ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணி - ஊழியர்கள் ரியாக்ஷன்..?
ஃபேஸ்புக் நல்ல நிறுவனமா, கெட்ட நிறுவனமா?, உலகின் பிரபல சமூக வலைதளமாக விளங்கும் ஃபேஸ்புக் நிறுவனம் குறித்து பல செய்திகள் காலப்போக்கில் வெளியாகி வந்தாலும் அவற்றின் உண்மை தன்மை தொடர்ந்து கேள்விகுறியாகவே இருக்கின்றது.
உலகளவில் பணியாற்ற சிறந்த நிறுவனமாக கருதப்படும் ஃபேஸ்புக்கில் பணியாற்றுவது பலருக்கும் கனவாக இருக்கும் நிலையில், உண்மையில் ஃபேஸ்புக் நறுவனம் குறித்து அதன் ஊழியர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

ஃபேஸ்புக் பொறியாளர்
ஃபேஸ்புக் பொறியாளர்கள் வருடத்தின் ஆறு வாரங்களுக்கு 'ஆன் கால் ட்யூட்டி' செய்ய வேண்டும், இந்த காலத்தில் அலுவலகத்துடன் எந்நேரமும் இணைப்பில் இருக்க வேண்டும் என்கிறார் ஃபேஸ்புக் பொறியாளர் கெய்த் ஆடம்ஸ்

இம்பாக்ட்
ஃபேஸ்புக் நிறுவனத்தின் 'மேக் ஆன் இம்பாக்ட்' மந்திரத்தின் மூலம் ஒவ்வொரு ஊழியரும் என்ன சாதித்தார்கள் என்பதை மட்டும் தான் கணக்கில் எடுத்து கொள்கின்றது.

சுவர்
பெரும்பாலான நிறுவனங்களில் ஊழியர்களை தனிமைப்படுத்தும் சுவர்கள் வைக்கப்பட்டிருக்கும், ஆனால் ஃபேஸ்புக் நிறுனத்தில் நிலைமை அப்படி இல்லை.

நிறுவனம்
உலகின் மிகப்பெரிய நிறுவனமாக இருந்தாலும் என்றும் அந்நிறுவனம் அவ்வாறு நினைத்தில்லை என்கின்றார் ஃபேஸ்புக் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்.

ஃபேஸ்புக்
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் மற்றும் ஷெரில் சான்ட்பெர்க் அதிக நேரத்தை வேலை இல்லாத மற்ற நடவடிக்கைகள் குறித்த ஆலோசனையில் மட்டுமே செலவிடுவதாக ஃபேஸ்புக் ஊழியர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

முடிவு
பயிற்சிக்கு வரும் இளம் பொறியாள்ரகளின் கருத்துக்கள் பரிசீலனை செய்யப்பட்டு அமல்ப்படுத்தப்படும் வழக்கம் ஃபேஸ்புக் நிறுவனத்தில் இருப்பதாக பிலிப் சு எனும் ஊழியர் தனது வலை பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

மின்னஞ்சல்
ஃபேஸ்புக் பணிகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 1600 மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதாக முன்னாள் ஊழியர் தாமஸ் மூர் தெரிவித்திருக்கிறார்.

விடுமுறை
விடுமுறையின் போதும் வேலை குறித்த தகவல்கள் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும் என்று சுனன்யா சென் எனும் ஊழியர் குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications