Home
News

உங்க போனுக்கு இந்த எமர்ஜென்சி அலெர்ட் மெசேஜ் வந்துச்சா? இதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா?

இந்திய அரசின் தொலைத் தொடரப்பு துறை தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள சில மொபைல் போன் பயனர்களுக்கு இன்று (17-8-2023) மதியம் 1 மணி அளவில் திடீரென ஒரு மெசேஜ் (குறுந்தகவல்) அனுப்பி உள்ளது இந்திய அரசின் தொலைத் தொடர்பு துறை.

தொலைத் தொடர்பு துறை அனுப்பிய குறுந்தகவலால் சிலர் குழம்பி போய் உள்ளனர். மேலும் எதற்காக அந்த மெசேஜ் அனுப்பப்பட்டது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். அதாவது இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் செல் ப்ராட்காஸ்டிங் சிஸ்டம் மூலம் அனுப்பப்பட்ட மாதிரி சோதனை மெசேஜ் ஆகும்.

உங்க போனுக்கு இந்த எமர்ஜென்சி அலெர்ட் மெசேஜ் வந்துச்சா?

அதாவது நாட்டில் பேரழிவு அல்லது அவசரக்காலங்களில் மக்களுக்கு ஆபத்து வராமல் தடுக்க இதுபோன்ற எச்சரிக்கை செய்தியை (மெசேஜ்) மத்திய அரசின் தொலைத் தொடர்பு துறை அனுப்பும். தற்போது சோதனை முயற்சியாகத் தான் சில இடங்களில் இந்த பிளாஷ் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பேரிடர் காலங்களில் இந்தியா முழுக்க ஒரே நேரத்தில் அவசர மெசேஜ் அனுப்புவதைச் சோதிக்கும் விதமாக இந்த டெஸ்ட் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த மெசேஜ்-க்கு பதில் அளிக்க அவசியம் இல்லை. இது பொது பாதுகாப்பை மேம்படுத்துவதையும், அவசர காலங்களில் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

நிலநடுக்கம், சுனாமி, திடீர் வெள்ளம் உள்ளிட்ட அவசரக் காலங்களில் மக்களுக்குச் சரியான பாதுகாப்பு கொடுக்கவும், எச்சரிக்கை வழங்கவும் இதுபோன்ற மெசேஜ் அனுப்பப்படும். குறிப்பாக இந்த அவசர காலங்களில் மெசேஜ் அனுப்புவதற்குப் பேரிடர் மேலாண்மை ஆணையமும் அரசும் ஒத்துழைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சோதனை முயற்சியாகத் தான் தற்போது சில மொபைல் பயனர்களுக்கு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது.

அதேபோல் மத்திய தொலைத்தொடர்புத் துறை கடந்த மே 17ஆம் தேதி ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் மூலம் வீட்டில் இருந்தே உங்களது தொலைந்துபோன ஸ்மார்ட்போனை கண்டுபிடிக்க அரசுக்கு கோரிக்கை வைக்க முடியும்.

அதாவது எதிர்பாராதவிதமாக உங்களது ஸ்மார்ட்போன் தொலைந்தால், நீங்கள் CEIR (மத்திய உபகரண அடையாள பதிவு - Central Equipment Identity Register) என்ற வெப்சைட்டுக்கு சென்று விண்ணப்பிக்கலாம் அல்லது கூகுள் பிளே மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கும் சிஇஐஆர் கேஒய்எம் ஆப் (CEIR KYM App) மூலமும் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்க போனுக்கு இந்த எமர்ஜென்சி அலெர்ட் மெசேஜ் வந்துச்சா?

இப்படி விண்ணப்பிக்க நீங்கள் போலீசாரிடம் புகார் அளித்திருக்க வேண்டும். அந்த எஃப்ஐஆர் காப்பி உடன் தொலைந்துபோன ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்ட மொபைல் நம்பர் (Mobile Number), ஐஎம்இஐ நம்பர் (IMEI Number), ஸ்மார்ட்போனின் பிராண்ட் (Brand), மாடல் (Model), பர்ச்சேஸ் இன்வாய்ஸ் (Purchase Invoice), தொலைந்துபோன இடம், நேரம் உள்ளிட்ட தகவல்களை வைத்திருக்க வேண்டும்.

மேலும் இந்த தகவல்களை வைத்து விண்ணப்பித்த பின்பு 24 மணி நேரத்திற்குள் உங்களது ஸ்மார்ட்போன் முடக்கப்படும். அதன்பின் யாராலும் அதை பயன்படுத்த முடியாது. இதையடுத்து டிராக்கிங் செய்து கண்டுபிடிக்கப்பட்ட பின்பு உங்களிடம் ஒப்படைக்கப்படும். இந்த புதிய திட்டம் மூலம் உங்களது ஸ்மார்ட்போனை வைத்து பணம், தகவல்கள் திருடப்படுவதை உடனடியாக தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Emergency alert messages sent today by telecommunications industry: Do you know why? : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X