Home
News

ஹோம் வொர்க் கதை முடிஞ்சு.. வருகிறது பேபி க்ரோக் சாட்பாட்.. ஆரம்பித்த எலான் மஸ்க்.. கிட்ஸ்களுக்கு AI சாட்பாட்!

எக்ஸ்ஏஐ (xAI) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க், பேபி க்ரோக் (Baby Grok) என்னும், குழந்தைகளுக்கான ஏஐ சாட்பாடை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக மட்டுமே, உருவாக்கப்பட இருப்பதால், அவர்களுக்கான கன்டென்ட் பில்டர்கள், கிட்ஸ்-ப்ரெண்ட்லி யூசர் இன்டர்பேஸ், பேரண்டல் கன்ட்ரோல் போன்ற பீச்சர்களுடன் கிடைக்க இருப்பது தெரிகிறது. இதனால், குழந்தைகளுக்கான ஏஐ சாட்பாட்கள் என்னும் போட்டி தொடங்கப்பட்டு இருக்கிறது. இதுபோன்ற கிட்ஸ்-சாட் பாட்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

ஏஐ சார்பாட் (AI Chatbot):
இந்திய உள்பட உலகளவில் ஏஐ சாட்பாட்களின் வளர்ச்சி இதுவரை கண்டிராத உயரத்தை எட்டி வருகின்றன. சாட்ஜிபிடியின் வருகைக்கு பிறகு ஜெமினி ஏஐ, மெட்டா ஏஐ, போபைலட், க்ரோக் ஏஐ போன்ற அடுத்தடுத்த சாட்பாட்கள் களமிறங்கின. இவை அனைத்தும் கூகுள், மெட்டா, ஓப்பன் ஏஐ, எக்ஸ்ஏஐ போன்ற மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து களமிறங்கி இருக்கின்றன.

குட்டீஸ் ரெடியா? ஹோம் வொர்க் கதை முடிஞ்சு.. வருகிறது பேபி க்ரோக்!

இதானால், அவற்றில் அடுத்தடுத்த அப்டேட்கள், பீச்சர்கள் போன்றவறை சேர்க்கப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் எக்ஸ்ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க், பேபி க்ரோக் என்னும் குழந்தைகளுக்கான ஏஐ சாட்பாட் வெளியிடப்பட இருப்பதை அவரது எக்ஸ் (X) தளம் மூலம் உறுதி செய்திருக்கிறார். இதுவும் ஏஐ சாட்பாட் போல வேலை செய்யும்.

ஆனால், குழந்தைகளுக்கான கன்டென்ட்களை மட்டுமே கொடுக்கும். ஆகவே, கிட்ஸ் சேப்டி (குழந்தைகள் பாதுகாப்பு) இதில் உறுதி செய்யப்பட இருக்கிறது. அதேபோல கிட்ஸ்-ப்ரெண்ட்லி யூசர் இன்டர்பேஸ் (Kids Friendly User Interface), பேரண்டல் கன்ட்ரோல் (Parental Control) மற்றும் கிட்ஸ் கன்டென்ட் பில்டர்கள் (Kids Content Filters) ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.

குட்டீஸ் ரெடியா? ஹோம் வொர்க் கதை முடிஞ்சு.. வருகிறது பேபி க்ரோக்!

* கிட்ஸ் பேஸ்டு (Kids Based)
* பீச்சர்கள் (Features)
* பாதுகாப்பு (Safety)
* அவைலபிலிட்டி (Availability)

கிட்ஸ் பேஸ்டு:
இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக மட்டுமே உருவாக்கப்பட இருப்பதால், குறிப்பிட்ட வயதுக்கு ஏற்ப லிமிடெட்ட கன்டென்ட்களை மட்டுமே கொடுக்க இருக்கிறது. வழக்கமான ஏஐ சாட்பாட்களை போலல்லாமல், குழந்தைகள் விரும்படியான கலர், டிசைன், ஈஸி அக்சஸ், யூசர் இன்டர்பேஸ் போன்றவை கிடைக்க இருப்பது உறுதியாகும்.

