Home
News

உலகையே வியக்க வைத்த எலான் மஸ்க்கின் வீடு.. அவரது தாய் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்..

ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX), டெஸ்லா (Tesla), மற்றும் எக்ஸ் (X) பிளாட்ஃபார்மிற்கு சொந்தக்காரரும், உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் (Elon Musk) கடந்த 2020-ம் ஆண்டில் சொந்தமாக இனி வீடு வைத்திருக்க போவதில்லை என்ற முடிவை எடுத்தார். அதன்பின்பு தனது பல கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாக்களை விற்றுவிட்டு, டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் தளத்திற்கு அருகில் உள்ள ஒரு சிறிய வீட்டில் குடியேறினார்.

குறிப்பாக இந்த சிறிய வீட்டின் மதிப்பு 50,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.42 லட்சம்) ஆகும். வெறும் 400 சதுர அடிக்கும் குறைவான இந்த வீட்டிற்குள் என்னதான் இருக்கிறது என்பது பலருக்கும் புரியாத புதிராக இருந்தது. இந்நிலையில் எலான் மஸ்க்கின் தாய் மேயே மஸ்க் (Maye Musk) இந்த வீடு குறித்தும் அவரின் லட்சியம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

உலகையே வியக்க வைத்த  எலான் மஸ்க்கின் வீடு.. சுவாரஸ்யமான தகவல்..

அதாவது ஒரு ஹால், ஒரு சிறிய சமையலறை மற்றும் ஒரே ஒரு படுக்கையறை என மிகவும் சுருக்கமான இடத்தில்தான் மஸ்க் வசிக்கிறார். முக்கியமான விண்வெளி பயணங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை மட்டுமே சிந்திக்கும் எலான் மஸ்க் இவ்வளவு சிறிய இடத்திற்குள் அடங்கியிருப்பதை யாராலும் நம்ப முடியவில்லை. இந்த வீட்டில் ஆடம்பரமான சோபாக்களோ, அலங்காரப் பொருட்களோ கிடையாது. ஒரு எளிய மர மேசையில் அமர்ந்துதான் அவர் தனது உலகளாவிய நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

அதேபோல் மேயே மஸ்க் தனது மகனைப் பார்க்கச் செல்லும்போது தங்குவதற்குக்கூட அந்த வீட்டில் இடமிருக்காதாம். உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருந்தாலும் என் மகனிடம் விருந்தினர்களுக்காக ஒரு தனி அறைகூட இல்லை. நான் அவரைப் பார்க்கச் செல்லும்போது, ராக்கெட் ஏவுதளத்திற்கு அருகில் உள்ள ஒரு கேரேஜில்தான் தூங்க வேண்டியிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

இந்த ராக்கெட் தளத்தில் நீங்கள் ஆடம்பரமான தங்குமிடங்களை எதிர்பார்க்க முடியாது என்று அவர் நகைச்சுவையாகவும் வியப்பாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் ஒரு தாயாகத் தனது மகன் இவ்வளவு உயரத்தில் இருந்தும் அடிப்படை வசதிகளுடன் ஒரு கேரேஜில் தன்னை தங்க வைப்பதைப் பற்றி அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

எலான் மஸ்க் ஏன் இப்படி எளிமையாக வாழ்கிறார் என்பதற்கு பின்னார் ஒரு பெரிய லட்சியமே ஒளிந்திருக்கிறது. பொதுவாக அதிக உடைமைகள் மனிதனை ஒரு இடத்திலேயே கட்டிப்போட்டுவிடும் என்பது மஸ்க்கின் கருத்து. அதுவும் செவ்வாய் கிரகத்தில் மனிதக் குடியேற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற தனது மிகப்பெரிய கனவிற்காகப் பூமியில் உள்ள சொகுசுகளை அவர் தியாகம் செய்துள்ளார்.

உலகையே வியக்க வைத்த  எலான் மஸ்க்கின் வீடு.. சுவாரஸ்யமான தகவல்..

எனவே தான் தனது நேரத்தையும் கவனத்தையும் ஆடம்பர பொருட்கள் மீது சிதறவிடாமல் முழுமையாகத் தனது நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காகச் செலவிடவே இந்த வாழ்க்கை முறையை அவர் தேர்வுசெய்துள்ளார். பல கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தும் எலான் மஸ் ஒரு சிறிய வீட்டில் இருப்பது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

மேலும் எலான் மஸ்க் (Elon Musk) தலைமையிலான ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனமானது விரைவில் இந்தியா முழுவதும் சாட்டிலைட் இணைய சேவையை வழங்கும். குறிப்பாக ஸ்டார்லிங்க் இணையச் சேவை நாடு முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Elon Musks Simple Texas Home: His Mother Finally Shares What Its Like Inside
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X