Home
News

இந்தியாவில் ஸ்டார்லிங்க் சாட்டிலைட் இணைய சேவை? வெளியானது முக்கிய தகவல்..

எலான் மஸ்க் (Elon Musk) தனது சொந்த சாட்டிலைட் இன்டர்நெட் சேவையான ஸ்டார்லிங்க் (Starlink) சேவையை இந்தியாவில் துவங்க முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் ஸ்டார்லிங்க் (Starlink) இந்திய அறிமுகம் குறித்த சில முக்கியத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்கும் உரிமத்தைப் பெற மத்திய அரசு விதித்த கட்டுப்பாடுகளை எலான் மஸ்கின் ஸ்டார்லிங் நிறுவனம் ஏற்றுக்கொண்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. எனவே இதன் மூலம் இந்திய தொலைத்தொடர்பு சேவை சந்தையில் ஸ்டார்லிங்க் விரைவில் இணைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஸ்டார்லிங்க் சாட்டிலைட் இணைய சேவை?

குறிப்பாக இந்தியாவில் செயல்படுவதற்கான GMPCS உரிமம் என்று அழைக்கப்படும் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை உரிமத்தை வழங்க டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை மத்திய அரசு விதித்திருந்தது. அதன்படி இந்திய பயனர்களின் தரவுகளை இந்தியாவிலேயே சேமிக்கவும் தேசிய பாதுகாப்புகளுக்குத் தேவைப்படும்போது புலனாய்வு அமைப்புகளுக்கு ஸ்டார்லிங்க்-ன் அணுகலை வழங்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது எனத் தகவல் வெளியாகி உள்ளது.

இருந்தபோதிலும் ஸ்டார்லிங்க் எழுத்துப்பூர்வமாக இன்னும் இதை உறுதி செய்யவில்லை. ஆனாலும் இந்தாண்டு இறுதிக்குள் செயற்கைக்கோள் ஸ்டார்லிங்க் இணைய சேவைகள் இந்தியாவில் தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் நேரடியாக சாட்டிலைட் மூலம் இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை ஸ்டார்லிங்க் வழங்குவதால் டவர் பயன்பாடு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஸ்டார்லிங் சேவை இந்தியாவுக்கு விரைவில் வரும் என்பதால் ஜியோ, ஏரடெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நெருக்கடியாக அமையும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக இந்தியாவில் ஸ்டார்லிங் சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் பிஎஸ்என்எல் 4ஜி டவர் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் வெளியான தகவலின்படி, பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் 65,000 4ஜி டவர்கள் இயக்க நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியானது. குறிப்பாக நாடு முழுவதும் ஒரு லட்சம் 4ஜி டவர்களை அமைப்பதே பிஎஸ்என்எல்-இன் இலக்கு. அதேபோல் இன்னும் சில மாதங்களில் நாடு முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்கிவிடும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் ஸ்டார்லிங்க் சாட்டிலைட் இணைய சேவை?

4ஜி தளங்களை அமைப்பதற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), தேஜாஸ் நெட்வொர்க்ஸ், டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையம் (சி-டாட்), ஐடிஐ லிமிடெட் போன்ற இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அனைத்து உபகரணங்களும் இந்திய நிறுவனங்களால் உருவாக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி நெட்வொர்க் "பூரண சுதேசி" (முற்றிலும் உள்நாட்டு) கண்டுபிடிப்பு என்ற கருத்தை உள்ளடக்கியதாகும். இது இந்திய தொலைத் தொடர்புத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குகிறது என்றே கூறலாம்.

அதேசமயம் ஜியோ (Jio), ஏர்டெல் (BSNL) நிறுவனங்கள் தற்போது சற்று உயர்வான விலையில் தான் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது வரை மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Elon Musks Starlink has reportedly agreed to key Indian licensing terms: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X