Home
News

குரங்கின் மண்டைஓட்டுக்குள் சிப்., வீடியோகேம் விளையாடும் குரங்கு- அடுத்து மனிதர்கள்தான்!

உலகம் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறிக் கொண்டே தான் இருக்கிறது. முன்னற்றம் என்பது தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை வைத்தே கணிக்கப்படுகிறது என்றால் அது மிகையல்ல. வளரும் தொழில்நுட்பங்கள் நம்மை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துக் கொண்டு செல்கிறது.

அவர் ஒரு மகிழ்ச்சியான குரங்கு

அவர் ஒரு மகிழ்ச்சியான குரங்கு

மனதிலேயே வீடியோ கேம் விளையாடக்கூடிய வகையில் மூளையில் வயர்லெஸ் சிப் பொருத்தப்பட்டுள்ள குரங்கு தங்களிடம் உள்ளது எனவும் "அவர் ஒரு மகிழ்ச்சியான குரங்கு" எனவும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்தார்.

எலான் மஸ்க் என்றால் தனித்துவம்

எலான் மஸ்க் என்றால் தனித்துவம்

எலான் மஸ்க் என்றால் தனித்துவம் என்றே கூறலாம். அவர் கனவுத்திட்டங்கள் எல்லாம் உலகத்தை அடுத்துக் கட்டத்தை நோக்கி செலுத்தும் விதமாகவே இருக்கும். அதன்படி தற்போது குரங்கின் தலைப்பகுதிக்குள் வயர்லெஸ் சிப் பொருத்தி சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

குரங்கின் மூளைக்குள் சிப்

குரங்கின் மூளைக்குள் சிப்

எலான் மஸ்க்கின் நியூராலிங் நிறுவனம் குரங்கின் மூளைக்குள் சிப் ஒன்றை பொருத்தி சோதனை செய்து வருகிறது. குரங்கின் உடலுக்குள் கருவி எங்கே உள்ளது என்றே யாராலும் கண்டுபிடிக்க முடியாது எனவும் இதன்மூலம் குரங்கு மூளைக்குள்ளேயே வீடியோ கேம் விளையாடுவதாகவும் மஸ்க் கூறினார்.

மூளை மற்றும் முதுகெலும்பு காயங்கள்

அவர் ஒரு மகிழ்ச்சியான குரங்கு என்று குறிப்பிட்ட எலான் மஸ்க், அந்த குரங்கின் மூளை போங்க் விளையாட்டு பிறருடன் விளையாடி வருவதாகவும், மூளை மற்றும் முதுகெலும்பு காயங்களை குணப்படுத்த இந்த தொழில்நுட்பம் உதவும் எனவும் குறிப்பிட்டார். அதோடு பொருத்தப்பட்ட சிப்பின் மூலம் நபர்கள் இழந்த திறனை உருவாக்கவும் முடியும் என மஸ்க் கூறினார்.

2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நியூரோலிங்

எலோன் மஸ்க்-ன் நியூரோலிங் நிறுவனம், 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் மனிதனின் மூளையை இயந்திரங்களோடு நேரடியாக இணைக்கும் தொழில்நுட்ப முயற்சியை ஆராய்ந்தது.

2 மாதங்களாக ஆய்வு

2 மாதங்களாக ஆய்வு

மனிதனில் மூளையில் சிப் வைக்கும் முயற்சியின் முன்னோட்ட நடவடிக்கையின் முதற்கட்டமாக பன்றியின் மூளையில் கணினி சிப் வைத்து 2 மாதங்களாக ஆய்வு செய்யப்பட்ட நிகழ்வு நடத்தப்பட்டது. சிப் பொருத்தப்பட்ட நாளில் இருந்தே பன்றி நலமுடனே காணப்பட்டதாக கூறப்பட்டது.

கடும் சவாலாக இருக்கும்

கம்பியூட்டர் சிப் பொருத்தம் இந்த பரிசோதனையானது விலங்குகளோடு ஒப்பிடுகையில் மனிதர்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆராய்ச்சி பெரும் வெற்றி மனித வளர்ச்சியை அடுத்த கட்டமல்ல பல்வேறு கட்டத்திற்கு முன்னேற்றும் என கூறப்படுகிறது.

தலைமுடியைவிட சிறய கம்யூட்டர் சிப்

தலைமுடியைவிட சிறய கம்யூட்டர் சிப்

மனித மூளையில் சிப் பொருத்துவதற்கு உரிய ஒப்புதல் பெற்று, அதிநவீன ரோப்போகள் உதவியுடன், மனிதர்களின் தலைமுடியைவிட சிறய கம்யூட்டர் சிப்கள் மனிதன் இயக்கம் மற்றும் கட்டுப்பாட்டு பகுதியில் பொருத்தும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு சோதனை நடத்தப்படும் என எலான் மஸ்க் தெரிவித்தார். தற்போது குரங்கு மூளைக்குள் சிப் பொருத்தப்பட்டிருப்பது பிளானட் ஆஃப் ஏப்ஸ் படத்தை பிரதிபலிக்கும் விதமாக இருக்கிறது என சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Pic Courtesy: Social Media

More from GizBot

Best Mobiles in India

English summary
Elon Musks Neuralink Implant Wireless Chip in Monkey Brain to Play Video Games
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X