என்னமா யோசிக்கிறாங்க: வாட்ச் மூலம் "பிட்" அடித்த மாணவன்- எப்படி மாட்டிக்கொண்டான் தெரியுமா?

|

பொதுவாக மாணவர்களுக்கு பரீட்சை என்றால் ஒரு சின்ன பீதி இருக்கத்தான் செய்யும். தேர்வு எழுதும் மாணவர்களை ஐந்து வகையாக ஒரு குத்துமதிப்பாக பிரித்து பார்க்கலாம். இந்த வகைகளை கடந்தே நாமும் கல்லூரி வாழ்க்கை பயணத்திருப்போம்.

 ப்ளீஸ் டோன்ட் டிஸ்டர்ப் மீ:

ப்ளீஸ் டோன்ட் டிஸ்டர்ப் மீ:

முதல் வகை: அனைத்தும் படித்த மாணவர்களுக்கு எல்லா கேள்விகளுக்கும் எழுத நேரம் கிடைக்குமா என்ற பீதியில் இருப்பார்கள். இவர்கள் தேர்வு அறையில் எதையும் பொருட்படுத்த மாட்டார்கள். அருகில் இருப்பவர் பேனா, பென்சில் கேட்டால் கூட கண்டுகொள்ளாமல் தேர்வில் மட்டும் கவனம் செலுத்துவார்கள்.

கடவுளே நான் படித்த கேள்வி கேட்கனும்

கடவுளே நான் படித்த கேள்வி கேட்கனும்

இரண்டாவது வகை, குறிப்பிட்ட முக்கியமான கேள்விகளை மட்டும் படித்து வைத்துக் கொண்டு. நாம் படித்த கேள்விகள் தேர்வில் வருமா வராதா என சிந்தனையில் இருப்பார்கள். கேள்விகள் வந்தால் அவ்வளது தான் இவர்கள் தேர்வு அறையில் தன்னை பெருமதிப்போடு நினைத்துக் கொண்டு பெருமூச்சுவிட்டு தேர்வை எழுதுவார்கள்.

நாங்க ரொம்ப பிசி: அடுத்த 4 மாதத்தில் 13 திட்டங்கள்- அயராது உழைக்கும் இஸ்ரோநாங்க ரொம்ப பிசி: அடுத்த 4 மாதத்தில் 13 திட்டங்கள்- அயராது உழைக்கும் இஸ்ரோ

அய்யயோ 3 மணி நேரம் என்ன பண்றது தெரியலயே

அய்யயோ 3 மணி நேரம் என்ன பண்றது தெரியலயே

மூன்றாவது வகை மாணவர்கள், எந்த கேள்வியும் கேட்டால் நமக்கு என்னவென்று , காலரை தூக்கிக் கொண்டு தேர்வு அறைக்குள் போவார்கள். ஏனென்றால் இவர்கள் தேர்வுக்கு முறையாக படித்திருக்க மாட்டார்கள். அடுத்த செமஸ்டரில் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து தேர்வு அறையில் அந்த மூன்று மணிநேரத்தை கடத்துவதற்கு படாதபாடு படுவார்கள்.

ஆயுதம் வைத்துள்ளோம் தேர்வுக்கு துணிந்து செல்வோம்

ஆயுதம் வைத்துள்ளோம் தேர்வுக்கு துணிந்து செல்வோம்

நான்காவது வகை மாணவர்கள், தேர்வு ஆரம்பிக்கும் சில விநாடிகளுக்கு முன்னாள் அனைவரது கவனமும் புத்தகத்தில் இருக்கும் ஆனால் நான்காவது வகை மாணவர்களின் கவனம் மட்டும் தேர்வு அறை மீது இருக்கும். அதற்கு காரணம் நம் இருக்கை எந்த புறத்தில் உள்ளது, கண்காணிப்பாளராக எந்த ஆசிரியர் வருகிறார் என்பதில் முழு கவனமும் இருக்கும். காரணம் இவர்கள் அனைத்து கவனமும் பிட் அடிப்பதில் இருக்கும். அனைத்து கேள்விகளுக்கும் பிட் வைத்திருப்பார்கள். கண்காணிப்பாளர் பார்ப்பதற்கு சாதுவாக இருந்தால் எளிதாக ஏமாற்றி தேர்வை பிட் அடித்துவிடலாம் என நினைப்பார்கள்.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இதிலும் ஐந்தாவது வகை மாணவர்கள் என சிலர் இருக்கின்றனர். அவர்கள் பிட்டும் எடுத்து வரமாட்டார்கள். ஆனால் பிட் அடிக்கும் மாணவனிடம் இருந்து அவரது பிட்டை வாங்குவதிலும், யார் யார் எவ்வளவு நேரம் எழுதுகிறார்கள் என்பதில் மட்டும் அவர்களது முழு கவனம் இருக்கும்.

