Home
News

பில் கேட்ஸை உருவக் கேலி செய்வது போன்ற பதிவை வெளியிட்ட எலான் மஸ்க்.!

இணையத்தில் எப்போதும் புதிய டிரெண்டிங் டாபிக் கொடுப்பவர் தான் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க். அதுவும் சமூக வலைதளங்களில், தனது பதிவுகளின் மூலம் அவ்வப்போது ஹாட் டிரெண்டாகி விடுகிறார் என்றுதான் கூறவேண்டும்.

ஆப்பிள் நிறுவனத்தால்

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டு சர்ச்சைக்குள்ளான எமோஜியைக் கொண்டு மைக்ரோசாப்ட் நிறுவனரை வம்புக்கு இழுத்துள்ளார் எலான் மஸ்க். அதாவது எலான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்in case u need to lose a boner fast என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

குறிப்பாக அந்த புகைப்படத்தில் ஒரு பக்கத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்கேட்ஸும், மற்றொரு புறம் ஆப்பிள் நிறுவனத்தின் எமோஜியில் உள்ள தொப்பையுடன் இருக்கும் ஆன் படத்தினையும் இணைத்து வெளியிட்டுள்ளார். குறிப்பாக இந்த பதிவை அலசி ஆராய்ந்த நெட்டிசன்கள் சரியான காரணங்கள் புரியாமல் திணறி நின்றனர்.

ம் சிலர் இதுகுறித்து கருத்துகளை பகிர்ந்

ஆனாலும் சிலர் இதுகுறித்து கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதாவது மைக்ரோசாப்ட் நிறுவனம், டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பை அரை பில்லியன் மதிப்பிலானதாகக் குறைக்க முயற்சித்தது என்று குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இதற்கு பதிலடி கொடுக்கத்தான் மஸ்க் இப்படி செய்துள்ளார் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 கடந்த மார்ச் மாதத்தில் வெளியான

அதேபோல் கடந்த மார்ச் மாதத்தில் வெளியான ஐஓஎஸ் 15.4 பதிப்பில், ஆப்பிள் நிறுவனம் 35 புதிய எமோஜிகளை வெளியிட்டது. குறிப்பாக இதில் ஆண் கருவுற்று இருப்பது போன்ற எமோஜி, இரு பாலினத்திற்கும் சமமான எமோஜி போன்றவைகள் அடங்கும். குறிப்பாக இதில் ஆண் கருவுற்றிருக்கும் எமோஜி அதிக சர்ச்சையை ஏற்படுத்தியது என்றுதான் கூறவேண்டும்.

எலான் மஸ்க் சமீபத்தில்

எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கினார். டுவிட்டரின் அதிக பங்குகளை வாங்கியதையடுத்து தற்போது டுவிட்டரின் மொத்த பங்குகளையும் வாங்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். ட்விட்டரின் மிகப் பெரிய பிரபலங்களில் பிரதானமான ஒருவர் எலான் மஸ்க். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர், உலகப் பணக்காரர்கள் பட்டியல் பிரதான ஒருவர் என்ற பல புகழ் இவருக்கு இருந்தாலும் தனது டுவிட்டர் பக்கத்தில் கேட்கப்படும் ஆக்கப்பூர்வமான கேள்விக்கான பதில்கள் மற்றும் உரையாடல்களை அடிப்படை தரப்பினரிடமும், இளைஞர்களிடமும் மேற்கொள்வார். இவர் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியதையடுத்து எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குனர் குழு மீட்டிங்கில் இணைய இருக்கிறார் என தகவல்கள் வெளியானது. ஆனால் மஸ்க் இந்த குழுவில் இணைவதற்கு விருப்பமில்லை என தெரிவித்துவிட்டார்.

நிறுவன தலைவருக்கு எலான் மஸ்க் அனுப்பிய

நிறுவன தலைவருக்கு எலான் மஸ்க் அனுப்பிய கடிதத்தில், உலகளாவிய சுதந்திரமான பேச்சுக்கான தளமாக டிவிட்டர் இருக்கும் என நம்பிக்கை வைத்தே முதலீடு செய்தேன், பேச்சு சுதந்திரம் என்பது சமூகத்தின் அடிப்படை உரிமை என நான் நம்புகிறேன் என அதில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் முழு பங்குகளையும் வாங்க இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியானது, தொடர்ந்து மஸ்க் I Made an Offer என டுவிட் செய்திருந்தார். தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் 100% பங்குகளையும் ஒரு பங்கு 54.20 டாலர் என்ற வீதத்தில் வாங்க தயார் எனவும் விற்பனை தொகையை பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் குறிப்பிட்டிருந்தார்.

Best Mobiles in India

English summary
Elon Musk teasing Bill Gates with a pregnant emoji: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X