ஐதராபாத்தில் ஐபேட் மூலம் ஆங்கிலத்தில் குரான் போதனை!

Posted By: Staff
ஐதராபாத்தில் ஐபேட் மூலம் ஆங்கிலத்தில் குரான் போதனை!

ஐதிராபாத்தில் ஐபேட் மூலம் ஆங்கிலத்தில் குர்ஆன் போதனைகள் கொடுக்கப்படுகிறது.

பொதுவாக குர்ஆன் அரபி மொழியில் போதிக்கப்படுகிறது. ஆனால் பலருக்கு இந்த மொழி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதனால் இந்த மொழி தெரியாதவர்கள், அரபி மொழியில் மத போதகர்கள் போதிப்பதை கேட்டும், மற்றவர்கள் கூறும் அர்த்தத்தினை மனதில் கொண்டும் குர்ஆன் ஓதுகின்றனர்.

இது போன்று குர்ஆன் ஓதுவதில் மொழி சம்மந்தமான சில இடர்பாடுகளும் உள்ளது. ஆனால் ஐதிராபாத்தில் பஞ்சரா ஹில்ஸ் என்ற பகுதியில் ஐபேட் மூலம் ஆங்கிலத்தில் குர்ஆன் போதனைகள் கொடுக்கப்படுகிறது.

அதாவது ஆப்பிள் ஸ்டோரில் உள்ள அப்ளிக்கேஷன் மூலம் குர்ஆனை ஆங்கிலத்தில் எளிதாக படிக்க முடியும். ஆங்கிலத்தில் குர்ஆன் படிக்கும் நிறைய முஸ்லிம்கள் இருக்கின்றனர்.

இவர்களுக்கு இந்த அப்ளிக்கேஷன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தொழில் நுட்பம் அதிகம் வளர்ந்து கொண்டே வருகின்றது. ஆனால் அந்த தொழில் நுட்பத்தின் மூலம் ஒவ்வொருவருக்கும் புதிய புதிய பயன்பாடுகள் கிடைத்து கொண்டே இருக்கின்றது என்பது தான் உண்மை.

குர்ஆன், பைபில், பகவத் கீதை போன்ற நூல்கள் எண்ணற்ற கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு கடல் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் எலக்ட்ரானிக் சாதனங்கள் அதையும் கரைத்து குடித்து, மக்களுக்கு சிறந்த வகையில் உதவுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot