புது EPF ரூல்ஸ்.. இனி ஆதார் போதும்.. நிறுவனத்தின் ஒப்புதல் தேவையில்லை.. எல்லாமே மாறுது.. முழு விபரம் இதோ..
இபிஎஃப்ஓ (EPFO) என்று அழைக்கப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organization) கொண்டுவரும் புதிய திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர் தங்கள் சுயவிவரத்தை (profile) அப்டேட் செய்வதற்கான புதிய விதிகளைத் திருத்தியுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது EPF உறுப்பினர்கள் இனி முக்கிய ஆவணங்கள் பதிவேற்றம் ஏதும் இல்லாமல் தங்கள் ஆதார் இணைக்கப்பட்ட யுனிவர்சல் கணக்கு எண்களை (UAN) பயன்படுத்தி தனிப்பட்ட விவரங்களை இனி சுலபமாக அப்டேட் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வசதி அனைத்து பிஎஃப் உறுப்பினர்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.

அதுவும் ஆதார் மூலம் UAN இணைக்கப்பட்டிருந்தால் போதும் இபிஎஃப் (EPF) உறுப்பினர்கள் தங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம், தேசியம், தந்தை அல்லது தாயின் பெயர், திருமண நிலை, மனைவி பெயர். நிறுவனத்தில் சேர்ந்த தேதி மற்றும் வெளியேறும் தேதி போன்ற தனிப்பட்ட விவரங்களை அப்டேட் செய்ய எந்த ஆவணங்களையும் பதிவேற்றம் செய்யாமல் புதுப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குமுன்பு வரை இந்த விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்றால் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒப்புதல் அல்லது முதலாளியின் ஒப்புதல் கிடைக்க வேண்டும், அதன்பின்பு தான் பெயர், பிறந்த தேதி, பாலினம், தேசியம், தந்தை அல்லது தாயின் பெயர், திருமண நிலை, மனைவி பெயர், நிறுவனத்தில் சேர்ந்த தேதி மற்றும் வெளியேறும் தேதி போன்றவற்றை மாற்ற முடிந்தது. ஆனால் இனி அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
மேலும் 2024-25 நிதியாண்டில் முதலாளிகள் மூலம் திருத்தம் செய்வதற்காக EPFO-வில் பெறப்பட்ட மொத்த 8 லட்சம் கோரிக்கைகளில் சுமார் 45 சதவீதம் கோரிக்கைகள் EPFO-வில் இந்த புதிய விதிகளால் உறுப்பினரால் சுயமாக அங்கீகரிக்கப்படலாம் என EPFO-வின் அறிக்கை கூறுகிறது.
ஆனால் கடந்த 2017 அக்டோபர் 1-ம் தேதிக்கு முன்பு UAN வழங்கப்பட்டிருந்தால், சுயவிவரத்தில் அப்டேட் செய்ய வேண்டியிருந்தால் முதலாளியின் ஒப்புதல் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது PF சுயவிவரங்களை (profile) அப்டேட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
வழிமுறை-1: முதலில் www.epfindia.gov.in என்ற EPFO இன் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும். அதன்பின்பு உங்களது UAN எண் மற்றும் பாஸ்வேர்டு மற்றும் கேப்சாவை பயன்படுத்தி உள்நுழையவும்.

வழிமுறை-2: அடுத்து வரும் Menu வில் Manage என்பதை தேர்வு செய்யவும். அதன்பின்னர் Modify Basic Details என்பதை கிளிக் செய்யவும். உங்கள் ஆதார் கார்டில் உள்ளபடி அனைத்து விவரங்களையும் கொடுத்து submit கொடுக்கவும். அவ்வளவு தான் இது முடிந்ததும், Track Request கொடுத்து உங்கள் விவரங்கள் அப்டேட் செய்யப்பட்டதை டிராக் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் யுபிஐ (UPI) மற்றும் ஏடிஎம்-கள் மூலம் பிஎஃப் (PF) பணம் எடுக்கும் வசதி 2025 ஜூன்-க்குள் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய வசதிகள் பிஎஃப் பயனர்களுக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதுவும் கிராமங்களில் இருக்கும் சில இபிஎப் உறுப்பினர்கள் பிஎஃப் பணத்தை எடுக்க அல்லது மாற்றம் செய்ய நகரங்களுக்குத் தான் செல்ல வேண்டி இருக்கிறது. இந்த யுபிஐ வசதி மட்டும் கொண்டுவரப்பட்டால் கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் தங்கள் மொபைல் போன் மூலம் எங்கு இருந்து வேண்டுமானாலும் பணப்பரிவர்த்தனை செய்துகொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








