Home
News

சோலி முடுஞ்சுது.. Gmail-க்கு ஆப்பு வைக்கும் எலான் மஸ்க்.. புது Xmail ரெடி.. இது எப்போது அறிமுகம்?

ஜிமெயில் (Gmail) தளத்திற்கு போட்டியாக எலான் மஸ்கின் (Elon Musk) எக்ஸ் (X) நிறுவனம் விரைவில் எக்ஸ்மெயில் (Xmail) என்ற புதிய ஈமெயில் (Email) சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இது ஜிமெயில் தளத்தை மொத்தமாக இழுத்து மூடப்போகிறதா? இது உண்மையா?

Xmail: உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் எலான் மஸ்க் டிவிட்டரை எக்ஸ் என்ற பெயருக்கு மாற்றிய பிறகு, மீண்டும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவர இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. எலான் மஸ்க் விரைவில் அவருக்கு சொந்தமான ஈமெயில் சேவையை எக்ஸ்மெயில் என்ற பெயருடன் அறிமுகம் செய்யவுள்ளது.

சோலி முடுஞ்சுது.. Gmail-க்கு ஆப்பு வைக்கும் எலான் மஸ்க்..

Gmail vs Xmail: ஜிமெயில் பயன்படுத்தும் நபர்களில் நீங்களும் ஒருவரா? ஆமாம், என்றால் இந்த விஷயத்தை நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். எக்ஸ்மெயில் எனப்படும் புதிய மெயில் சேவை உலகளவில் வெளியிடப்படவுள்ளது. இந்த மெயில் சேவை பயன்பாட்டிற்கு வந்தால், மக்கள் பயன்படுத்தும் ஜிமெயில் சேவை மொத்தமாக படுத்துவிடும் என்று வதந்திகள் பரவி வருகிறது.

எக்ஸ்மெயில் (Xmail) என்றால் என்ன? நீங்களும் நம்பகமான ஜிமெயில் சேவையை பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால், இந்த புதிய மெயில் சேவை பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். முதலில் எக்ஸ்மெயில் (Xmail) என்றால் என்ன? என்பதை பார்க்கலாம். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் பின்னால் இருக்கும் எலோன் மஸ்க்கின் சாத்தியமான மின்னஞ்சல் சேவையாக எக்ஸ்மெயில் வெளிவரப்போகிறது.

அறிமுகம் எப்போது? இது ட்விட்டராக இருந்த அவரது X தளத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று ஒருதரப்பு கூறுகிறது. ஆனால், இங்கே கேட்ச் உள்ளது. எக்ஸ்மெயில் என்பது இன்னும் ஒரு வதந்தியாகவே இருக்கிறது. இது பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் வெளியீட்டு தேதி பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிமெயில் vs எக்ஸ்மெயில் vs ஈமெயில்: இதை ஏன் திடீரென மக்கள் ஜிமெயில் உடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள்? இதற்கு பெரியளவு காரணம் என்று எதுவுமே இப்போதைக்கு இல்லை. ஆனால், ஜிமெயில் என்பது நாம் அனைவரும் அறிந்த மற்றும் விரும்புகின்ற ஈமெயில் சேவையாக திகழ்கிறது. உலகளவில் உள்ள பெரும்பாலான மக்கள் இந்த சேவையை தான் இப்போது வரை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். இது பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது.

சோலி முடுஞ்சுது.. Gmail-க்கு ஆப்பு வைக்கும் எலான் மஸ்க்..

கூகுள் மெயில்: குறிப்பாக ஜிமெயில், பல அம்சங்களைக் கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக கூகுள் டிரைவ் (Google Drive) மற்றும் கேலண்டர் (Calendar) போன்ற பிற Google சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. எக்ஸ்மெயில் இது அனைத்தையும் வழங்குமா என்பது தெளிவாகவில்லை. எக்ஸ்மெயில் என்பது இப்போதைக்கு காற்றில் பரவும் ஒரு கிசுகிசுப்பாக மட்டுமே இருக்கிறது.

எலான் மஸ்க்: மறுபுறம், எலான் மஸ்க் செய்யும் அதிரடி மாற்றங்களை இதற்கு முன்பு இந்த உலகம் கொண்டிருப்பதனால், எக்ஸ்மெயில் வெளிவந்தால், ஜிமெயில் சேவை காலி என்ற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது என்பதே உண்மையாகும். மற்றொரு காரணம் என்னவென்றால், சமீபத்தில் ஜிமெயில் விரைவில் மூடப்பட்டலாம் என்ற செய்தி ஒன்று பரவலாக பரவி வந்தது.

பீதியடைய வேண்டாம்! கூகுள் ஏற்கனவே இந்த வதந்திகளை மறுத்துள்ளது. இந்த காரணத்தை வைத்து சிலர் எக்ஸ்மெயில் தான் அடுத்த தலைமுறை மின்னஞ்சல் என்று கருத்தை பரப்பி வருகின்றனர். ஆனால், உண்மையில், இப்போதே ஜிமெயில் பயனர்களுக்கு Outlook அல்லது Yahoo Mail போன்ற மற்ற ஈமெயில் சேவை எளிதாக பயன்படுத்த கிடைக்கிறது. இப்போதைக்கு நமக்கு தெரிந்த ஒருசில விஷயங்களை மட்டும் கருத்தில் கொண்டு காத்திருப்பது சிறப்பானது.

எக்ஸ்மெயில் உண்மையில் வெளியாகும் பொழுது அது நம்மை ஆச்சரிப்படுத்தலாம். அல்லது எக்ஸ்மெயில் ஒரு தோல்வியாக கூட இருக்கலாம். இப்போதைக்கு, நாம் Gmail உடன் இணைந்திருப்பது தொடரட்டும். விரைவில் எக்ஸ்மெயில் பற்றிய கூடுதல் விபரங்களை பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Elon Musk Wants To Take On Gmail With His Xmail App
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X