டுவிட்டர் இல்லனா யூடியூப்.,நீ வா தலைவா: யூடியூப் பக்கம் கவனத்தை திருப்பும் எலான் மஸ்க்- ஒரே மீம்., உலக ஃபேமஸ்!

|

"யூடியூப்பில் மோசடி விளம்பரங்கள் ஒளி பரப்பப்படுவதாக" டுவிட்டரில் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் டுவிட் செய்திருந்தார். மேலும் இந்த மோசடி விளம்பரங்களை குறிக்கும் விதமாக மீம் ஒன்றையும் டுவிட்டரில் வெளியிட்டார். இந்த பதிவு தற்போது பெரிய சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. காரணம் முன்னதாக, எலான் மஸ்க் இதேபோல் டுவிட்டரை சாடிய போதுதான் அதை அவர் வாங்குவதற்கான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. அதேபோல் தற்போது எலான் மஸ்க் தனது கவனத்தை யூடியூப் பக்கம் திருப்பி இருக்கிறார். இதனால் முன்கூட்டியே உஷாரான நெட்டிசன்கள், யூடியூப்பை வாங்கி விடுங்கள் என டுவிட் செய்து வருகின்றனர்.

பிரபல வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப்

பிரபல வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப்பில் உள்ள விளம்பரங்கள் குறித்து மஸ்க் பதிவிட்ட டுவிட் பலரின் கவனத்தை திசை திருப்பி இருக்கிறது. யூடியூப் விளம்பரங்கள் குறித்து எலான் மஸ்க் பதிவிட்ட டுவிட்டர் பதிவில், "YouTube இடைவிடாத மோசடி விளம்பரங்களை ஒளிப்பரப்புகிறது" என குற்றம் சாட்டி இருந்தார்.தொடர்ந்து யூடியூப் விளம்பரங்கள் குறித்து ஒரு மீம் ஒன்றையும் மஸ்க் வெளியிட்டார். மஸ்க்கின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பல விதமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

நெட்டிசன்கள் கருத்து

"தயவு செய்து யூடியூப்பை வாங்கிவிடுங்கள்" என்று மேட் வாலாஸ் என்ற பிரபல யூடியூபர் டுவிட் செய்துள்ளார். மற்றொரு பயனர், மஸ்க் பார்வை யூடியூப் பக்கம் திரும்பி உள்ளது Elon, Come Back என குறிப்பிட்டுள்ளார். மஸ்க் யூடியூப்பை வாங்கும்பட்சத்தில் அது சிறந்த முடிவாக இருக்கும் என மற்றொரு பயனர் டுவிட் செய்துள்ளார்.

44 பில்லியன் டாலர் ஒப்பந்தம்

44 பில்லியன் டாலர் ஒப்பந்தம்

டுவிட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு வாங்குவது உறுதி செய்யப்பட்டது. ஆனால் போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள் குறித்த முறையான ஆவணங்களை டுவிட்டர் நிறுவனம் சமர்பிக்கவில்லை என குறிப்பிட்ட மஸ்க் இதுகுறித்த தரவுகள் சமர்பிக்கும் வரை இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படாது என தெரிவித்தார். அதேபோல் தரவுகளை வழங்க மறுத்ததன் மூலம் டுவிட்டர் தனது ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறியுள்ளதாகவும், இந்த மீறல் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்க வழிவகுக்கும் எனவும் மஸ்க் தரப்பு வழக்கறிஞர்கள் குழு டுவிட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியது.

ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள்

ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள்

டுவிட்டரில் 5 சதவீதம் மட்டுமே ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் இருக்கிறது என டுவிட்டர் நிர்வாகம் தெரிவித்திருக்கும் நிலையில் அதற்கான முறையான ஆவணங்களை கேட்டு மஸ்க் வலியுறுத்தி வருகிறார். டுவிட்டரில் 5% மட்டுமே போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள் இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை இதுவரை தான் பார்க்கவில்லை என குறிப்பிட்ட மஸ்க் டுவிட்டரில் 20 முதல் 25% வரையிலான ஆட்டோமேட்டட் கணக்குகள் இருக்கலாம் என கணக்கிப்படுவதாக தெரிவித்தார்.

யூடியூப் குறித்து மஸ்க் டுவிட்

யூடியூப் குறித்து மஸ்க் டுவிட்

டுவிட்டரை மஸ்க் வாங்குவது உறுதி செய்யப்பட்ட உடன் டுவிட்டரின் பங்கு சரிவை சந்தித்தது. இதையடுத்து டுவிட்டரை வாங்குவதாக மஸ்க் அறிவித்தபோது இருந்த பங்கு மதிப்பு தற்போது இல்லை. எனவே மஸ்க் டுவிட்டரை குறைந்த விலையில் வாங்க முயற்சிக்கிறார் என விமர்சனங்கள் எழத் தொடங்கின. இதையடுத்து டுவிட்டரில் 5% மட்டுமே ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் இருக்கிறது என்ற ஆதாரங்களை முறையாக சமர்பிக்கும் வரை டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் நிறைவேற்றப்படாது என்று தெரிவித்த மஸ்க், குறைந்த விலையில் ஒப்பந்தம் என்பது கேள்விக்கு அப்பாற்பட்டது. ஒருவர் குறிப்பிடுவதை விட மோசமான ஒன்றுக்கு நீங்கள் அதே விலையை கொடுத்து வாங்க முடியாது என குறிப்பிட்டார். மஸ்க் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவாரா என்ற சந்தேகம் எழுந்து வரும் நிலையில் யூடியூப் குறித்து அவர் டுவிட் செய்திருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Elon Musk tweets about Scam Ads on Youtube: "Please Buy Youtube" Twitter User Says

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X