கண்ணீருக்கு நாங்க பொறுப்பில்ல:என் சாமி.,விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் இறந்த மகளை சந்தித்த தாய்- Video

|

மெய்நிகர் நுட்பம் என்று தமிழில் அழைக்கப்படுவதுதான் விர்ச்சுவல் ரியாலிட்டி. தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாக விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை நிச்சயம் சொல்லலாம்.

அற்புத வேலையை செய்யும் விரச்சுவல் ரியாலிட்டி

அற்புத வேலையை செய்யும் விரச்சுவல் ரியாலிட்டி

மனித கற்பனையை கம்ப்யூட்டரில் புகுத்தி, தலையில் அணிந்திருக்கக்கூடிய ஹெட்செட் மூலம், அவற்றை அனுபவிக்கச் செய்யும் அற்புத வேலையை விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்கள் செய்து வருகின்றன.

விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம்

விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம்

இன்று நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் வீடியோக்களில் துவங்கி, கேமிங் மற்றும் பல்வேறு இதர துறைகளில் நம்மை மகிழ்வித்தும், நமக்கு தெரியாதவற்றைகற்பித்தும் வருகிறது.

Redmi Note 8 போனுக்கு அலைமோதிய கூட்டம்- விலை உயர்த்திய Xiaomi - அப்படி என்ன சிறப்பம்சம்Redmi Note 8 போனுக்கு அலைமோதிய கூட்டம்- விலை உயர்த்திய Xiaomi - அப்படி என்ன சிறப்பம்சம்

தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டே வருகிறது

தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டே வருகிறது

கற்பனை கூட செய்துபார்க்கமுடியாதவை என்ற அனைத்தையும் நம் கண் முன்னாள் கொண்டுவரக் கூடிய தொழில்நுட்பம் தான் விர்ச்சுவல் ரியாலிட்டி. இந்த காலக்கட்டத்தில் அனைத்தும் சாத்தியமாக்கும் வகையில் பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டே வருகிறது.

ஆகச் சிறந்த செயல் ஒன்று அரங்கேறியுள்ளது

ஆகச் சிறந்த செயல் ஒன்று அரங்கேறியுள்ளது

இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் ஆகச் சிறந்த செயல் ஒன்று அரங்கேறியுள்ளது. நமது வாழ்வில் முக்கிய அங்கம் வகிப்பவர்களில் ஒருவர், எடுத்துக்காட்டாக தாய், தந்தை, நண்பர், காதல், உறவினர் என யாராவது ஒருவர் இறந்துவிட்டால்.

ஏங்கித் தவிக்கும் மனம்

ஏங்கித் தவிக்கும் மனம்

அவரை மீண்டும் பார்க்க முடியாதே, அவருடன் பேச முடியாதே என நம் மனம் ஏங்கித் தவிக்கும். ஒரே ஒரு முறை மட்டும் இறுதியாக பேச வேண்டும் என்ற ஆசை இதயத்தில் வருடிக் கொண்டே இருக்கும்.

BSNL மருதம் பிளான்: ரூ.1188-க்கு வருடம் முழுவதும் பேசிக்கிட்டே இருக்கலாம்- அட்டகாச விலைக்குறைப்புBSNL மருதம் பிளான்: ரூ.1188-க்கு வருடம் முழுவதும் பேசிக்கிட்டே இருக்கலாம்- அட்டகாச விலைக்குறைப்பு

Meeting you (உன்னைச் சந்தித்தல்)

Meeting you (உன்னைச் சந்தித்தல்)

இந்த நிலையில் கொரிய நாட்டில் உள்ள ஊடகத்தில் இந்த தொழில்நுட்பம் சோதனை செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு Meeting you (உன்னைச் சந்தித்தல்) என்று பெயரிடப் பட்டிருந்தது.

