Home
News

தொழிலாளர்களுக்கான பி.எஃப் வட்டி உயர்கிறது: மகிழ்ச்சியில் தொழிலாளர்கள்.!

இப்போது வெளிவந்த தகவலின் அடிப்படையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வகிதம் 8புள்ளி 55சதவீதத்தில் இருந்து 8புள்ளி 65சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர்

தொழிலாளர் நலத்துறை அமைச்சர்

மேலும் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ குமார்கங்வார், 2019-2019நிதியாண்டில் 6கோடி தொழிலாளர்களின் பெயரில் முதலீடு செய்யப்பட்டிருந்த வருங்கால வைப்புநிதிக்கான வட்டி விகிதம் 8புள்ளி 65சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். பின்பு பண்டிகைகாலத்தில் இது தொழிலாளர்களுக்கு நல்ல செய்தியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

 8.55சதிவீதமாக இருந்த

குறிப்பாக 2017-2018 நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.55சதிவீதமாக இருந்தநிலையில் அதனை உயர்த்துவது தொடர்பான திட்ட வரைவு மத்திய நிதியமைச்சகத்துக்கு அணுப்பப்பட்டிருந்தது

சென்ட்ரல் போர்ட் ஆப் ட்ரஸ்டீஸ்

சென்ட்ரல் போர்ட் ஆப் ட்ரஸ்டீஸ்

பின்பு வட்டி விகிதத்தை 8புள்ளி 65சதவீதமாக உயர்த்துவதற்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி தொடர்பாக முடிவெடுக்கும் அமைப்பான அறங்காவலர்கள் மத்திய (சென்ட்ரல் போர்ட் ஆப் ட்ரஸ்டீஸ்)வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 பி.எஃப் கணக்கில்

நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவராக இருந்தால் கண்டிப்பாக உங்கள் பி.எஃப் கணக்கில் உங்களுக்கான தொகை வரவுவைக்கப்பட்டிருக்கும் என்பதை நீங்கள் தெரிந்து இருப்பீர்கள். இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் உங்களது சம்பளத்தில் இருந்து ஒரு தொகையை பிடித்தம் செய்து உங்களுடைய ஈபிஎப் கணக்கில் டெபாசிட் செய்து வரும்.

நீங்கள் தெரிந்து கொள்வது எப்படி?

நீங்கள் தெரிந்து கொள்வது எப்படி?

உதாரணமாக உங்கள் சம்பளத்தில் இருந்து ரூ.5000 பி.எஃப் கணக்கிற்காக பிடிக்கப்படும் என்றால் உங்கள் நிறுவனமும் அதே தொகையை பிஎப் கணக்கில் செலுத்தும். தற்போது உங்கள் பிஎப் கணக்கில் உள்ள தொகை எவ்வளவு என்பதை நீங்கள் தெரிந்து கொள்வது எப்படி? என்பதைத்தான் தற்போது பார்க்க போகின்றோம். பிஎப் கணக்கில் உள்ள தொகை எவ்வளவு உள்ளது என்பதை பலர் தெரிந்து வைப்பதில்லை. அந்த தவறை நீங்கள் செய்யாமல் கீழே உள்ள வழிகளின்படி தெரிந்து கொள்ளுங்கள்

யூஏஎன் மூலம் ஆன்லைனில் பி.எஃப் கணக்கை தெரிந்து கொள்ளும் முறை

யூஏஎன் மூலம் ஆன்லைனில் பி.எஃப் கணக்கை தெரிந்து கொள்ளும் முறை

1. முதலில் யுனிவர்சல் ஆக்டிவேட் எண் என்ற யூஏஎன் எண்ணை முதலில் ஆக்டிவேட் செய்ய வேண்டும். இந்த எண் ஆக்டிவேட் ஆக சுமார் 6 மணி நேரம் ஆகும்

2. ஒருமுறை உங்கள் யூஏஎன் ஆக்டிவேட் செய்துவிட்டால் அதன் மூலம் உங்களுக்கு அதில் நுழைய அனுமதி அளிக்கப்படும்

3. அதன் பின் நீங்கள் ஈபிஎஃப்ஓ இணையதளம் சென்று, யூஏஎன் எண் மூலம் லாகின் செய்து அதில் உள்ள விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்

4. ஒருமுறை மேற்கண்ட வழிகளில் நீங்கள் லாகின் செய்துவிட்டால் அதன் பின் உங்களுடைய பிஎப் அக்கவுண்டில் உள்ள அனைத்து விபரங்களையும் நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் அதில் உள்ள ஆப்சன்களில் ஒன்றான 'வியூ பாஸ்புக்' என்பதை க்ளிக் செய்தால் உங்களுடைய தற்போதைய இருப்பு எவ்வளவு என்பது உள்பட அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்

 எஸ்.எம்.எஸ் மூலம் பி.எஃப் கணக்கின் இருப்பை தெரிந்து கொள்ளும் முறை

எஸ்.எம்.எஸ் மூலம் பி.எஃப் கணக்கின் இருப்பை தெரிந்து கொள்ளும் முறை

மொபைலில் இருந்து எஸ்.எம்.எஸ் அனுப்பியும் உங்கள் பி.எஃப் அக்கவுண்டின் இருப்பதை தெரிந்து கொள்ளலாம். இதிலும் முந்தைய முறை போல் முதலில் யூஏஎன் எண்ணை ஆக்டிவேட் செய்ய வேண்டும். அதன் பின் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து எஸ்.எம்.எஸ் செய்ய வேண்டும். EPFOHO UAN என்று டைப் செய்து அதனை 7738299899 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் ஒருசில நிமிடங்களில் உங்களது பிஎப் இருப்பு குறித்த விபரங்கள் பதில் எஸ்.எம்.எஸ் ஆக உங்களுக்கு வரும்.

  மிஸ்டு கால் மூலம் பி.எஃப் இருப்பை தெரிந்து கொள்ளுதல்

மிஸ்டு கால் மூலம் பி.எஃப் இருப்பை தெரிந்து கொள்ளுதல்

மேற்கண்ட இரண்டு வழிமுறைகளில் மட்டுமின்றி ஒரே ஒரு மிஸ்ட் கால் கொடுப்பதன் மூலம் உங்கள் பிஎப் கணக்கின் இருப்பை தெரிந்து கொள்ளலாம். வழக்கம் போல் யூஏஎன் ஆக்டிவேட் செய்து அதன் பின் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் மூலம் கேஒய்சி விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பின் +911122901406 என்ற எண்ணிற்கு உங்களது ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைலில் இருந்து மிஸ்ட் கால் கொடுக்க வேண்டும். அதன் பின் உங்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் உங்கள் பிஎப் கணக்கின் முழு விபரங்கள் தெரிய வரும்.

Best Mobiles in India

English summary
Employees Provident Fund Interest Rate 8.65% Increased: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X