ககன்யான் திட்டத்தில் இன்ஜின் சோதனை வெற்றி.! இஸ்ரோ அறிவிப்பு.!
அண்மையில் வெளிவந்த தகவலின்படி, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில், விண்கலத்தின் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இதுசார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது இந்த ககன்யான் திட்டமானது 2022-ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரோ
நிறுவனம் ஏற்கனவே இதற்கான விண்வெளி வீரர்களை தேர்ந்தெடுத்துள்ள நிலையில், அவர்களுக்கு ரஷ்யாவின் ககரின்
விண்வெளி பயிற்சி மையத்தில் பயிற்சி கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விண்ணில் செலுத்தப்பட இருக்கும் GSLV MK III விண்கலத்தின் திரவ இஞ்சின் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கான வெப்ப பரிசோதனை நடைபெற்றது. சுமார் 240 வினாடிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்குரிய
கவுன்ட்டவுன் தொடங்கி பரிசோதிக்கப்பட்ட நிலையில், வெப்ப பரிசோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் பாதுகாப்பு உணவு ஆராய்ச்சி ஆய்வகம் விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு தேவையான இந்திய உணவுகள் பட்டியலை தயாரிக்க ஏறக்குறைய இரண்டுகள் ஆய்வு செய்தது. பின்பு இந்த பட்டியலில் மூங் தால் ஹல்வா, சூஜி ஹல்வா, உலர்ந்த பாதாம் ஆகியவை வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக அப்பல்லோ பயணத்தின்போது நாசா அமைப்பு தனது விண்வெளி வீரர்களுக்கு அன்னாசி கேக், பீச், சாக்லெட் புட்டு,பிரவுனிகள் ஆகியவை வழங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக விண்வெளி வீரர்கள் ஒருநாளைக்கு மூன்றுவேளை சாப்பிடுவார்கள் எனவும் உணவில் 2500 கலோரிகள் வரை சேர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு அமெரிக்க விண்வெளி வீரர்கள் தங்கள் சுவைக்கு ஏற்ற உணவை எடுத்து செல்கின்றனர் எனவும் அதேபோல் இந்தியர்கள் வீட்டு உணவை போல சுவைக்க எடுத்து செல்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டம் இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான்
கூறவேண்டும்.


Click it and Unblock the Notifications