Google Pay, PhonePe, Paytm-ல் EMI வசதி.. இனி உடனே பணம் செலுத்த வேண்டாம்.. மாதாந்திர தவணைகளாக கட்டலாம்!
என்பிசிஐ (NPCI) என்கிற இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது டிஜிட்டல் பேமண்ட்களுக்கான அடுத்த கட்டத்திற்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் யுபிஐ (UPI) சேவையில் ரூபே கிரெடிட் கார்டுகள் (RuPay Credit Cards) மற்றும் கிரெடிட் லைன்கள் (Credit Lines) சேர்க்கப்பட்டது
அதனை தொடர்ந்து இப்போது பயனர்கள் யுபிஐ பரிவர்த்தனைகளை இஎம்ஐ-களாக மாற்ற அனுமதிக்கும் ஒரு வசதியை அறிமுகம் செய்ய என்பிசிஐ திட்டமிட்டுள்ளது. அதாவது உடனடியாக பணம் செலுத்தும் முறையை (Instantly convert payments) மாதாந்திர தவணைகளாக (Monthly installments) மாற்ற உதவும் வகையில், யுபிஐ சேவையில் இஎம்ஐ அம்சத்தை அறிமுகப்படுத்த கூகுள்பே, போன்பே, பேடிஎம் போன்ற ஃபின்டெக் நிறுவனங்களை அனுமதிக்க என்பிசிஐ தயாராகி வருகிறது.

இது வசதி - கார்டு அடிப்படையிலான பிஓஎஸ் பேமண்ட்களை (Card-based PoS payments) போலவே செயல்படும். அதாவது வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்வைப்களை டெர்மினலில் நேரடியாக இஎம்ஐ-களாக பிரிக்கலாம். இந்த வசதி இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை என்றாலும், இது தளத்தில் கடன் பரிவர்த்தனைகளுக்கு ஒரு பெரிய உந்துதலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் இந்த புதிய நடவடிக்கை ஆனது கடன் அணுகலை (Credit access) விரிவுபடுத்துதல், அதிக மதிப்புள்ள கொள்முதல்களை (High-value purchase) அதிகரித்தல் மற்றும் இந்தியாவின் கோ-டு பேமெண்ட் அமைப்பாக (Go-to payment system) யுபிஐ சேவையின் பங்கை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு உள்ளது.
யுபிஐ சேவையில் ரூபே கிரெடிட் கார்டுகள் வலுவான இழுவையை பெறுகிறது. ஆக என்பிசிஐ ஆனது யுபிஐ சேவையில் இஎம்ஐ அம்சத்தை அறிமுகம் செய்வதிலும், அதை ஆராய்ந்து வருவதிலும் எந்த ஆச்சரியமும் இல்லை. தனது பயனர்களுக்கு கிரெடிட் சலுகைகளை விரிவுபடுத்த நவி (Navi) மற்றும் பேடிஎம் (Paytm) போன்ற ஃபின்டெக் நிறுவனங்களுடன் பல வங்கிகள் ஏற்கனவே இணைந்து செயல்படுகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
நவி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன ராஜீவ் நரேஷ், இஎம்ஐ விருப்பம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. ஆனால் விரைவில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்துவதற்காக க்யூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்யும் போது, அதை இஎம்ஐ-களாக பிரிக்க அனுமதிக்கும் அம்சத்தை பெறுவார்கள் என்று கூறியுள்ளார். இதற்காக சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.சமீபத்தில் (நியூஸ்18 அறிக்கையின்படி) கூகுள் பே மற்றும் பேடிஎம் இல் பெர்சனலைஸ்டு ஐடி அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. யுபிஐ பயனர்களின் ப்ரைவஸியை மேலும் வலுப்படுத்தும் இது யுபிஐ பயனர்கள் பரிவர்த்தனைகளை செய்யும்போது தங்கள் மொபைல் நம்பர் அல்லது இமெயில் ஐடியை மறைக்க அனுமதிக்கும் என்றும் கூறப்படுகிறது.
அறிமுகமான நேரத்தில் இந்த அம்சம் - யெஸ் பேங்க் மற்றும் ஆக்சிஸ் பேங்க் ஆகியவற்றை மட்டுமே ஆதரித்தது, ஆனால் கேஜெட்ஸ் 360-ன் சமீபத்திய அறிக்கை இது - எச்டிஎப்சி வங்கி (HDFC Bank) மற்றும் எஸ்பிஐ வங்கி (SBI) ஆகிய வங்கிகளுடன் இணைக்கப்பட்ட யுபிஐ அக்கவுண்ட்களில் வேலை செய்கிறது; அதாவது இதன்கீழ் ஏற்கனவே உள்ள யுபிஐ ஐடிகளை மாற்ற முடிகிறது என்றும் கூறப்படுகிறது.
இதன்கீழ் ஒரு பயனர் பேடிஎம் ஆப்பில் உள்ள அவருடைய யுபிஐ ஐடியை மாற்றிய உடன், மொபைல் நம்பர் அல்லது இமெயில் ஐடி ஆனது தனிப்பயன் எண்ணெழுத்து உரை (Custom alphanumeric text) கொண்டு மாற்றப்படும். அதை தொடர்ந்து யுபிஐ ஐடி ஆனது "@pt(உங்களுடைய வங்கி பெயர்)" ஆக இருக்குமாம்.


Click it and Unblock the Notifications








