கொரோனா வார்டில் டிக்டாக்: தொட்டாலே பரவும் இதுல ஒன்னா டிக்டாக்., என்ன தண்டனை கிடைத்தது தெரியுமா?

|

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவருடன் ஒன்று சேர்ந்து டிக்டாக் எடுத்த மூன்று பேரை டிஸ்மிஸ் செய்ததோடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வைரஸ்-க்கு கோவிட் 19 என பெயர்

வைரஸ்-க்கு கோவிட் 19 என பெயர்

சீனா வுகான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் விலங்குகளிடம் இருந்து பரவியதாக தெரிவிக்கப்படும் வைரஸ்-க்கு கோவிட் 19 என பெயரிடப்பட்டது. இந்த வைரஸ் ஆனது சீனாவில் அதிவேகமாக பரவிய நிலையில் உலக நாடுகள் எச்சரிக்கை விடுக்கத் தொடங்கியது.

வைரஸுக்கு தற்போது வரை மருந்து இல்லை

வைரஸுக்கு தற்போது வரை மருந்து இல்லை

இதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. இந்த வைரஸுக்கு தற்போது வரை மருந்து இல்லாத காரணத்தால் உயிரிழப்பை தடுக்க முடியாமல் உலக நாடுகளை அச்சுருத்தி வருகிறது. அதேபோல் உலகின் பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டு மக்களை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தி வருகிறது.

அடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு!அடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு!

24 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்

24 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்

உலகம் முழுவதும் 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சத்து 31 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 24 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

1 லட்சத்து 24 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர்

1 லட்சத்து 24 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர்

அதேபோல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 24 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவை விட இத்தாலியில் கொரோனாவால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா உருவாகிய சீனா கிட்டத்தட்ட அதன் வீரியத்தை கட்டுப்படுத்தி உள்ள நிலையில், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தினமும் புதிய பாதிப்புகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து கொண்டே வருகிறது.

21 நாட்களுக்கு ஊரடங்கு

21 நாட்களுக்கு ஊரடங்கு

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார். இதனால் பொதுமக்களும் வீட்டிலேயே தேங்கி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், ஊடகத்தினர் ஆகியோர் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர். அதேபோல் கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதித்த 25 வயது பெண்

கொரோனா வைரஸ் பாதித்த 25 வயது பெண்

கொரோனா வைரஸ் பாதித்த 25 வயது பெண் அரியலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அந்த பெண்ணின் போனிலிருந்து டிக்டாக்

அந்த பெண்ணின் போனிலிருந்து டிக்டாக்

இந்த நிலையில் அந்த பெண்ணின் போனிலிருந்து டிக்டாக் செய்து பதிவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மருத்துவமனையில் பணியாற்றிய 2 பெண்களும் அவருடைய செல்போனை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்

கொரோனா தொற்று உள்ளவரின் மொபைல் போனை பயன்படுத்திய இரண்டு பெண்கள் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் வேறொரு பெண்ணும் அவரிடம் இருந்து செல்போனை வாங்கி பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

தமிழர் தமிழர் தான்., கொரோனாவை ஒழிக்க ரூ.6000 கோடி நிதியுதவி: தாராள மனசு காட்டிய சுந்தர்பிச்சை!தமிழர் தமிழர் தான்., கொரோனாவை ஒழிக்க ரூ.6000 கோடி நிதியுதவி: தாராள மனசு காட்டிய சுந்தர்பிச்சை!

மூன்று பேரையும் பணி நீக்கம்

மூன்று பேரையும் பணி நீக்கம்

இதையடுத்து செல்போன் உபயோகித்த மூன்று பேரையும் பணி நீக்கம் செய்துள்ளதாகவும், கொரோனா வைரஸ் பாதித்த பெண் உபயோகித்த செல்போனை இவர்களும் உபயோகித்ததன் காரணமாக இந்த மூன்று பேரையும் கொரோனா வார்டில் தனிமைப்படுத்தி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

file images

Best Mobiles in India

English summary
Employee dismissal of taken tiktok videos in corona ward

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X