Home
News

TruthGPT.. மனிதர்களை காப்பாற்றும்.. Elon Musk சொன்ன "அந்த" வார்த்தை.. அப்போ சினிமாவுல பார்த்தது உண்மை தானா?

ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸின் (Artificial Intelligence) அபார வளர்ச்சியானது எப்படி மனிதர்களின் வேலைகளை பறித்து வருகிறது என்பதற்கு சாட்ஜிபிடி-ஐ (ChatGPT) விட ஒரு நல்ல நிகழ்கால எடுத்துக்காட்டை கூறவே முடியாது. ஆனால் சிலர், இது மனிதர்களின் வேலைகளை பறிப்பதோடு நிற்கப்போவதில்லை என்று நம்புகிறார்கள்!

அதாவது சிலர், திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்படுவது போலவே - ஒருகட்டத்தில் - ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸானது மனிதர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடும் என்று நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை எலான் மஸ்க்கிடமும் (Elon Musk) உள்ளது போல் தெரிகிறது. ஏனென்றால் அவர் கூறிய "வார்த்தைகள்" அப்படி!

TruthGPT.. எலான் மஸ்க் சொன்ன

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ட்ரூத்ஜிபிடி (TruthGPT) என்கிற ஒரு சொந்த ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸை உருவாக்க உள்ளதாக கூறி உள்ளார். அவரின் கூற்றுப்படி ட்ரூத்ஜிபிடி என்றால் ட்ரூத்-சீக்கிங் ஏஐ (Truth-seeking AI) ஆகும். அதாவது உண்மைகளை தேடும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் ஆகும்.

ஃபாக்ஸ் நியூஸ் (Fox News) உடனான ஒரு உரையாடலில் கலந்து கொண்ட எலான் மஸ்க், ட்ரூத்ஜிபிடி-ஐ உருவாக்கும் தனது திட்டத்தை பகிர்ந்து கொண்டார். கடந்த சில காலமாகவே எலான் மஸ்க் தனது சொந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை உருவாக்க போவதாக தகவல்கள் வெளியாகின. தற்போது அந்த தகவல் உண்மையாகி உள்ளது.

எலான் மஸ்க்கின் கூற்றுப்படி ட்ரூத்ஜிபிடி ஆனது இந்த பிரபஞ்சத்தின் இயல்பையும், அதிலுள்ள ரகசியங்களையும், அதிகபட்ச உண்மைகளையும் புரிந்துகொள்வதற்காகவும், அதில் முழுமையாக கவனம் செலுத்துவதற்காகவும் உருவாக்கப்படவுள்ள ஒரு ஏஐ ப்ரோகிராம் (AI Programme) ஆகும். அதுமட்டுமின்றி எலான் மஸ்க் ட்ரூத்ஜிபிடி-யின் பாதுகாப்பு குறித்தும் பேசி உள்ளார்.

"இது (ட்ரூத்ஜிபிடி) பாதுகாப்பிற்கான சிறந்த பாதையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன், பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வதில் அக்கறை கொண்ட ஒரு ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸால், மனிதர்களை நிர்மூலமாக்க முடியாது; அது சாத்தியமில்லை, ஏனென்றால் நாம் (மனிதர்கள்) சுவாரஸ்யமானவர்கள்; இந்த பிரபஞ்சத்தின் ஒரு பகுதி" என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.

எலான் மஸ்க்கின் இந்த "வார்த்தைகள்" ஏற்கனவே ஏஐ தொடர்பான அச்சத்தில் உள்ள மக்களின் மத்தியில் பல வகையான கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பி உள்ளது. ட்ரூத்ஜிபிடி தான் பாதுகாப்பான ஒரே பாதை (Only path to safety) ஆக இருக்குமென்றால், எலான் மஸ்க் உண்மையில் என்ன சொல்ல வருகிறார்?

மற்ற ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்கள் பாதுகாப்பற்றவை என்று கூறுகிறாரா? மற்ற ஏஐ-கள் மனிதர்களை இந்த பிரபஞ்சத்தில் இருந்து அகற்றும் என்று நம்புகிறாரா? ஆக ட்ரூத்ஜிபிடி என்பது ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி மற்றும் கூகுள் நிறுவனத்தின் பார்ட் போன்ற ஏஐ-களுக்கு எதிரான போட்டி இல்லையா? மாறாக மனிதர்களை காப்பாற்றும் ஒரு ஏஐ-ஆ? இந்த கேள்விகளுக்கெல்லாம் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
elon musk to create truthgpt an ai which understand the universe and unlikely to annihilate humans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X