Home
News

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களுக்கு கிடைக்கப்போகும் அசத்தலான அப்டேட்: என்ன தெரியுமா?

வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு சிறப்பான அம்சத்தை வெளியிட உள்ளது.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களுக்கு எமோஜி

அதாவது WABetaInfo வெளியிட்ட தகவலின்படி, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களுக்கு எமோஜி மூலம் ரிப்ளை செய்யும் வசதி சோதனை இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. எனவே இந்த புதிய அம்சம் விரைவில் பயனர்களுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

uick Reactions வசதி மூலம்

மேலும் இந்த Quick Reactions வசதி மூலம் இனிமேல் வாட்அப்பில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஸ்டேட்டஸ் அப்டேட்களுக்கு உடனடியாக எமோஜி அனுப்பலாம். அதுவும் மடித்த கைகள், கைதட்டல் கைகள், பார்ட்டி பாப்பர், சிரித்த முகம், கண்ணீருடன் முகம் போன்ற எமோஜிகள் ஆப்ஷனாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படுகிறது

வெளிவந்த தகவலின்படி ஸ்டேட்டஸ்களுக்கு ரிப்ளை செய்ய 8 எமோஜிகள் ஆப்ஷனாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எமோஜிகள் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

) நிலையை மறைக்கக்கூடிய வச

அதேபோல் WABetaInfo அறிக்கையின்படி வாட்ஸ்அப் குறிப்பிட்ட தொடர்புகளுக்கு கடைசியாக பார்த்த (லாஸ்ட் சீன்) நிலையை மறைக்கக்கூடிய வசதியை செயல்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

WABetaInfo அறிக்கையின்படி

அதாவது WABetaInfo அறிக்கையின்படி மெட்டாவுக்கு சொந்தமான செய்தியிடல் தளமான வாட்ஸ்அப் குறிப்பிட்ட தொடர்புகளுக்கு கடைசியாக பார்த்த (லாஸ்ட் சீன்) நிலையை மறைக்கக்கூடிய வசதியை செயல்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா வெளியீட்டில் ஐஓஎ்ஸ பயனர்களுக்கு என இந்த அம்சம் சோதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அப் லாஸ்ட் சீன் என்பது நாம் எப்போது

வாட்ஸ்அப் லாஸ்ட் சீன் என்பது நாம் எப்போது கடைசியாக வாட்ஸ்அப் பயன்பாட்டை அனுகினோம் என்பதை பிறருக்கு காண்பிக்க பயன்படும் அம்சமாகும். தற்போது குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே காண்பிக்கும் வகையிலும் தேவையில்லாத பயனர்களிடம் இருந்து லாஸ்ட் சீன் அம்சத்தை மறைக்கும் படியாகவும் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய இருக்கிறது.

 பயன்ப

இந்த அம்சமானது தற்போது ஐஓஎஸ் 22.9.0.70 பயன்படுத்தும் வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வசதி விரைவில் அனைவருக்கும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

சதியை செயல்படுத்துவதற்கான

இந்த வசதியை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை விரிவாக பார்க்கலாம். வாட்ஸ்அப் பயன்பாட்டை ஓபன் செய்து செட்டிங்க்ஸ் என்ற தேர்வுக்குள் சென்று பிரைவேசி என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் இந்நாள் வரை Everyone, My Contacts மற்றும் Nobody என்ற விருப்பம் மட்டுமே காண்பிக்கப்பட்டது. இனி வரும் நாட்களில் இதில் My Contacts Except என்ற தேர்வு காண்பிக்கப்படும், இதில் யாருக்கெல்லாம் லாஸ்ட் சீன் காட்ட வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கலாம். பிரைவசி என்ற தேர்வுக்குள் இந்த வசதி இருக்கிறது. இதில் கடைசியாக பார்த்தது (லாஸ்ட் சீன்) என்ற விருப்பத்துக்குள் சென்று இந்த வசதியை தேர்ந்தெடுக்கலாம். லாஸ்ட் சீன் பயன்பாடு போன்றே புரொஃபைல் இமேஜ், about மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆகியவற்றையும் குறிப்பிட்ட சிலரை மட்டுமே காணும் வகையில் இந்த அப்டேட் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Emoji reaction to WhatsApp statuses: new update coming soon!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X