இது போனா இல்லை பீரங்கியா? பட்ஜெட் விலை.. 28,000mAh பேட்டரி.. 94 நாட்கள் சார்ஜ்.. என்ன மாடல்?
பட்ஜெட் விலையில் 28,000mAh பேட்டரியுடன் (Battery) 2252 மணிநேரம் ஸ்டாண்ட்பை நேரம், 122 மணிநேர டாக்டைம் நேரத்தை வழங்கும் மிகவும் உறுதியான ஆண்ட்ராய்டு 14 இல் இயங்கும் ஸ்மார்ட்போனை எனர்ஜிசர் (Energizer) பிராண்டு இப்போது அறிமுகம் செய்துள்ளது.
Energizer Hard Case P28K: இந்த ஸ்மார்ட்போன் சாதனம் எனர்ஜிசர் ஹார்டு கேஸ் P28K (Energizer Hard Case P28K) என்ற பெயருடன் வெளிவந்துள்ளது. எனர்ஜிசர் பிராண்டிற்கான உரிமத்தை வைத்திருக்கும் அவெனிர் டெலிகாம், இந்த புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு பவர் பேங்க் போன்றது. பெரிய 28,000mAh பேட்டரியுடன் ஒரு பிரமாண்டமான படைப்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பீரங்கி போல இருக்கும் போன்: பொதுவாக நாம் இப்போது 5000 அல்லது 6000mAh அளவு கொண்ட பேட்டரிகளை தான் போன்களில் பார்க்கிறோம். வழக்கத்திற்கு மாறாக பெரிய பேட்டரியை இந்த எனர்ஜிசர் ஹார்ட் கேஸ் P28K போன் கொண்டுள்ளது. இது பார்ப்பதற்கு ஒரு பெரிய செங்கல் போல தோற்றமளிக்கிறது. இதன் உறுதி ஒரு பீரங்கி போல பலப்படுத்தப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது.
விலை என்ன? இதற்கு முன்பு, நிறுவனம் 18,000mAh பேட்டரி கொண்ட போனை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. எனர்ஜிசர் ஹார்ட் கேஸ் P28K ஸ்மார்ட்போனின் விலை EUR 250 ஆகும். இந்திய மதிப்பின் படி, இது சுமார் ரூ. 22,000 ஆகும். இந்த ஆண்டு அக்டோபரில் இந்த போன் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
28,000mAh பேட்டரி போன்: எனர்ஜிசர் ஹார்ட் கேஸ் P28K (Energizer Hard Case P28K) ஆனது பெரிய 28,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த பெரிய 28,000mAh பேட்டரி 2252 மணிநேரம் வரை ஸ்டாண்ட்பை நேரம் அல்லது 122 மணிநேர டாக்டைம் நேரம் வரை நீடிக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. இது முறையே தோராயமாக 94 நாட்கள் மற்றும் 5 நாட்கள் வரை நீடிக்கும் சார்ஜ்ஜை வழங்குகிறது.

பிராசஸர்: இந்த சாதனம் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இது முழுவதுமாக சார்ஜ் செய்ய 1 மணிநேரம் 30 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. எனர்ஜிசர் ஹார்ட் கேஸ் P28K சிறப்பம்சங்கள் பற்றி பேசுகையில், இது 570 கிராம் எடையும் 27.8 மிமீ அளவுடன் வருகிறது. இது மீடியாடெக் MT6789 (Mediathek MT6789) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
கேமரா: இந்த போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 6.78" இன்ச் ஐபிஎஸ் எஃப்எச்டி (IPS FHD) டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த போன் 64MP பிரைமரி கேமராவுடன், 20MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP பன்ச் ஹோல் சென்சார் உடன் வருகிறது. முன்பக்கத்தில் இது 16MP செல்பி ஷூட்டரை கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 14: இது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் இயங்குதளத்துடன் இயங்குகிறது. Energizer Hard Case P28K ஆனது வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் IP69 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. எனர்ஜிசர் மிகப்பெரிய பேட்டரி கொண்ட போனை வெளியிடுவது இது முதல் முறை அல்ல. 2019 ஆம் ஆண்டில், இந்த பிராண்ட் 18,000mAh பேட்டரியுடன் ஒரு மாடலை அறிமுகப்படுத்தியது என்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications