காசு மேல காசு வருது.. உங்க PF பணத்திற்கு வட்டி.. இப்போ எவ்ளோ வந்துருக்கு? மொபைல் வழியா செக் செய்வது எப்படி?
இந்தியாவில் EPFO எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டமாக உள்ளது. அதாவது ஒவ்வொரு ஊழியர்களுக்கும் தனித்தனி EPF கணக்கு வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த EPF கணக்கில் ஒவ்வொரு மாதமும் வரவு வைக்கப்படுகிறது.
அதேபோல் இந்த எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் பண்ட் ஆர்கனைசேஷன் ஆனது நிதி பாதுகாப்பதிலும் நிலையான வாழ்க்கையை அமைத்துத் தருவதிலும் அதிக கவனம் செலுத்துகிறது. குறிப்பாக ஊழியர்கள் மற்றும் முதலாளிகளும் குறிப்பிட்ட சதவீதம் ஊழியர்களின் ஊதியத்திலிருந்து இந்த இபிஎப் அக்கவுண்ட்டில் செலுத்துகின்றனர். இந்த நிதி சில காலங்களில் பெரும் தொகையாக வளர்ச்சி அடைகிறது.

மேலும் இந்த EPF கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 6 கோடிக்கும் அதிகமான சந்தாதார்களைக் கொண்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) கடந்த பிப்ரவரி 2024ல் வட்டி விகிதத்தை 0.10 சதவீதம் அதிகரித்தது.
எனவே 2023-24 நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இப்போது இந்த வட்டித் தொகை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கு வந்துவிட்டாத என்பதை இணையதளம், மிஸ்டு கால், உமாங் செயலி அல்லது எஸ்.எம்.எஸ். மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

இணையதளம்: www.epfindia.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று அங்கு யூஏஎன் (UAN) எண் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். அதன்பின்னர் நீங்கள் பிஎப் கணக்கின் மீது கிளிக் செய்து, அதில் View PF Passbook என்பதை கிளிக் செய்தால் உங்களது பேலன்ஸ் எளிதாகத் தெரிந்துவிடும்.
உமாங் செயலி: இது மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஒரு ஆப் வசதியாகும். அதேபோல் பொதுமக்கள் அரசு துறை சம்பந்தமான சேவைகளுக்கு இந்த ஆப் வசதியை பயன்படுத்தலாம். இதுதவிர உமாங் செயலி மூலம் பிஎப் இருப்புத் தொகையைத் தெரிந்துகொள்ளலாம். அதாவது உமாங் செயலியை போனில் பதிவிறக்கம் செய்து, அதில் EPFO என்பதைத் தேர்வு செய்யுங்கள். அடுத்து உங்களின் UAN எண் மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடு செய்து சைன் இன் செய்ய வேண்டும். இப்போது உங்களின் இபிஎப்பேலன்ஸ்-ஐ தெரிந்துகொள்ள முடியும்.
மிஸ்டுகால்: உங்களுடைய UAN எண் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து மிஸ்டு கால் செய்வதன் மூலம் உங்களது இபிஎப் பேலன்ஸை தெரிந்துகொள்ள முடியும். அதாவது 9966044425 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுங்கள். குறிப்பாக மிஸ்டு கார்டு கொடுத்த சில நிமிடங்களில் எஸ்.எம்.எஸ் வந்துவிடும், அதில் பிஎப் பேலன்ஸ் ஆகியவை இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்எம்எஸ்: அதேபோல் UAN எண் இணைக்கப்பட்ட மொபைல் எண் இருக்கிறது என்றால், அதில் இருந்து எஸ்எஸ்எம் அனுப்புவதன் மூலம் இபிஎப் பேலன்ஸ் தெரிந்துகொள் முடியும். அதாவது உங்களது போனில் இருந்து EPFOHO UAN ENG என்ற வடிவில் 7738299899 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பிய உடன் பேலன்ஸ் விவரங்கள் எளிமையாகத் தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஓய்வுக்காலத்துக்காக இந்த இபிஎப் வசூலிக்கப்பட்டாலும் சில அவசரக் காலத் தேவைக்காக அந்தப்பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது. இதுதவிர இபிஎப் திட்டத்தில் பல நன்மைகள் உள்ளன. எனவே தான் இதைச் சிறந்த திட்டம் என்று கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications








