Home
News

Elon Musk ஆசையில் மண் அள்ளிப்போட்ட அமைச்சர்.. ரூ.3000 Starlink பிளானில் 3 தடைகள்.. Jio, Airtel எஸ்கேப்!

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Elon Musk Starlink) சேவையானைது இன்-ஸ்பேஸ் ஒப்புதலை பெற்ற சில நாட்களுக்கு பிறகு, ஸ்டார்லிங்க் என்கிற தனியார் செயற்கைக்கோள் தொடர்பு சேவை வழங்குநர், தனது இண்டர்நெட் சேவையை மாதந்தோறும் ரூ.3,000 என்கிற செலவில் தொடங்கும் திட்டங்களின் கீழ் வழங்கும் என்று தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் மறுஆய்வு கூட்டத்தின் ஒரு பகுதியாக ஊடகங்களிடம் பேசிய மத்திய தகவல் தொடர்பு இணையமைச்சர் ஆன டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி, பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் ஜியோ அல்லது பாரதி ஏர்டெல் போன்ற டெலிகாம் ஆபரேட்டர்களுக்கு ஸ்டார்லிங்க் சேவையானது எந்த போட்டியையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று கூறியுள்ளார்.

Elon Musk ஆசையில் மண் அள்ளிப்போட்ட அமைச்சர்!

அதற்கான 3 காரணங்களையும் அவர் பட்டியலிட்டார். முதல் மற்றும் முக்கிய காரணம் - எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவைக்கு, நாடு முழுவதும் 20 லட்சம் (2 மில்லியன்) இணைப்புகள் மட்டுமே வழங்கப்படும் என்கிற வரம்பை தொலைத்தொடர்பு அமைச்சகம் நிர்ணயம் செய்துள்ளது. ஆக கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்களுக்கு பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது.

மேலும் ஸ்டார்லிங் சேவையின் அதிகபட்ச இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 200 எம்பிபிஎஸ் வரை இருக்கும் மற்றும் எதிர்பார்க்கப்படும் சராசரி வேகம் 100 எம்பிபிஎஸ் வரை இருக்கும். இதுவும் கூட ஏற்கனவே ஜியோ, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் சேவைகளின் கீழ் கிடைக்கும் ஸ்பீட் தான் என்பதால், வேகத்தை காரணமாக காட்டி ஸ்டார்லிங் சேவையால் பெரிய எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியாது.

மூன்றாவது மற்றும் கடைசி காரணம் - ஸ்டார்லிங்க் சேவையின் கட்டணம் மிகவும் அதிகமானதாக இருக்கிறது. ஸ்டார்லிங் சேவையின் முன்கூட்டிய செலவு ரூ.33,000 முதல் ரூ.35,000 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது மாதத்திற்கு ரூ.3000 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக ரூ.300 - ரூ.400 க்கு கிடைக்கும் திட்டங்களை இதனால் தோற்கடிக்க முடியாது.

ஒட்டுமொத்தமாக எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவையால், மலிவு விலையில் இந்தியா முழுவதுமான 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க்குகளை வழங்கும் இந்திய டெலிகாம் நிறுவனங்களை - தூக்கி சாப்பிட முடியாது. மாறாக தரைவழி உள்கட்டமைப்பு குறைவாக உள்ள, சேவைகள் கிடைக்காத மற்றும் தொலைதூரப் பகுதிகளை இலக்காக கொண்டு - ஸ்டார்லிங் பிராட்பேண்ட் சேவை ஆனது மெல்ல மெல்லவே முன்னேறலாம்.

ஸ்டார்லிங்கின் நேரடி-நுகர்வோர் சேவைகள் கிராமப்புறங்களில் கவனம் செலுத்தும் மறுகையில் ஜியோ மற்றும் ஏர்டெல் உடனான வணிக கூட்டாண்மைகள் ஆனது செயற்கைக்கோள் பேக்ஹால் மற்றும் என்டர்ப்ரைஸ் கனெக்டிவிட்டியை ஆதரிக்கும். அதாவது எலான் மஸ்க் கனவு கண்டது போல், அல்லது பலரும் எதிர்பார்த்தது போல ஸ்டார்லிங்க் சேவையானது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் கதையை முடிக்கப்போவது இல்லை!

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தலைமை பொது மேலாளர்களுடனான மறுஆய்வுக் கூட்டத்தை பொறுத்தவரை, மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். பிஎஸ்என்எல்-ன் செயல்பாட்டு முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யவும், நெட்வொர்க் மற்றும் சேவை வழங்கல் விரிவாக்கத்திற்கான நிறுவனத்தின் உத்தியை கோடிட்டு காட்டவும் இந்த கூட்டம் கூட்டப்பட்டது.

இந்த கூட்டத்தில், பிஎஸ்என்எல்-ன் 90%-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் இப்போது தீர்க்கப்பட்டுள்ளன என்றும், ரூ.600 முதல் ரூ.700 கோடி செலவில் 30,000 மின் நிலையங்கள் மாற்றப்பட்டுள்ளன என்றும் டாக்டர் பெம்மாசானி கூறினார். 4ஜி சேவைகளை அறிமுகப்படுத்திய பின்னர், 2025 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் பிஎஸ்என்எல் நிறுவனமானது 20-30% வருவாய் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதும் குறிப்பிடப்பட்டது. ஒவ்வொரு தொலைத்தொடர்பு வட்டத்திற்கும் தனிப்பட்ட இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, பிஎஸ்என்எல்-ன் சந்தாதாரர் தளத்தை அதிகரிக்க முயற்சிகள் நடந்துவருவது பற்றியும் பேசப்பட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Elon Musk Starlink Satellite Internet Service is not threat to Jio Airtel BSNL Union Minister
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X