Home
News

அப்படி போடு.. இந்தியாவில் ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவை.. கிடைத்தது கிரீன் சிக்னல்.. இதோ முழு விவரம்..

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் (Elon Musk) தனது சொந்த சாட்டிலைட் இன்டர்நெட் சேவையான ஸ்டார்லிங்க் (Starlink) சேவையை இந்தியாவில் துவங்க கடந்த சில ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தார். ஒருவழியாக தற்போது எலான் மஸ்க் தலைமையிலான ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் செயற்கைக்கோள் இணையச் சேவைகளை வழங்க உரிமம் பெற்றுள்ளது.

குறிப்பாக ஸ்டார்லிங்க் இன்டர்நெட் சேவை சோதனை முயற்சி விரைவில் இந்தியாவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு மக்களுக்கு ஸ்டார்லிங் நிறுவனத்தின் செயற்கைக்கோள் வழியாக அதிவேக இன்டர்நெட் சேவை கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அப்படிபோடு.. இந்தியாவில் ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவை..

அதுவும் செயற்கைக்கோள் வழியாக அனைத்து இடங்களிலும் இன்டர்நெட் சேவையை எலான் மஸ்க்கின் நிறுவனத்தால் வழங்க முடியும். எனவே அனைத்து இடங்களிலும் இந்நிறுவனத்தின் இணையச் சேவையைத் தங்கு,தடையின்றி பயன்படுத்தலாம். குறிப்பாக 2 ஆண்டுகள் காத்திருந்து ஸ்டார்லிங் நிறுவனத்துக்கு இப்போது தான் அனுமதி கிடைத்துள்ளது.

குறிப்பாக செயற்கைக்கோள் மூலம் இன்டர்நெட் சேவையை தொடங்குவதற்கான 'சேட்டிலைட் கம்யூனிகேஷன்' என்ற உரிமத்தை மத்திய தொலைத்தொடர்புத்துறை ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு வழங்கி உள்ளது. ஏற்கனவே இந்த உரிமத்தை இதுவரை இரண்டு நிறுவனங்களுக்கு இந்தியா வழங்கி உள்ளது. அதாவது Eutelsat's one Web மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இந்த உரிமத்தைப் பெற்றுள்ளது. தற்போது ஸ்டார்லிங் நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது.

ஸ்டார்லிங் நிறுவனத்தின் மூலம் இந்தியாவின் கிராமப்புற பகுதிகளுக்கும் அதிவேக இன்டர்நெட் சேவை கிடைக்கும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளது. குறிப்பாக பூமியில் இருந்து 550 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் மூலமாக இன்டர்நெட் சேவை கிடைக்க உள்ளது.

மேலும் இந்த ஸ்டார்லிங் செயற்கைக்கோள் பொறுத்தவரை வழக்கமான Geostationary satellites விட முற்றிலும் வித்தியாசமானது. அதாவது ஸ்டார்லிங் நிறுவனம் இன்டர்நெட் சேவையை வழங்குவதற்காக ஸ்பேஸ்எக்ஸ் 7,000 LEO செயற்கோள்களை பயன்படுத்துகிறது.

மேலும் எலான் மஸ்க் நிறுவனத்தின் என்ட்ரியை மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சந்தியா சில நாட்களுக்கு முன்பே உறுதி செய்திருந்தார். பின்பு ஸ்டார்லிங் நிறுவனத்துக்கு விரைவில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடக்கும் எனவும் சொல்லி இருந்தார். இந்நிலையில்தான் ஸ்டார்லிங் நிறுவனத்துக்கு மத்திய அரசு இணையச் சேவைகளை வழங்க உரிமம் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஸ்டார்லிங்' நிறுவனம் சார்பில் இந்தியாவுக்கான இணையச் சேவை கட்டணம் பற்றிய இன்னும் எந்த தகவலும் வெளியிடவில்லை. தற்போது தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது. பின்பு இந்த ஸ்டார்லிங் நிறுவனம் ஆனது 130 நாடுகளில் இன்டர்நெட் சேவையை வழங்கி வருகிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ்,நெதர்லாந்து, டென்மார்க், போர்சுகல், ஆஸ்திரேலியா,நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இந்நிறுவனம் சேவையை வழங்கி வருகிறது. சமீபத்தில் வங்கதேசத்தில் கூட இந்த சேவையை எலான் மஸ்க் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சேவை இந்தியாவிலும் கிடைக்கும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Elon Musks Starlink internet service gets license to launch in India:check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X