Home
News

ரூ.35,000-ஆ.. ஆள விடப்பா சாமி.. தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டு கொண்ட எலான் மஸ்க்!

இந்தியாவின் பிராட்பேண்ட் சேவைகள் ஆனது உலகிலேயே மிகவும் ப்ரைஸ்-சென்சிடிவ் (Price Sensitive) கொண்டசேவையாக பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் மாதத்திற்கு வெறும் ரூ.399 முதல் தொடங்கும் ஹோம் பிராட்பேண்ட் திட்டங்களை வழங்குவதால், இந்திய பிராட்பேண்ட் சந்தையானது மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த ஒன்றாக திகழ்கிறது

இப்படிப்பட்ட சந்தையில், ஸ்டார்லிங்க் (Starlink) போன்ற சேவையை கொண்டுவரும் போது எலான் மஸ்க் (Elon Musk) எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும். ஆனால் அவர் இதை சீரியஸ் ஆக எடுத்துக்கொண்டது போல் தெரியவில்லை. நாட்டில் உள்ள மிகவும் தொலைதூர பகுதிகளில் கூட அதிக கிடைக்கும் தன்மை மற்றும் கவரேஜை உறுதியளிக்கும் செயற்கைக்கோள் இணைய சேவையான ஸ்டார்லிங்க் ஆனது மெயின்ஸ்ட்ரீம் நுகர்வோருக்கு எட்டாமல் போகலாம் என்பது போல் தெரிகிறது.

தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டு கொண்ட எலான் மஸ்க்!

ஏனென்றால், ஸ்டார்லிங்க் சேவையின் வாடிக்கையாளர் வளாக உபகரணங்கள் (Customer premise equipment - CPE) ஆனது, அதாவது ஸ்டார்லிங்க் சேவையின் சாட்டிலைட் கான்ஸ்டலேஷன் உடன் இணைக்க தேவையான வன்பொருள் ஆனது ரூ.30,000 முதல் ரூ.35,000 வரை செலவாகும் என்று இந்தியா ரேட்டிங்ஸ் அண்ட் ரிசர்ச் (India Ratings and Research) மதிப்பிடுகிறது.

ஸ்டார்லிங்க் சேவையின் மாதாந்திர சந்தா கட்டணம் ரூ.3,000 - 3,500 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே இந்தியாவில் உள்ள என்ட்ரி லெவல் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களின் விலைகளை விட கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகமாகும். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது ஸ்டார்லிங்க் சேவையானது மெயின் ஸ்ட்ரீம் கஸ்டமர்களுக்கானது அல்ல என்பதை வெளிப்படையாகவே புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த செலவு வேறுபாடு ஆனது ஒரு மையப்புள்ளியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது: எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சேவையானது நிச்சயமாக இந்தியாவில் நகர்ப்புற பிராட்பேண்ட் சந்தைகளை மிகவும் வேகமாக சீர்குலைக்க வாய்ப்பில்லை. ஃபைபர் நெட்வொர்க்குகள் ஏற்கனவே நல்ல இண்டர்நெட் ஸ்பீடை (30 எம்பிபிஎஸ் முதல் 1 ஜிபிபிஎஸ் வரை) வழங்குகின்றன; அதிலும் ஸ்டார்லிங்க் சேவைக்கான செலவின் ஒரு பகுதியிலேயே வழங்குகின்றன.

ஸ்டார்லிங்கின் சேவையின் எதிர்பார்க்கப்படும் செயல்திறன் 45 எம்பிபிஎஸ் முதல் 280 எம்பிபிஎஸ் ஆக உள்ளது. இதுவும் - ஏற்கனவே பெரும்பாலான நகரங்களில் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் வழங்குவதை விட தொழில்நுட்ப ரீதியாக ஒரு பாய்ச்சல் அல்ல. ஆக எப்படி பார்த்தாலும் எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் சேவையானது ஜியோ மற்றும் ஏர்டெல்லை காலி செய்ய போவதில்லை. அவ்வளவு ஏன் இதனால் பிஎஸ்என்எல்-ஐ கூட அசைக்க முடியாது.

இதை ஆமோதிக்கும் படியாக - இந்தியாவில், சாட்டிலைட் இன்டர்நெட் ஆனது ஒரு நிரப்பு விருப்பமாக செயல்படுமே தவிர, ஏற்கனவே உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஃபைபர் பிராட்பேண்டிற்கு மாற்றாக செயல்படாது என்று இந்தியா ரேட்டிங்ஸ் அண்ட் ரிசர்ச் நிறுவனங்களின் இணை இயக்குநர் பிரியங்கா பன்சால் கூறியுள்ளார்

மேலும் இங்கே ஸ்டார்லிங்க் சேவையின் வேகத்தை பற்றி யாரும் கவலைப்படுவதாய் இல்லை. ஸ்டார்லிங்க்கின் செலவை பற்றித்தான் கவலைப்படுகிறார்கள். ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் - வாடிக்கையாளர்கள் பல மாத திட்டங்களை தேர்வு செய்யும் போது ரவுட்டர்கள் மற்றும் மோடம்களை குறைந்த அல்லது கூடுதல் கட்டணம் இல்லாமல் வழங்குகின்றன. மறுபுறம், ஸ்டார்லிங்க் சேவையானது வன்பொருளில் தான் அதிக முதலீட்டைக் கேட்கிறது. இந்தியா போன்ற மலிவு விலை தத்தெடுப்பை இயக்கும் சந்தையில், இது ஒரு வலிமையான தடையாக இருக்கும் என்பதை எலான் மஸ்க் புரிந்துகொண்டால் நல்லது!

காலப்போக்கில் பொருளாதாரம் மாறக்கூடும். அளவு மேம்படும்போது வன்பொருள் செலவுகள் குறையக்கூடும், மேலும் பிற செயற்கைக்கோள் நிறுவனங்களின் போட்டி ஆனது விலை நிர்ணயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். இதுபோன்ற மாற்றங்கள் நடந்தால் - ஸ்டார்லிங்க் சேவையானது இந்தியாவில் அதன் முக்கிய பங்கை தாண்டி விரிவடையக்கூடும்.

Best Mobiles in India

English summary
Elon Musk Starlink Service Hardware Cost Could Be Rs 35,000 India Ratings and Research Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X