பிட்-ல் அடுத்தக் கட்டத்துக்கு முன்னேறிய மாணவன்

பிட்-ல் அடுத்தக் கட்டத்துக்கு முன்னேறிய மாணவன்

இந்த நான்காவது வகை மாணவரை சேர்ந்த ஒருவர் குறித்து தான் தற்போது பார்க்க இருக்கிறோம். ஆம், பிட் பொதுவாக சிறிய பேப்பரில் எழுதி வைப்பது, மைக்ரோ ஜெராக்ஸ், புத்தக பேப்பரை கிழித்து வைப்பது, கஜினி சூர்யா போன்ற கை, கால் எல்லாம் எழுதிக் கொள்வது போன்று பிட் அடித்து பார்த்திருப்போம் அல்லது கேள்விபட்டிருப்போம். இவ்வளவு ஏன் புத்தகத்தையே பரிட்சை அறைக்கு எடுத்து சென்று கூட பார்த்திருப்போம் ஆனால் இங்கு ஒரு மாணவன், வாட்சில் புத்தகத்தை ஹார்ட் காப்பியாக சேவ் செய்து வைத்து பிட் அடித்துள்ளான்.

இதுதான் நம்ம இதுதான் நம்ம "சர்கார்"- இந்திய அரசின் அத்தியாவசிய 'ஆப்'கள்: உடனே பதிவிறக்கம் செய்யவும்

ஸ்மார்ட் வாட்சில் பிட் வைத்த மாணவன்

ஸ்மார்ட் வாட்சில் பிட் வைத்த மாணவன்

பெங்களூருவில் உள்ள மணிபால் என்ற இடத்தில் அமைந்திருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் இந்த சம்பம்வ அரங்கேறியுள்ளது. இந்த கல்லூரியில் நடந்த தேர்வில் ஸ்மார்ட் வாட்சில் மெமரி கார்டு பொறுத்தி அதில் முதலில் முக்கிய ஃபார்முலா, முக்கியமான கேள்விக்கான பதில்கள் மற்றும் சில புத்தக பக்கங்கள் சேமித்து வைத்துள்ளான்.

லாவகமாக பிடித்த கண்காணிப்பாளர்

லாவகமாக பிடித்த கண்காணிப்பாளர்

இவ்வளவு யோசித்த மாணவன், தேர்வறையில் சிசிடிவி கேமராவை பெரிதாக பொருட்படுத்தாமல் விட்டுவிட்டான். தேர்வில் கண்காணிப்பாளரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு லாவகமாக பிட் அடிக்கத் தொடங்கியுள்ளான். இதை கையும் களவுமாக படித்த கண்காணிப்பாளர் வாட்சை பார்த்து அதிர்ச்சி அடைந்துவிட்டார்.

ஸ்மார்ட் வாட்சின் சிறப்பம்சங்கள்

ஸ்மார்ட் வாட்சின் சிறப்பம்சங்கள்

இதையடுத்து தேர்வு அறையில் மாணவன் வெளியேற்றப்பட்டான். மாணவன் குறித்த விவரம் தற்போது வரை வெளிவரவில்லை. இருப்பினும் அந்த ஸ்மார்ட் வாட்சின் செயல்பாடு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் இன்னும் சுவாரஸ்யம் என்னவென்றால், வாட்சில் டச் டிஸ்பிளே உள்ளது, கேள்விக்கான விடையை எடுத்தவுடன் அதை ஜூம் செய்து பார்த்துக் கொள்ளலாம். கல்லூரி சார்பில் அந்த மாணவனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Pic courtesy: Social media

Source: daijiworld.com

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Engineering student using smartwatch to copy during exam gets caught

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X