Home
News

என்னிடம் வராதீர்கள், வகுந்து விடுவேன்.. நக்கலாக பதில் சொன்ன Elon Musk-ஐ "வறுத்துவிட்ட" அமெரிக்க அதிகாரி!

மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் ட்விட்டர் (Twitter) நிறுவனத்தின் புதிய உரிமையாளர் ஆன எலான் மஸ்க்கை (Elon Musk) மிகவும் கடுமையாக எச்சரித்து உள்ளார்!

அமெரிக்க அரசாங்கத்தை சேர்ந்த ஒரு மூத்த அதிகாரியே கடுப்பாகும் அளவிற்கு எலான் மஸ்க் அப்படி என்ன செய்தார்? எச்சரித்து உள்ளார் என்றால்.. என்ன சொல்லி எச்சரித்தார்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

யார் அந்த மூத்த அமெரிக்க அதிகாரி?

யார் அந்த மூத்த அமெரிக்க அதிகாரி?

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கை எச்சரித்தது அமெரிக்காவின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான எட் மார்கி (Ed Markey) என்பவரே ஆவார். இவர் அமெரிக்க செனட்டர்களில் (US Senetor) ஒருவர் ஆவார்.

இவருக்கும், எலான் மஸ்க்கிற்கும் இந்த மாத தொடக்கத்திலேயே "முட்டிக்கொண்டது". அதாவது ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக எலான் மஸ்க் பொறுப்பேற்ற வேகத்திலேயே இவ்விருவருக்குள்ளும் சண்டை வந்துள்ளது!

என்ன சண்டை?

என்ன சண்டை?

ட்விட்டர் தளத்தில் இனிமேல் யாருக்கு வேண்டுமானாலும் ப்ளூ டிக் (Blue Tick) கிடைக்கும். அதற்காக நீங்கள் மாதத்திற்கு 8 அமெரிக்க டாலர்கள் என்கிற சந்தா தொகையியை செலுத்தினால் மட்டுமே போதும் என்கிற எலான் மஸ்க்கின் அறிவிப்பானது அமெரிக்க செனட் ஆன எட் மார்கியை கடுப்பாக்கி உள்ளது!

எனவே அவர் எலான் மஸ்க்கை கண்டித்து ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் "வாஷிங்டன் போஸ்ட்டை சேர்ந்த ஒரு நிருபர், எனது பெயரில் ஒரு போலியான ட்விட்டர் அக்கவுண்ட்டை மிகவும் எளிதாக உருவாக்கி உள்ளார். மேலும் 8 அமெரிக்க டாலர்களை செலுத்துவதன் மூலம் அவரால் மிகவும் எளிமையான ப்ளூ டிக்கையும் பெற முடிந்தது" இது தான் உங்கள் ட்விட்டர் ப்ளூ டிக் வெரிஃபிகேஷனின் லட்சணமா? என்று எலான் மஸ்க்கை கடுமையாக சாடி இருந்தார்.

நக்கலாக பதில் சொன்ன எலான் மஸ்க்!

நக்கலாக பதில் சொன்ன எலான் மஸ்க்!

அமெரிக்க செனட்டரின் கடிதத்திற்கு ஒரு ட்வீட் வழியாக பதிலளித்த எலான் மஸ்க் - "ஒருவேளை உங்களுடைய உண்மையான ட்விட்டர் அக்கவுண்ட் ஆனது போலியான அக்கவுண்ட் போல் தெரிந்து இருக்கலாம்?" என்று நக்கலாக பதில் அளித்து இருந்தார்!

அதுமட்டுமின்றி சுமார் ஒரு மணி நேரம் கழித்து, எலான் மஸ்க் மீண்டும் ஒரு ட்வீட்-ஐ போஸ்ட் செய்தார். அதில் "உங்கள் ப்ரொபைல் பிக்சர் ஆனது ஏன் மாஸ்க் அணிந்து இருக்கிறது? என்று கேள்வி எழுப்பி.. செனட்டரின் கோபத்தை மேலும் மேலும் அதிகமாக்கினார்!

நீங்களே சரி பண்ணிடுங்க.. இல்லனா?

நீங்களே சரி பண்ணிடுங்க.. இல்லனா?

எலான் மஸ்க்கின் நக்கலான பதில்களை தொடர்ந்து, அமெரிக்க செனட்டர் ஆன எட் மார்கி மீண்டும் அவருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அதில் "உங்கள் நிறுவனத்தை நீங்களே சரிசெய்யுங்கள், இல்லை என்றால் அதை காங்கிரஸ் கட்சி செய்யும்" என்று நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்!

மேலும் ஒரு ட்வீட் வழியாக "எலான் மஸ்க்கால் எனது ட்வீட்களுக்கு பதிலளிக்க முடியும், ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் எனது கடிதத்திற்கு பதிலளிக்க முடியவில்லை மற்றும் ட்விட்டர் சரிபார்ப்பு பற்றிய என்னுடைய அடிப்படை கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியவில்லை" என்றும் கூறி உள்ளார்!

கோடீஸ்வரர்கள் முக்கியம் இல்லை!

கோடீஸ்வரர்கள் முக்கியம் இல்லை!

வரிசையான ட்வீட்கள் மூலம் எலான் மஸ்க்கை வறுத்தெடுக்கும் அமெரிக்க செனட்டர் - "தோல்வியுற்ற இந்த பெருநிறுவனத்தின் சுய கட்டுப்பாடு சகாப்தத்தை, காங்கிரஸ் கட்சி ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் மற்றும் கோடீஸ்வரர்களின் விருப்பத்திற்கு மேல் பயனர் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டங்களை இயற்ற வேண்டும்," என்று அவர் கூறி உள்ளார்!

இதுதொடர்பாக (தற்போது வரையிலாக) எலான் மஸ்க் எந்த பதிலையும் அளிக்கவில்லை! மீறி ஏதாவது ஒரு பதிலை சொன்னாலும் கூட.. அதுவும் நக்கலடிக்கும்படிதான் இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

Best Mobiles in India

English summary
Elon Musk Warned by US Senator Ed Markey For Mocking him on Twitter. What happened exactly?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X