பீச்சர்கள்:
ஏஐ சாட்பாட்களில் கேள்விகளை கேட்டு அதற்கு பதில்களை பெறுவது போல வழக்கமாக பீச்சர் கிடைக்க இருக்கிறது. ஆனால், இதில் குழந்தைகளுக்கான கதைகள், ஹோம் வொர்க் கேள்விகள், நைட் ஸ்டோரிஸ் போன்றவறை கிடைக்க இருக்கிறது. அதேபோல இமேஜ் ஜெனரேஷன் எதிர்பார்க்கலாம். இதுவும் குழந்தைகளுக்கான சேப்டியுடன் கிடைக்கும்.

குட்டீஸ் ரெடியா? ஹோம் வொர்க் கதை முடிஞ்சு.. வருகிறது பேபி க்ரோக்!

சேப்டி:
பெரியவர்களுக்கான சாட்பாட்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான கன்டென்ட்கள் மட்டுமே அதில் பீட் (Feed) செய்யப்பட இருக்கிறது. இதுபோக குழந்தைகளின் பெற்றோர்களுக்கு கன்ட்ரோல் கொடுக்கும்படி பீச்சர்கள் கொடுக்கப்பட இருக்கிறது. ஆகவே, குழந்தைகளை பெற்றோர்கள் கண்காணித்து கொள்ளவும் முடியும்.

அவைலபிலிட்டி:
இது ஆரம்பகட்டத்தில் இருக்கிறது. குழந்தைகள் பயன்படுத்த இன்னும் கிடைக்கவில்லை. அடுத்த சில மாதங்களில் டெஸ்டிங் பேஸ் அல்லது பீட்டா வெர்ஷன் போல கிடைக்கலாம். அதன்பிறகு ஒட்டுமொத்தமாக பயன்பாட்டுக்கு எதிர்பார்க்கலாம். இந்த பேபி க்ரோக் ஏஐ சாட்பாடுக்கு வயது வரம்பும் நிர்ணயிக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது.

குட்டீஸ் ரெடியா? ஹோம் வொர்க் கதை முடிஞ்சு.. வருகிறது பேபி க்ரோக்!

இப்போது எதற்கு?
ஏற்கனவே இருக்கும் ஏஐ சாட்பாட்களையும் குழந்தைகளும் பயன்படுத்த முடியும் என்பதை மறுக்க முடியாது. ஆனால், அது அவர்களது வயதுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளுடன் இருக்காது. இதனாலேயே குழந்தைகளுக்கான சாட் பாட்டின் தேவை ஏற்பட்டுள்ளது. கூகுள், மெட்டா, ஓப்பன் ஏஐ போன்ற நிறுவனங்களும் இதே போல கிட்ஸ் சாட்பாட்களின் கவனம் செலுத்த வாய்ப்புள்ளது.

கிட்ஸ் ஏஐ சாட்பாட் எதிர்காலம்?
சோஷியல் மீடியா ஆப்களை போலவே ஏஐ சாட்பாட்களுக்கு பேரண்டல் கன்ட்ரோல் கிடைக்கும். ஏற்கனவே, ஜெமினி ஏஐ சாட்பாடில் பேரண்ட்களின் அக்கவுண்ட்களை இணைக்கும் பீச்சர் கிடைக்கிறது. அதேபோல மற்ற ஆப்களுக்கும் கிடைக்கலாம். அல்லது, பேபி க்ரோக் போல பிரத்யேகமாக குழந்தைகளுக்கு என்றே ஆப்கள் கிடைக்கலாம். ஆனால், வயது வாரியாக கட்டுப்பாடுகள் வருவது உறுதியாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Elon Musk To Launch Baby Grok AI Chatbot Developed By xAI Designed For Kids What We Know About it
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X