20 ஆண்டு பெருமை., ஒரு சகாப்தத்தின் முடிவு "உங்களுக்கு இறுதி வாய்ப்பு"- ஆப்பிள் ஐபாட்கள் உற்பத்தி நிறுத்தம்!

|

பெரும்பாலானோர்களிடம் பொழுதுபோக்கு என்ன என்று கேட்குபட்சம்த்தில் அவர்களின் பதில் இசை மற்றும் பாடல் கேட்பது என்பது தான். இந்த தேவையை பூர்த்தி செய்ய 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது ஆப்பிள் ஐபாட். பயணத்தின் போது இசையை கேட்க விரும்புபவர்களுக்கான அடையாளமாகவே இது இருந்தது. தற்போது ஆப்பிள் ஐபாட் முடிவுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆப்பிள் ஸ்டோர்களில் இருப்பு இருக்கும் வரை இந்த சாதனங்களை நீங்கள் வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இசை துறையில் புரட்சி

இசை துறையில் புரட்சி

ஆப்பிள் 20 ஆண்டுகளுக்கு முன்பு 2001 இல் ஐபாட் அறிமுகப்படுத்தியது. இந்த சாதனம் இசை துறையில் புரட்சியை ஏற்படுத்தியது. ஒரே சாதனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை உருவாக்கும் தொழில்நுட்பத்துடன் வந்த இந்த சாதனம் பலரையும் பிரமிக்க வைக்கும் வகையில் இருந்தது. ஐபாட் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து 400 மில்லியன் யூனிட்களுக்கு மேல் விற்பனையாகி இருக்கிறது. மொபைல் போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் என பல்வேறு வகை இசை வெளிபாட்டால் ஐபாட்கள் பயன்பாடு தேவையற்றதாகி விட்டது. ஆப்பிளின் ஐபாட் சகாப்தம் முடிவுக்கு வருகிறது.

இருப்பு இருக்கும் வரை வாங்கலாம்

இருப்பு இருக்கும் வரை வாங்கலாம்

ஐபாட்கள் ஆப்பிள் ஸ்டோர்களில் இருப்பு இருக்கும் வரை வாங்கலாம், இனி ஐபாட்கள் வருகை சந்தையில் இருக்காது. ஆப்பிள் தனது போர்ட்டபிள் மியூசிக் ப்ளேயர் குடும்பத்தில் புதிய சாதனங்களை உருவாக்கப் போவதில்லை என அறிவித்துள்ளது. தற்போது ஐபாட் டச் சாதனங்கள் மட்டுமே சந்தையில் கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள இதயப்பூர்வமான குறிப்பில், ஆப்பிள் மியூசிக் வழங்கும் நிறுவனத்தின் பிற தயாரிப்புகள் மூலம் ஐபாட்டின் நினைவுகள் இருக்கும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இசை என்பது எப்போதும் வாழ்வின் ஒரு அங்கம்

இசை என்பது எப்போதும் வாழ்வின் ஒரு அங்கம்

இதுகுறித்து ஆப்பிளின் சந்தைப்படுத்தல் மூத்த துணைத் தலைவர் கிரெக் ஜோஸ்வியா கூறுகையில், ஆப்பிளில் இசை என்பது எப்போதும் வாழ்வின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. மில்லியன் கணக்கான பயனர்கள் மூலம் ஐபாட் இசைத் துறையில் செல்வாக்கு செலுத்தியது. அதோடு ஐபாட் இசையை கண்டறிதல், கேட்பது மற்றும் பகிர்வது போன்ற அதன் பல முறைகளை மறுவரை செய்திருக்கிறது என குறிப்பிட்டார்.

