Home
News

1 மணி நேரத்திற்கு ரூ.5,400 சம்பளம்.. Elon Musk அறிவித்துள்ள புதிய 9-5 வேலை வாய்ப்பு.. யார் விண்ணப்பிக்கலாம்?

ஒரு மணி நேரத்திற்கு சுமார் ரூ.2,900 முதல் ரூ.5,400 வரையிலான சம்பளத்தை வழங்கும் வேலை வாய்ப்புகளை எலான் மஸ்க் (Elon Musk) அறிவித்துள்ளார். எலான் மஸ்க்கின் ஏஐ நிறுவனமான எக்ஸ்ஏஐ (xAI) உடன் தொடர்புடைய இந்த வேலைக்கு யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம்? அவர்களுக்கு என்னென்ன தகுதிகள் (Qualifications) இருக்க வேண்டும்? இந்த வேலைக்கான தேவைகள் (Requirements) என்னென்ன? இதோ விவரங்கள்:

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான எக்ஸ்ஏஐ நிறுவனமானது இருமொழி வல்லுனர்களை (Bilingual experts)) ஏஐ ட்யூட்டர்களாக (AI Tutors) பணி அமர்த்துவதற்கான தேடலில் உள்ளது. இந்த வேலை வாய்ப்பானது, மக்கள் பிரபஞ்சத்தை நன்கு புரிந்துகொள்ள உதவும் மேம்பட்ட ஏஐ அமைப்புகளை (Develop advanced AI systems) உருவாக்குவதற்கான எக்ஸ்ஏஐ நிறுவனத்தின் முக்கிய ஒரு மிஷனின் பகுதியாகும்.

1 மணி நேரத்திற்கு ரூ.5,400 சம்பளம்.. Elon Musk அறிவித்துள்ள வேலை!

இதற்காக பணியமர்த்தப்பட்டவர்கள் எக்ஸ்ஏஐ அதன் ஏஐ மாடல்களை பயிற்றுவிக்கப் பயன்படுத்தும் டேட்டா வை உருவாக்குவதற்கும், அவைகளை லேபிளிடுவதற்கும் பொறுப்பாவார்கள். இந்த வேலையில், நீங்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து சம்பளம் மாறுபடும் என்றாலும், வீட்டில் இருந்தே வேலை செய்யும் விருப்பத்தின் கீழ், இந்தியாவில் இருப்பவர்களும் கூட இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

எலான் மஸ்க் அறிவித்துள்ள இந்த "ஏஐ ட்யூட்டர் - பைலிங்குவல்" வேலையானது 6 மாத காலம் மட்டுமே நீடிக்கும் ஒரு தற்காலிக, ரிமோட் ஜாப் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த வேலைக்கான தகுதிகளை பொறுத்தவரை, விண்ணப்பதாரர்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி அல்லது பிரஞ்சு அல்லது சீனம் அல்லது அரபு போன்ற மொழியிலும் சரளமாக இருக்க வேண்டும்.

டேட்டாவை துல்லியமாக லேபிளிடுவதற்கும், உள்ளிடுவதற்கும் எக்ஸ்ஏஐ நிறுவனத்தின் ஸ்பெஷல் சாஃப்டவேர் உடன் பணிபுரிவதும் இந்த வேலையின் ஒரு பகுதியாக இருக்கும். இந்த வேலைக்கா வெற்றிகரமான தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவுடன் நெருக்கமாக ஒத்துழைத்து, தயாரிக்கப்பட்ட டேட்டாவானது உயர் தரம் வாய்ந்ததாக இருப்பதையும் மற்றும் ஏஐ-யின் பன்மொழி திறன்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதாகவும் இருக்க வேண்டும்

டேட்டா லேபிளிங்குடன் கூடுதலாக, ஏஐ ட்யூட்டர்களாக பணியமர்த்தப்படுபவர்கள் எக்ஸ்ஏஐ உருவாக்கும் ஏஐ மாடல்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களிலும் பங்கேற்பார்கள். அதாவது தரவுகளுடன் பணிபுரியும் திறமை மட்டுமல்லாமல், ஆங்கிலம் மற்றும் கூடுதல் மொழி ஆகிய இரண்டிலும் வலுவான மொழி திறன்கள் மற்றும் ஆராய்ச்சி திறன்களையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும்

டெக்னீக்கல் ரைட்டிங்ஜர்னலிசம் அல்லது ப்ரொபெஷனல் ரைட்டிங் போன்ற துறைகளில் அனுபவம் உள்ள நபர்களை, குறிப்பாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட மொழிகளில் திறமையானவர்களை தான் எக்ஸ்ஏஐ நிறுவனம் தேடுகிறது. தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் வலுவான ஆர்வம், அத்துடன் சிறந்த தகவல் தொடர்பு திறனும் கூட இந்த வேலைக்கான முக்கிய தகுதியாகும்.

விண்ணப்பதாரர்கள் ஆங்கிலம் மற்றும் கூடுதல் மொழி இரண்டிலும் கன்டென்ட்டை கையாள முடியும் என்பதை உறுதிசெய்ய, மொழி மதிப்பீடுகளை உள்ளடக்கிய ஒரு தேர்வு செயல்முறைக்கு உட்படுத்தப்படுவார்கள். விண்ணப்பதாரரின் திறமை மற்றும் அனுபவத்தைப் பொறுத்து, ஒரு மணிநேர நேரத்திற்கு $35 முதல் $65 வரை (அதாவது சுமார் ₹2,900 முதல் ₹5,400 வரை) சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படுபவர்களின் உள்ளூர் நேர மண்டலத்தின் அடிப்படையில் திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை செய்ய வேண்டி இருக்கும். முழுநேர ஊழியர்கள் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பாதுகாப்பு போன்ற பலன்களையும் பெறுவார்கள். இந்த வேலைக்கான இறுதி ஊதியம் - தகுதிகள், அனுபவம் மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் மாறுபடும்.

இந்தியாவில் உள்ளவகளுக்கு, எலான் மஸ்க் அறிவித்துள்ள இந்த வேலையானது போட்டித்தன்மை வாய்ந்த சர்வதேச வேலையாக இருக்கும்; கூடவே நல்ல சம்பளத்தை வழங்கும் ஒரு ரிமோட் ஜாப் ஆகவும் இருக்கும். இந்த வேலை ​வீட்டிலிருந்தே உலகளாவிய ஏஐ சவால்களில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

எலான் மஸ்க்கின் எக்ஸ்ஏஐ நிறுவனமானது வேகமாக வளர்ந்து வரும் ஏஐ துறையில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் ஆர்வமுள்ள நபர்களைத் தேடுகிறது. நீங்கள் ஹிந்தி அல்லது வேறு குறிப்பிட்ட மொழியை சரளமாகப் பேசுவதோடு, தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டவராக இருந்தால், உற்சாகமான இந்த ஏஐ மிஷனில் ஈடுபட இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Elon Musk xAI Company AI Tutor Bilingual Job Salary Rs 5400 Per Hour Qualifications Requirements
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X