Home
News

ஜூன் வரை காத்திருப்போம்.. பிஎஃப் பணம் எடுக்க புதிய வசதி வருகிறது.. மத்திய அரசின் புதிய திட்டங்கள்..

யுபிஐ (UPI) மற்றும் ஏடிஎம்-கள் மூலம் பிஎஃப் (PF) பணம் எடுக்கும் வசதி விரைவில் தொடங்குவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. குறிப்பாக மத்திய அரசு கொண்டுவரும் இந்த புதிய வசதிகள் EPF உறுப்பினர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். இப்போது இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது பல சமயங்களில் அடிக்கடி நிராகரிப்பு காரணமாக பிஎஃப் பணம் எடுப்பதில் ஊழியர்கள் சிரமப்படுகிறார். எனவே தான் பணம் எடுப்பதை ஒழுங்குபடுத்தவும், செயல்முறையை விரைவுபடுத்தவும், யுபிஐ வழியாக பிஎஃப் பணம் எடுப்பதை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய வசதி கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற யுபிஐ தளங்களைப் பயன்படுத்தி பிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் சேமிப்பை உடனடியாக எடுக்க அனுமதிக்கும்.

ஜூன் வரை காத்திருப்போம்.. பிஎஃப் பணம் எடுக்க புதிய வசதி வருகிறது..

மேலும் இந்த அம்சத்தை வெளியிடுவதற்காக ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இ.பி.எப்.ஓ.) தற்போது இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்துடன் (என்.பி.சி.ஐ.) கலந்து ஆலோசித்து வருகிறது எனத் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த திட்டம் வரும் 2025 மே அல்லது ஜூன்-க்குள் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

அதுவும் கிராமங்களில் இருக்கும் சில இபிஎப் உறுப்பினர்கள் தங்களது பிஎஃப் பணத்தை எடுக்க அல்லது மாற்றம் செய்ய நகரங்களுக்குத் தான் செல்ல வேண்டி இருக்கிறது. இந்த யுபிஐ வசதி மட்டும் கொண்டுவரப்பட்டால் கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் தங்கள் மொபைல் போன் மூலம் எங்கு இருந்து வேண்டுமானாலும் பணப்பரிவர்த்தனை செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர ஏடிஎம் கார்டுகள் மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதுவும் 2025 ஜூன் மாதம் EPFO உறுப்பினர்களுக்கு ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி கொண்டுவரப்பட உள்ளதாக சமீபத்தில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

அதேசமயம் EPFO உறுப்பினர்களுக்கு ஏடிஎம் கார்டு வழங்கப்பட்டாலும், தங்கள் முழு பங்களிப்புத் தொகையைத் திரும்பப் பெற முடியாது எனக் கூறப்படுகிறது. அதாவது பணம் திரும்ப பெறுவதற்கான வரம்பு EPFO அமைப்பால் நிர்ணயிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் பிஎஃப் பணத்தை ஏடிஎம் மூலம் வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

ஜூன் வரை காத்திருப்போம்.. பிஎஃப் பணம் எடுக்க புதிய வசதி வருகிறது..

அதேபோல் பி.எப் கணக்கில் மாத ஊதியத்தில் தொழிலாளர் சார்பில் 12 சதவீதம் பணம் செலுத்தப்படுகிறது. ஆனால் இந்த வரம்பை மாற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. அதாவது இந்த ஆண்டு வரும் புதிய விதிகளில் ஊழியர்கள் 12%க்கும் அதிகமான தொகையை PF-க்கு அளிக்க முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஓய்வுக்குப் பிறகு பெரிய ஓய்வூதிய நிதி கிடைக்கும்.

பின்பு EPFO அதன் ஐடி (IT) உள்கட்டமைப்பை மேம்படுத்தப் போகிறது. அதாவது EPFO ஐடி சிஸ்டம் அப்கிரேடு (EPFO IT system upgrade) செய்யப்பட உள்ளது. குறிப்பாக EPFO IT சிஸ்டம் அப்கிரேடு செய்வதன் முக்கிய நன்மைகள் என்னவென்றால், பி.எஃப் பயனர்களின் க்ளெய்ம்கள் விரைவாக செட்டில் செய்யப்படும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும், மோசடி வழக்குகள் குறையும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
EPF withdrawal facility via UPI and ATMs to be introduced soon: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X