரைவாக செட்டில் செய்யப்படும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும், மோசடி வழக்குகள் குறையும்.


Click it and Unblock the Notifications