100 கோடி இருந்தா மட்டும் 5G ஏலத்திற்கு வாங்க.. இல்லையா நோ-என்ட்ரி! யார் சொன்னது தெரியுமா?

|

இந்தியாவில் 5G சேவையை அறிமுகம் செய்வதற்கான வேலையை அரசாங்கம் மிகவும் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனம் இன்னும் 4ஜி சேவைக்குள் முழுமையாகக் கால்பதிக்காத நிலையில், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 5G ஸ்பெக்ட்ரத்தை வழங்குவதில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆர்வம் காட்டி வருகிறது.

குறைந்தபட்ச நிகர மதிப்பே ரூ.100 கோடியாக இருக்க வேண்டுமா?

குறைந்தபட்ச நிகர மதிப்பே ரூ.100 கோடியாக இருக்க வேண்டுமா?

சரி, இது ஒரு புறம் இருக்கட்டும், இப்போது இந்தியாவில் சொந்தமாக கேப்டிவ் பிரைவேட் 5ஜி நெட்வொர்க்கை அமைக்க ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனங்கள் அவர்களுடைய விண்ணப்பங்களைத் தாராளமாகச் சமர்ப்பிக்கலாம் என்று சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து, இந்த 5ஜி ஸ்பெக்ட்ரா ஏலத்தில் பங்குபெற விரும்பும் விண்ணப்பதார்களின் குறைந்தபட்ச நிகர மதிப்பு ரூ.100 கோடியாக இருக்க வேண்டும் என்று தொலைத்தொடர்புத் துறை இப்போது கூறியுள்ளது.

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு விண்ணப்பிக்க இது கட்டாயம்

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு விண்ணப்பிக்க இது கட்டாயம்

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இன்னும் சில விஷயங்களும் இத்துடன் சேர்த்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி, 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் தனியார் 5G நெட்வொர்க்கை உள்நாட்டில் அமைக்க விரும்பும் புவியியல் பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்றும் DOT கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

ஓ மை காட்! உங்க போன் எவ்வளவு கதிர்வீச்சை வெளியிடுகிறது? உடனே SAR அளவை செக் செய்ங்க!ஓ மை காட்! உங்க போன் எவ்வளவு கதிர்வீச்சை வெளியிடுகிறது? உடனே SAR அளவை செக் செய்ங்க!

ரூ. 50,000 திரும்பப்பெறாத தொகையை செலுத்த வேண்டும்

ரூ. 50,000 திரும்பப்பெறாத தொகையை செலுத்த வேண்டும்

அதுமட்டுமின்றி, திரும்பப்பெறாத விண்ணப்பக் கட்டணத்துடன், நிறுவனங்கள் 10 ஆண்டுகளுக்குப் புதுப்பிக்கத்தக்க உரிமத்தைப் பெற ரூ. 50,000 திரும்பப்பெறாத தொகையை செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு நேரடியாக ஸ்பெக்ட்ரம் வழங்கும் செயல்முறை உடனடியாக நடக்காது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்று DoT கூறியுள்ளது. DOT ஆனது தேவை ஆய்வுகளை மேற்கொள்வதோடு,

5ஜி அறிமுகம் இன்னும் தள்ளிப் போகுமா?

5ஜி அறிமுகம் இன்னும் தள்ளிப் போகுமா?

அதன்பின், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மூலம் நிறுவனங்களுக்கு ஸ்பெக்டரத்தை நேரடியாக வழங்குவதில் ஈடுபடுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எல்லாம் நடந்து முடிய, ஏறக்குறைய இன்னும் குறைந்தது இரண்டு வருடங்களாவது ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரை, நிறுவனங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து ஸ்பெக்ட்ரத்தை குத்தகைக்கு எடுக்கலாம்.

அதிரடி விலை குறைப்பு: JioPhone Next-ஐ இனி 'இந்த' கம்மி ரேட்டில் வாங்கலாமா? அடித்தது லக்!அதிரடி விலை குறைப்பு: JioPhone Next-ஐ இனி 'இந்த' கம்மி ரேட்டில் வாங்கலாமா? அடித்தது லக்!

