"சொன்னதை தான் செய்வேன், செய்வதை தான் சொல்வேன்" டொனால்ட் டிரம்ப்பை மீட்டு கெத்து காட்டிய Elon Musk!

|

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு ட்விட்டரில் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. தற்போது வரை டிரம்ப் எந்த ட்வீட்டும் செய்யவில்லை. ஜாக் டோர்சி முன்னதாக விதித்த தடையை நீக்கி டொனால்ட் டிரம்பை மீண்டும் ட்விட்டரில் கொண்டு வந்துள்ளார் Elon Musk. டொனால்ட் டிரம்ப் ட்விட்டர் கணக்கு ஏன் தடை செய்யப்பட்டது, தற்போது மஸ்க் அந்த தடை அகற்ற காரணம் என்ன என்று பார்க்கலாம்.

15 மில்லியன் ட்விட்டர் பயனர்கள் அளித்த வாக்கு

15 மில்லியன் ட்விட்டர் பயனர்கள் அளித்த வாக்கு

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய நாள் முதல் அதில் பல மாற்றங்களை செய்து வருகிறார். அதன்படி சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு விதிக்கப்பட்ட ட்விட்டர் தடை நீக்கப்பட வேண்டுமா என பயனர்களிடம் கருத்துக் கணிப்பை நடத்தினார். இந்த வாக்கெடுப்பில், 15 மில்லியன் ட்விட்டர் பயனர்கள் டிரம்பை மீண்டும் ட்விட்டரில் கொண்டு வர வேண்டும் என வாக்களித்தனர்.

டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் தடை நீக்கம்

டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் தடை நீக்கம்

இதையடுத்து டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் கணக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்பின் கணக்கு ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக காண்பிக்கப்பட்டாலும் இதுவரை எந்த ட்விட்டும் அதில் பதிவிடப்படவில்லை.

செய்வதை சொன்ன மஸ்க்

செய்வதை சொன்ன மஸ்க்

ட்விட்டரை வாங்குவதற்கு முன்பே மஸ்க் இதுகுறித்து பேசினார். ட்விட்டரை மஸ்க் கைப்பற்றுவதாக இணையதளத்தில் செய்திகள் வெளியான போது, மஸ்க் ஒரு நல்ல மனிதர் என டிரம்ப் குறிப்பிட்டார்.

தொடர்ந்து டிரம்ப் இன் ட்விட்டர் கணக்குக்கு தடை விதித்தமைக்கு மஸ்க் பகிரங்கமான விமர்சனங்களை முன் வைத்தார். சமூகவலைதளத்தில் மீண்டும் இணையும்படி டிரம்புக்கு அழைப்பு விடுத்தார், ஆனால் அவரது அழைப்பு டிரம்ப் மூலம் பணிவுடன் நிராகரிக்கப்பட்டது.

சொன்னதை செய்த மஸ்க்

சொன்னதை செய்த மஸ்க்

இந்தநிலையில் மஸ்க் குறிப்பிட்டப்படி டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் கணக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதை மஸ்க், ட்விட்டரை வாங்கிய உடனே செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் கணக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டாலும், அதில் இதுவரை எந்த ட்வீட்டும் செய்யப்படவில்லை. டிரம்பின் பதில் இந்த தடை நீக்கத்திற்கு என்ன என்றும் இதுவரை தெரியவில்லை.

ஏன் தடை செய்யப்பட்டது?

ஏன் தடை செய்யப்பட்டது?

அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் ஜனநாயகக் கட்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து ஜனநாயக கட்சி ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு போன்ற பல்வேறு புகார்கள் இந்த கலவரத்துக்கு காரணமாக முன்வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் டிரம்ப் சமூகவலைதளங்களில் தேர்தல் முறைகேடு நடைபெற்றதாக கூறி பல பதிவுகளை தொடர்ச்சியாக பதிவிட்டார். டிரம்ப் பதிவிட்ட பதிவுகள் வன்முறையை தூண்டும்விதமாக இருக்கிறது என அவரது டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் தளங்கள் முழுமையாக முடக்கப்பட்டன.

ட்வீட் எடிட் பட்டன்

ட்வீட் எடிட் பட்டன்

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய நாள் முதல் அதில் பல மாற்றங்களை செய்து வருகிறார். ட்விட்டரில் ட்வீட் எடிட் ஆப்ஷன் ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைத்து வருகிறது. இந்த ட்வீட்டர் ப்ளூ சந்தா சேவையும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் மட்டுமே கிடைக்கிறது. இந்த நிலையில் ட்வீட் எடிட் பட்டன் சேவையை அனைவருக்குமானதாக மாற்ற எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ட்வீட் எடிட் ஆப்ஷன் குறித்தும் மஸ்க் முன்னதாகவே தெரிவித்திருந்தார்.

ப்ளூடிக் கட்டணம்

ப்ளூடிக் கட்டணம்

ட்விட்டரின் புதிய தலைவரான எலான் மஸ்க், ட்விட்டரின் ப்ளூ டிக் ஆப்ஷனை பெறுவதற்கு அனைத்து பயனர்களும் மாதம் 8 டாலர் செலுத்த வேண்டும் என அறிவித்தார். அதாவது இந்திய மதிப்புப்படி மாதம் ரூ.660 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பால் திகைப்பில் இருந்த பயனர்களுக்கு தற்போது விடுதலை கிடைத்திருக்கிறது.

வரவேற்கத்தக்க விஷயம்

வரவேற்கத்தக்க விஷயம்

எலான் மஸ்க் எடிட் பட்டனை அனைத்து பயனர்களுக்கும் இலவசமாகக் கிடைக்கச் செய்ய திட்டமிட்டுள்ளதாக பிளாட்ஃபார்மரின் கேசி நியூட்டன் தெரிவித்துள்ளார். தற்போது இந்த சேவையானது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள Twitter Blue சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. உண்மையாகவே எலான் மஸ்க் ட்வீட் எடிட் பட்டன் ஆப்ஷனை அனைவருக்கும் வழங்கும்பட்சத்தில் இது மிகவும் வரவேற்கத்தக்க விஷயமாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Elon Musk unbanned and brought back Donald Trump's Twitter account: Here the Reason of Ban and Unban.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X