75 கோடி போன்கள் பாதிக்கப்படுமா!!!

Posted By:

ஜெர்மனியை சேர்ந்த மொபைல் செக்கியுரிட்டி எக்ஸ்பெர்ட்டான கேர்ஸ்டென் என்பவர் அண்மையில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். சிம் கார்டில் உள்ள என்கிரிப்ஷன் டெக்னாலஜியில் சில குறைபாடுகளை அவர் கண்டுபிடித்துள்ளார்.

இந்த குறைபாடுகளின் மூலம் சைபர் கிரிமினில்களால் எளிதாக சிம்கார்டை வைத்து போன்களை ஹாக் செய்ய முடியுமாம். உங்கள் போனை அவர்களின் கட்டுபாட்டில் கொண்டு செல்லவும் முடியுமாம் .

சிம்கார்டின் என்கிரிப்ஷன் குறைபாடுகளின் சிம்கார்டில் உள்ள 56 டிஜிட் சீக்குவன்ஸ் நம்பரை ஹாக் செய்து அதன் மூலம் போனை தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டுவர முடியும்.

டெக்ஸ்ட் மெசேஜ் மூலம் போனுக்கு வைரஸ் அனுப்பலாம். நீங்கள் உங்கள் போனில் மொபைல் பேமென்ட் சிஸ்டம் வைத்திருந்தால் அதையும் ஹாக்கர்களால் பயன்படுத்த முடியும்.

Click Here For New Smartphones Gallery

75 கோடி போன்கள் பாதிக்கப்படுமா!!!

Click Here For List of New Smartphones And Tablets Price & Specs

உங்கள் போனில் ஹாக்கர்கள் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்து போனின் உதவி இல்லாமலே பயன்படுத்த முடியும். போனை வைத்தே உங்களை கண்கானிக்கலாம்.

56 டிஜிட் சீக்குவன்ஸ் நம்பரை மூலம் உங்கள் போனை இரண்டு நிமிடத்தில் சாதாரண கம்பியூட்டரை வைத்தே ஹாக் செய்துவிடலாம். உங்களது மெசேஜ்களை ஹாக்கர்கள் படிக்கலாம். உங்கள் போனில் உள்ள டேட்டாவை அவர்கள் எடுக்க முடியும்.

750 மில்லியன் அதாவது 75 கோடி போன்கள் இதனால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாம். இந்த குறைபாடு 1970ல் உருவாக்கபட்ட(D.E.S) என்கிரிப்ஷன் டெக்னாலஜியில் மூலம் தயாரிக்கபடும் சிம்களில் தான் உள்ளது.

இப்பொழுது தயாரிக்கபடும் சிம்கார்டுகள் டிரிபிள் (D.E.S) என்கிரிப்ஷன் டெக்னாலஜியை கொண்டுள்ளன. பழைய சிம்கார்டில் தான் இந்த குறைபாடு அதிகம் உள்ளது. கேர்ஸ்டென் இதுவரை 1000 சிம்கார்டுகளை வைத்து சோதனை செய்த பிறகே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்