பிராட்பேண்ட் கதை முடிஞ்சது.. Elon Musk Starlink இந்திய கட்டணம் அறிவிப்பு.. 30 நாள் அன்லிமிடெட் டேட்டா!
எலான் மஸ்க் (Elon Musk) தலைமையிலான ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனமானது, இந்தியாவில் அதன் மாதாந்திர சந்தா திட்டத்தின் (Monthly subscription plan) விலை விவரங்களை வெளியிட்டுள்ளது. நாட்டில் உள்ள தொலைதூர பகுதிகளில் தனது சேவைகளை வழங்குவதை நோக்கமாக கொண்ட இந்த செயற்கைக்கோள் இணைய சேவையானது - குடியிருப்பு நுகர்வோருக்கான திட்டத்தின் முக்கிய அம்சங்களையும் வெளியிட்டுள்ளது.
முதலில் - ஸ்டார்லிங்க் நிறுவனம் தொடங்கப்பட்ட பிறகு இந்தியாவில் அதன் இருப்பை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர் நாடு முழுவதும் பல நகரங்களில் கிரவுண்ட் ஸ்டேஷன்ளை (Ground Station) அமைக்கும் பணிகள் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. இப்போது இந்தியாவில் ஸ்டார்லிங்க் மாதாந்திர குடியிருப்பு சந்தாவின் (Residential customers subscription price) விலை, முக்கிய அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

என்ன விலை? எலான் மஸ்க் தலைமையிலான இந்நிறுவனம் அதன் ஸ்டார்லிங்க் இந்தியா வலைத்தளத்தை (Starlink India Website) புதுப்பித்துள்ளது. இப்போது இது குடியிருப்பு வாடிக்கையாளர்களுக்கான அதன் சந்தாவின் விலைகளை பட்டியலிடுகிறது. அதன்படி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவைக்கு மாதத்திற்கு ரூ.8,600 வசூலிக்கப்படும். இந்த சேவையில் ரூ.34,000 மதிப்புள்ள ஹார்ட்வேர்களின் (hardware) விலையும் அடங்கும்.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, 30 நாள் சோதனையுடன் அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) கிடைக்கும். ஸ்டார்லிங்கின் வலைத்தளம், இந்த சேவைகள் "அனைத்து வானிலையிலும் செயல்படும்" (work in all weather) என்று கூறுகிறது, அதே நேரத்தில் 99.9 சதவீதத்திற்கும் அதிகமான இயக்க நேரம் அல்லது இடையூறு இல்லாத இணைய இணைப்பை (uptime or a disruption-free internet connection) வழங்குவதாக உறுதியளிக்கிறது.
மேலும், பயனர்கள் "பிளக் இன் செய்து பயன்படுத்தத் தொடங்க" (just plug in and start using) முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது ஸ்டார்லிங்க் குடியிருப்பு சந்தாவிற்கான இந்தியாவில் விலைகள் வெளியிடப்பட்டிருந்தாலும், வணிக சந்தாவிற்க்கான விலைகள் இன்னும் வெளிப்படுத்தவில்லை. வரும் நாட்களில் அதுகுறித்த விவரங்களும் வெளிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தகவல்கள் ஸ்பேஸ்எக்ஸ் துணை நிறுவனம் ஆன ஸ்டார்லிங்க் ஆனது சண்டிகர், ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் நொய்டா உள்ளிட்ட இந்தியா முழுவதும் பல இடங்களில் அதன் கேட்வே எர்த் ஸ்டேஷன்களை (gateway earth stations) அமைக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறுகின்றன.
இந்த கேட்வே எர்த் ஸ்டேஷன்கள் ஆனது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைக்கோள்களுக்கும் (SpaceX Satellites), பூமியில் உள்ள பெறுநர்களுக்கும் இடையே இணைப்புகளை நிறுவுவதற்கும், பராமரிப்பதற்கும் (establishing and maintaining connections) ஆன ரிலே பாயிண்ட்களாக (relay points) செயல்படும் வகையில் கட்டமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் (கடந்த 2025 ஜூலை மாதம்) இந்தியாவில் வணிக நடவடிக்கைகளுக்கு (commercial operations) அதன் செயற்கைக்கோள்களை பயன்படுத்துவதற்கான 5 ஆண்டுகளுக்கான முக்கிய உரிமத்தை (licence) தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து (Department of Telecommunications- DoT) இந்நிறுவனம் பெற்றதாவும் கூறப்படுகிறது.
கடந்த 2025 அக்டோபர் மாத இறுதியில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமானது தொழில்முறை நெட்வொர்க்கிங் தளமான லிங்க்ட்இனில், இந்தியாவில் உள்ள ஸ்டார்லிங்கின் பெங்களூரு அலுவலகத்திற்கான நான்கு ஜாப் போஸ்ட்களை வெளியிட்டது. அந்த நேரத்தில், இந்நிறுவனம் நாட்டில் ஒரு கட்டண மேலாளர், ஒரு கணக்கியல் மேலாளர், ஒரு மூத்த கருவூல ஆய்வாளர் மற்றும் ஒரு வரி மேலாளரை பணியமர்த்தி கொண்டிருந்தது.
கூடுதலாக, இந்த பணியமர்த்தல் ஆனது ஸ்டார்லிங்கின் "சர்வதேச தடத்தை" விரிவுபடுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும், ஏனெனில் அது உலகம் முழுவதும் அதன் சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது என்று அந்த ஜாப் போஸ்ட்களில் குறிப்பிட்டு இருந்தன.


Click it and Unblock the Notifications