முதல் சாதனம் 2001-ல் அறிமுகம்

முதல் சாதனம் 2001-ல் அறிமுகம்

ஐபாட் வரிசையில் முதல் சாதனம் 2001-ல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இவை அந்த காலத்தில் பெரும் வரவேற்பு பெற்ற சிறந்த விஷயமாக இருந்திருக்கிறது. ஐபாட் சாதனங்களின் தனித்துவமான ஸ்க்ரோல் வீல் மற்றும் கச்சிதமான அளவானது ஐபாட்களில் மிகப்பெரிய வெற்றியாக மாற்றியது. தொடர்ந்து பயனர்கள் ஐபாட்கள் உடனான தங்கள் இனிய நினைவுகளையும் அதன் சிறந்த பயன்பாட்டையும் சமூகவலைளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இரண்டாம் தலைமுறை சாதனமாக ஐபாட் நானோ

இரண்டாம் தலைமுறை சாதனமாக ஐபாட் நானோ

அசல் ஐபாட் ஆனது அக்டோபர் 23, 2001 அன்று அறிமுகம் செய்யப்பட்டது. இது 1000 பாடல்கள் மற்றும் 10 மணி நேர பேட்டரி ஆயுள் உடன் வந்த முதல் எம்பி3 ப்ளேயர் ஆகும். தொடர்ந்து பிப்ரவரி 20, 2004 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபாட் மினி சாதனம் பயனர்கள் விரும்பும் அனைத்தையும் சிறந்த வடிவமைப்போடு கொண்டு வந்தது. செப்டம்பர் 25, 2006-ல் அறிமுகம் செய்யப்பட்ட ஐபாட் நானோ இரண்டாம் தலைமுறை சாதனமாக இருந்தது. இது மெல்லிய வடிவமைப்பு, பிரகாசமான வண்ண காட்சி, ஆறு ஸ்டைலிஸ் வண்ணங்கள் மற்றும் 24 மணி நேர பேட்டரி ஆயுள் உடன் சந்தைக்கு வந்தது. இது 2000 பாடல்கள் சேமிப்பக வசதியோடு வந்தது.

3.5 இன்ச் அகலத்திரை காட்சி

3.5 இன்ச் அகலத்திரை காட்சி

தொடர்ந்து ஐபாட் டச், முதன்முறையாக செப்டம்பர் 5 2007 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இது புரட்சிகரமான மல்டி டச் இடைமுகத்தைக் கொண்டிருக்கிறது. இந்த ஐபோடில் 3.5 இன்ச் அகலத்திரை காட்சியுடன் வந்தது. அதேபோல் ஐபாட் நானோ ஆனது 7-வது தலைமுறை ஆதரவோடு செப்டம்பர் 12 2012 அன்று அறிமுகம் செய்யப்பட்டது. இது இன்றுவரையிலும் மெல்லிய ஐபாட்களாக இருக்கிறது, இது 5.4 மிமீ மற்றும் 2.5 இன்ச் மல்டி டச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது.

நேர்த்தியமான வடிவமைப்பு

நேர்த்தியமான வடிவமைப்பு

ஜூலை 12 2015-ல் அறிமுகம் செய்யப்பட்ட ஐபாட் ஷஃபிகள் 4-வது தலைமுறை ஆதரவோடு வருகிறது. இது 15 மணிநேர பேட்டரி ஆயுள் கொண்ட நேர்த்தியமான வடிவமைப்பையும் நூற்றுக்கணக்கான பாடல்களை சேமிக்க 2ஜிபி சேமிப்பகத்தையும், பாடலின் தலைப்பு, ப்ளேலிஸ்ட் பெயர்களை கேட்க வாய்ஸ்ஓவர் பட்டனையும் வழங்குகிறது. மே 28 2019 அன்று அறிமுகம் செய்யப்ப்டட ஐபாட் டச் ஆனது 7-வது தலைமுறை பயன்பாட்டு ஆதரவோடு வருகிறது. இது ஏ10 ஃப்யூஷன் சிப் ஆதரவைும் 256 ஜிபி உள்சேமிப்பகத்துடன் கூடிய அதிவேக ஆக்மென்டட் ரியாலிட்டி அனுபவங்களையும் கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
End of Era: Apple discontinues its Ipod Models- Last Remaining Ipods in Apple Store

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X