உரசி பார்த்த தொழிலதிபர்.. கலங்கி போன Elon Musk- உலகப் பணக்காரர் பட்டியலே ஆடிப்போச்சு?

|

உலக பணக்காரர்களின் பட்டியலில் ஜெஃப் பெசோஸை பின்னுக்கு தள்ளிய Elon Musk ஏறத்தாழ கடந்த ஓராண்டு காலமாக முதலிடத்தில் இருந்து வருகிறார். இந்த நிலையில், பட்டியலில் சிறிது நேரம் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி தொழிலதிபர் ஒருவர் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க்

ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க்

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய நாள்முதல் அதில் பல மாற்றங்களை செய்து வருகிறார். சமீப காலமாக எந்த பக்கம் திரும்பினாலும் மஸ்க் ட்விட்டர் என்பது தான் பேசு பொருளாக இருக்கிறது. SpaceX, Tesla, Boring Company, Neuralink உள்ளிட்ட பல நிறுவனங்களின் உரிமையாளராக எலான் மஸ்க் இருக்கிறார். பலரையும் துணிச்சலாக வம்புக்கு இழுக்கும் எலான் மஸ்க்கிற்கு இங்கு ஒருவர் ஆட்டம் காட்டி இருக்கிறார். சிறிது நேரம் தான் என்றாலும் பரபரப்பான தகவலாக இது பரவியது.

இரண்டாவது இடத்தில் மஸ்க்

இரண்டாவது இடத்தில் மஸ்க்

ஃபோர்ப்ஸ் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் எலான் மஸ்க் திடீரென இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார். சிறிது நேரம் இரண்டாவது இடத்தில் இருந்த மஸ்க் மீண்டும் முதலிடத்தை பிடித்துவிட்டார். சிறிது நேரம் என்றாலும் முதலிடத்தை பிடித்திருக்கிறார் ஒரு தொழிலதிபர் நீண்ட நாட்களாக முதலிடத்தில் இருந்த மஸ்க் சிறிது நேரம் இரண்டாவது இடத்தை சந்தித்து மேலே வந்திருக்கிறார்.

தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட்

தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட்

சரி, அந்த தொழிலதிபர் யார் என்று பார்க்கலாம். மஸ்க்கை பின்னுக்கு தள்ளி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நபர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் தான். உலகின் முன்னணி பிராண்டான லூயி விட்டான் உட்பட 70 பிராண்டுகள் இவருக்கு சொந்தமாக இயங்குகிறது.

டாப் 5 இடங்கள்

டாப் 5 இடங்கள்

சிறிது நேரம் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த LVMH இன் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் தற்போது பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். முதல் இடத்தில் எலான் மஸ்க், மூன்றாவது இடத்தில் கவுதம் அதானி, நான்காவது இடத்தில் ஜெஃப் பெசோஸ், ஐந்தாவது இடத்தில் பில் கேட்ஸ் ஆகியோர் பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றனர்.

வெற்றிகரமான தோல்வி

வெற்றிகரமான தோல்வி

எலான் மஸ்க் என்று கூறியதும் நினைவுக்கு வருவது டெஸ்லா, ஸ்பேஷ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் பெயர்கள்தான். இந்த நிறுவனங்களை இவர் வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல பல தோல்விகளை கண்டுள்ளார். தோல்வி அடையும் போது இவர் உச்சரிக்கும் வார்த்தை, இது வெற்றிகரமான தோல்வி என்பதுதான்.

எப்படி தோல்வி அடையக் கூடாது

எப்படி தோல்வி அடையக் கூடாது

எலான் மஸ்க்கின் கனவுத் திட்டமாக கூறப்படுவது செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமாகும். ஆரம்பத்தில் இதற்கான முன்மாதிரி விண்கலம் வடிவமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அப்போது விண்கலம் வெடித்து சிதறியது. இந்த நிகழ்வு பல்வேறு விவாதங்களுக்கு உட்பட தொடங்கிய நிலையில் எலான் மக்ஸ் கூலாக இது வெற்றிகரமான தோல்வி, தோல்வி அடைய கூடாது என்பதற்கான அனைத்து தரவுகளும் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டது என கூறினார்.

டெஸ்லா வெற்றி

டெஸ்லா வெற்றி

டெஸ்லாவின் முதல் மின்சார கார் ரூ.72 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஸ்போர்ட்ஸ் காராக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் சந்தையில் நல்ல வரவேற்பை பெறவில்லை. ஆனால் இந்த உலகம் நல்ல மின்சார காரை வரவேற்க காத்திருக்கிறது என்ற நம்பிக்கை எலான் மஸ்க்கிடம் இருந்தது. தொடர்ந்து மாடல் எஸ் என்ற காரை அறிமுகப்படுத்தி எலான் மஸ்க் வெற்றி அடைந்தார்.

உலகப்பணக்காரர்கள் பட்டியல்

உலகப்பணக்காரர்கள் பட்டியல்

ஒவ்வொரு தோல்வியிலும் தானும் துவண்டுவிடாமல் தனது ஊழியர்களை துவண்டுபோக விடாமல் ஊக்க வார்த்தைகளை அளித்து எலான் மஸ்க் தனது நிறுவனத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்று, உலகப்பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார்.

Best Mobiles in India

English summary
Elon Musk went to the second place in world's richest people List: do you know who is in the first place?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X