DOT இன் இந்த அறிவிப்பு மீது BIF வருத்தம்

DOT இன் இந்த அறிவிப்பு மீது BIF வருத்தம்

அல்லது TSPகளை (தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள்) தங்கள் தனிப்பட்ட நெட்வொர்க்குகளை அமைக்கும்படி கேட்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 5G ஸ்பெக்டரத்தை குத்தகைக்கு எடுப்பதற்குத் தொலைத்தொடர்பு நிறுவனங்களும், விண்ணப்பதார நிறுவனங்களும் பின்பற்ற வேண்டிய சில விதிகளும் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், DOT இன் இந்த அறிவிப்பை கேட்ட பிராட்பேண்ட் இந்தியா ஃபோரம் (BIF), இந்த அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இல்லை என்று தெரிவித்துள்ளது.

ரூ. 100 கோடி நிகர மதிப்பு ஏன் சிக்கலை உருவாக்கும்?

ரூ. 100 கோடி நிகர மதிப்பு ஏன் சிக்கலை உருவாக்கும்?

ரூ. 100 கோடி நிகர மதிப்பு அளவுகோல் என்பது வரவேற்கப்படமாட்டாது என்று கூறியுள்ளது. குறிப்பாக, பிராட்பேண்ட் இந்தியா ஃபோரத்தின் (பிஐஎஃப்) தலைவர் டி.வி. ராமச்சந்திரன், நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரத்தை பெறுவதற்கு DoT நடைமுறைப்படுத்தியுள்ள ரூ. 100 கோடி நிகர மதிப்பு அளவுகோல் என்பது சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்று கூறியுள்ளார். ராமச்சந்திரன் சமீபத்தில் வெளியிட்ட தகவலின் படி, DoT தனது முன்மொழிவை மறுபரிசீலனை செய்யும் என்று நம்புவதாகக் கூறியிருக்கிறார்.

அடேங்கப்பா! Asus ROG Phone 6-ஆ இது? என்ன டிஸைனு என்ன லுக்கு? AeroActive Cooler 6 கூட இருக்கா?அடேங்கப்பா! Asus ROG Phone 6-ஆ இது? என்ன டிஸைனு என்ன லுக்கு? AeroActive Cooler 6 கூட இருக்கா?

5G நெட்வொர்க்குகளின் பெருக்கம் தடுக்கப்படுமா?

5G நெட்வொர்க்குகளின் பெருக்கம் தடுக்கப்படுமா?

ஏனெனில் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே ரூ. 100 கோடி நிகர மதிப்புள்ள அளவுகோல்களைச் சந்திக்க முடியும் என்பதே உண்மையான காரணம். அதேபோல், இந்த அறிவிப்பினால், இந்தியாவில் தனியார் 5G நெட்வொர்க்குகளின் பெருக்கம் பெருமளவில் தடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அளவுகோல்களை பூர்த்தி செய்ய முடியாத நிறுவனங்கள் எப்படியும் TSP-களை தங்களுடைய தனியார் 5G நெட்வொர்க்குகளை அமைக்குமாறு கேட்கலாம்

5ஜி விரிவாக்கம் இந்தியாவில் தாமதப்பட வாய்ப்பு

5ஜி விரிவாக்கம் இந்தியாவில் தாமதப்பட வாய்ப்பு

அல்லது TSP-களிடம் இருந்து ஸ்பெக்ட்ரத்தை குத்தகைக்கு எடுக்கலாம் என்பதே ஒரே வழியாக இருக்கும் என்கிறது BIF. உண்மையில், 100 கோடி இருந்தால் மட்டும் தான் புதிய 5ஜி ஸ்பெக்ட்ரத்தை பெற முடியும் என்றால், குறைந்த அளவு விண்ணப்பதாரர்கள் மட்டுமே இதில் நிலைக்க முடியும். இது இந்தியாவில் 5ஜி விரிவாக்கத்தை இன்னும் தாமதப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Enterprises Applying for 5G Spectrum Need to Have Net Worth of Rs 100 Crore Says DOT : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X