Home
News

மே மாதம் முதல் வரப்போகும் 3 அதிரடி மாற்றங்கள்.. யாருக்கெல்லாம் வரி பிடிப்பார்கள்.. EPF புதிய விதிமுறைகள்!

ஈபிஎஃப் (EPF) கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கான டிடிஎஸ் (TDS) விதிமுறைகளை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மாற்றியமைத்துள்ளது. உங்களது பணிக்காலம், பான் கார்டு (PAN) விவரங்கள், மற்றும் படிவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வரி விதிப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பின்வரும் தலைப்புகளில் விரிவாகப் பார்க்கலாம்.

ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட பணிக்காலம்: நீங்கள் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெவ்வேறு நிறுவனங்களிலோ தொடர்ந்து 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்து, அதன் பிறகு ஈபிஎஃப் பணத்தை எடுத்தால் அதற்கு டிடிஎஸ் (TDS) பிடித்தம் செய்யப்படாது. இந்தத் தொகைக்கு முழுமையாக வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

மே மாதம் முதல் வரப்போகும் 3 அதிரடி மாற்றங்கள்.. யாருக்கெல்லாம் வரி?

ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவான பணிக்காலம்: உங்களது மொத்த பணிக்காலம் 5 ஆண்டுகளுக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் எடுக்கும் தொகை மற்றும் சில நிபந்தனைகளின் அடிப்படையில் டிடிஎஸ் விதிக்கப்படும்.பான் கார்டு (PAN) சமர்ப்பிக்கப்பட்டால் வழக்கமான வரி விகிதங்களின் அடிப்படையில் (பொதுவாக 10% என்று கூறப்படுகிறது) டிடிஎஸ் பிடிக்கப்படும்.

நீங்கள் பான் கார்டு விவரங்களை வழங்கத் தவறினால், வருமான வரி விதிகளின்படி அதிகபட்ச விகிதத்தில் (Maximum Marginal Rate) டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். ஆகவே, பான் கார்டு விவரங்கள் ஈபிஎஃப் கணக்கு வைத்து இருப்பவர்களுக்கு முக்கியமானதாக மாறி இருக்கிறது. டிடிஎஸ் விலக்கு பெறவும் படிவம் சமர்ப்பிக்க அனுமதி கொடுக்கப்படுகிறது.

டிடிஎஸ் விலக்கு பெற புதிய படிவம் 121 (Form 121): இதுவரை ஈபிஎஃப் பண எடுப்பின் போது டிடிஎஸ் பிடித்தத்தைத் தவிர்க்க தகுதியான நபர்கள் படிவம் 15ஜி அல்லது படிவம் 15ஹெச் ஆகியவற்றைச் சமர்ப்பித்து வந்தனர். ஆனால், 2026-2027 நிதியாண்டு முதல், இந்த வரி விலக்கைக் கோருவதற்கு புதிய படிவம் 121 (Form 121) தேவைப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3 நாட்களில் முன்பணம் & ஏடிஎம்/யுபிஐ வசதி: பணம் எடுக்கும் செயல்முறையை எளிதாக்க ஈபிஎஃப்ஓ மேலும் சில அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. 3 நாட்களில் அட்வான்ஸ் கிடைக்கும். உறுப்பினர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக ஈபிஎஃப் முன்பணம் (Advance) கோரி விண்ணப்பித்தால், அது வெறும் 3 நாட்களுக்குள் முடித்து வைக்கப்பட்டு பணம் வழங்கப்படும்.

ஏடிஎம் மற்றும் யுபிஐ (ATM & UPI) வசதி இருக்கிறது. விரைவில் உறுப்பினர்கள் தங்களது பிஎஃப் பணத்தை ஏடிஎம் (ATM) மற்றும் யுபிஐ (UPI) வழியாகவும் எடுப்பதற்கான புதிய நடைமுறையை ஈபிஎஃப்ஓ அறிமுகப்படுத்த உள்ளது. இந்த வசதி நடப்பு மே மாதத்தில் அமலுக்கு வரவிருக்கிறது. ஆகவே, அட்வான்ஸ் முறையில் ஏடிஎம் அல்லது யுபிஐ வழியாக எடுக்க முடியும்.

சொல்லப்போனால், 5 வருடத்திற்கு மேல் வேலை பார்த்திருந்தால் வரி இல்லை. 5 வருடத்திற்குள் என்றால் பான் கார்டு இருந்தால் குறைந்த வரியும், பான் கார்டு இல்லை என்றால் அதிக வரியும் பிடிக்கப்படும். வரி விலக்கு பெற படிவம் 121 பயன்படுத்த வேண்டும். இதுவே ஈபிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்க ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் விதிகளாக இருக்கிறது.

மேலும், ஓய்வு பெற்ற பிறகோ அல்லது வேலை மாறிய பிறகோ பிஎஃப் தொகைப் பெறுதலுக்காக மாதக்கணக்கில் காத்திருப்பது விரைவில் முடிய இருக்கிறது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஆனது இறுதிப் பிஎஃப் தொகையைத் திரும்பப் பெறுவதற்குத் ஆட்டோ செட்டில்மெண்ட் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இப்போது, ரூ.5 லட்சம் வரையில் ஆட்டோ செட்டில்மெண்ட் வழியாக பரிமாற்றம் செய்யப்படுகிறது. இறுதிப் பிஎப் தொகை அதிகமாக இருக்கும். ஆகவே, இதற்கு மட்டும் ஆட்டோ செட்டில்மெண்ட் திட்டமிட்டப்பட்டு உள்ளது.

Best Mobiles in India

English summary
EPF New Rules 2026 3 Major Changes Every PF Member Must Know This Process How To Avoid TDS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X