நான்கு வருடங்களுக்கு முன்பு மகளை இழந்த தாய்

நான்கு வருடங்களுக்கு முன்பு மகளை இழந்த தாய்

இந்த நிகழ்ச்சியில் முதல் பங்கேற்பாளராக ஒரு பெண் கலந்து கொண்டார். இந்த பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு, அந்த பெண்ணின் மகளை ஒரு மர்ம நோய் காவு வாங்கியது. இந்த நிலையில் நான்கு வருடங்களுக்கு இறந்த போன அந்த குழந்தையிடம் விர்சுவல் ரியாலிட்டி மூலம் தாய் உரையாடும் வகையில், இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

முன்னாள் நின்று அம்மா என்று அழைத்த குழந்தை

முன்னாள் நின்று அம்மா என்று அழைத்த குழந்தை

விர்சுவல் ரியாலிட்டி உலகத்திற்குள் தாய் நுழைந்ததும், அந்த குழந்தை ஓடி வந்து தன் தாய் முன்னாள் நின்று அம்மா என்று அழைக்கிறது. அந்த நிலையில் தாய் கதறி அழுதார். அதன்பின் இருவருக்குமான உரையாடல் தொடங்குகிறது.

BSNL 4G Plans:இன்ப அதிர்ச்சி கொடுத்த பிஎஸ்என்எல் 4ஜி: தினசரி 10ஜிபி டேட்டா.! 84நாட்கள் வேலிடிட்டி..!BSNL 4G Plans:இன்ப அதிர்ச்சி கொடுத்த பிஎஸ்என்எல் 4ஜி: தினசரி 10ஜிபி டேட்டா.! 84நாட்கள் வேலிடிட்டி..!

தாயை வானத்திற்கு அழைத்து சென்ற குழந்தை

தாயை வானத்திற்கு அழைத்து சென்ற குழந்தை

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அந்த குழந்தை தன் தாயை, தான் இப்போது வாழும் இடத்திற்கு அழைத்து செல்கிறேன் என தனது தாயை வானத்திற்கு அழைத்து செல்கிறார். அங்கு தான் சந்தோஷமாக வாழும் காட்சியை தனது தாய்க்கு காண்பிக்கிறார். அதன்பின் அங்கேயே தாயுடன் கேக் வெட்டி மகிழ்கிறார். பின் தனக்கு உறக்கம் வருகிறது அம்மா, ஐ லவ் யூ என்று கூறுகிறார். அதனுடன் தாய் பூமிக்கு திரும்பி விடுகிறார்.

அனுபவிக்கும் தாய்க்கு உண்மை நிகழ்வு தானே

அனுபவிக்கும் தாய்க்கு உண்மை நிகழ்வு தானே

இந்த காட்சி பார்ப்பவர்கள் கதை, காட்சியாக இருந்தாலும் விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் அனுபவிக்கும் தாய்க்கு உண்மை நிகழ்வாக தான் இருக்கும். 4 வருடத்திற்கு முன்பு இறந்துபோன தனது குழந்தையின் புகைப்படம் மற்றும் அந்த குழந்தை பாடிய பாடல் குரல் ஆகியவைகளை வைத்து இந்த குழந்தை விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நான் 4 அடிதான் என்று சொன்ன காதலன்., பெண் சொன்ன பதில் என்ன தெரியுமா? திரைப்படத்தை மிஞ்சிய காதல் கதைநான் 4 அடிதான் என்று சொன்ன காதலன்., பெண் சொன்ன பதில் என்ன தெரியுமா? திரைப்படத்தை மிஞ்சிய காதல் கதை

கண்கலங்கச் செய்யும் வீடியோ

இந்த நிகழ்வை வீடியோவில் பார்க்கும் போதே கண் கலங்குகிறது என்றால் நேரில் பார்த்த தொலைக்காட்சி ஊழியர்களுக்கு கண் கலங்காமலா இருக்கும். அவர்களும் கண்ணில் நீர் ததும்ப அழத் தொடங்கினர்.

Best Mobiles in India

English summary
Emotional Video: Mom meets her passed child using virtual reality in korea meeting you tv show!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X