இறப்பதற்கு பயமில்லை., "தனிமை எனக்கும் உண்டு": எலான் மஸ்க்- திடீரென சொல்ல காரணம் என்ன?
ஸ்பேக் எக்ஸ் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் கலிபோர்னியாவின் ஃப்ரீமாண்டில் உள்ள டெஸ்லா தொழிற்சாலையில், ஆக்செல் ஸ்பிரிங்கரின் தலைமை நிர்வாக அதிகாரி மத்தியோஸ் டோப்ஃப்னருடன் சமீபத்தில் நேர்காணலில் ஈடுபட்டார். அதில் மஸ்க் பல தலைப்புகளில் குறித்து விவாதித்தார். அதன் விவரங்களை முழுமையாக பார்க்கலாம். எலான்மஸ்க் அளித்த பேட்டியில் அவர் நீண்ட காலத்திற்கு பிறகு உடலை பராமரிக்க விரும்புவதாக கூறினார். அதேபோல் எனக்கு இறப்பிற்கு பயம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

எலான் மஸ்க் அளித்த பேட்டி
எலான் மஸ்க் அளித்த பேட்டியில், நீண்ட காலத்திற்கு பிறகு தனது உடலை பராமரிக்கு விரும்புவதாக குறிப்பிட்டார். அதேபோல் "எனக்கு இறப்பிற்கு பயம் இல்லை. அது நிம்மதியாக வரும் என நினைக்கிறேன்" என அவர் குறிப்பிட்டார். "நீண்ட ஆயுள்" மற்றும் "கணிசமான அளவு அதிகரித்த ஆயுட்காலம்" குறித்து டாப்னர் கேட்டபோது மஸ்க் நேரடியான பதிலை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மஸ்க் இந்த நேர்காணலில் பல்வேறு கேள்விகளுக்கு நேரடியான பதிலை அளித்துள்ளார்.

நீண்ட காலம் வாழ முயற்சிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை
நீண்ட ஆயுள்" மற்றும் "கணிசமான அளவு அதிகரிக்கும் ஆயுட்காலம்" குறித்து டாப்னர் கேட்ட கேள்விக்கு மஸ்க் அளித்த பதிலை பார்க்கலாம்., அதில் "நாம் நீண்ட காலம் வாழ முயற்சிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. இது சமீகத்தில் மூச்சுத் திணறலை ஏற்படுத்தும், பெரும்பாலான மக்கள் தங்கள் மனதை மாற்ற விரும்பவில்லை, அவர்கள் இறக்கவில்லை என்றால் பழைய யோசனைகளில் சிக்கிவிடுவார்கள் சமூகம் முன்னேறாது" என கூறினார்.

எல்லோரும் சில சமயங்களில் தனிமையாக உணர்கிறார்கள்
அவர் விவாதித்த பிற விஷயங்கள் குறித்து பார்க்கையில், அது ரஷ்யா உக்ரைன் நெருக்கடி, விண்வெளி ஆய்வு மற்றும் தனிமை உள்ளிட்டவை அடங்கும். எல்லோரும் சில சமயங்களில் தனிமையாக உணர்கிறார்கள் என தான் உறுதியாக நம்புவதாக குறிப்பிட்டார். ஊடக அறிக்கையின்படி, எலான் மஸ்க் ஒரு சிறிய மர வீட்டில் வசிக்கிறார். அது 50,000 டாலர் மதிப்புள்ள 375 சதுர அடி கொண்ட சிறிய மர வீடு ஆகும். அவர் இதை டெக்சாஸ்-ல் வாடகை எடுத்து இருக்கிறார் என கூறப்படுகிறது.

"தனியாக உணர்கிறேன்" என குறிப்பிட்டார்
பில்லியனர் எலான் மஸ்க், குறிப்பாக தனது நாய் தன்னைச் சுற்றி இல்லை என்றால் "தனியாக உணர்கிறேன்" என குறிப்பிட்டார். பிஸ்னஸ் இன்சைடருக்கு அளித்த பேட்டியில் தொழில்நுட்ப நிறுவனரான அவர், "நான் தனிமையாக உணரும் நேரங்களும் உண்டு... எல்லோரும் தனிமையாக இருக்கும் நேரங்கள் உண்டு, ஆனால் அது மிகவும் அடிப்படையானது" என குறிப்பிட்டார். ஸ்டார்ஷிப் ராக்கெட்டில் வேலை செய்யும் போது ஒரு சிறிய வீட்டில் தங்கியிருப்பதகாவும் அப்போது அவரது நாய் அருகில் இல்லை என்றால் அவர் தனிமையை எதிர்கொள்வதாகும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி மஸ்க் குறிப்பிட்டார்.

வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல பல தோல்விகள்
எலான் மஸ்க் என்று கூறியதும் நினைவுக்கு வருவது டெஸ்லா, ஸ்பேஷ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் பெயர்கள்தான். இந்த நிறுவனங்களை இவர் வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல பல தோல்விகளை கண்டுள்ளார். தோல்வி அடையும் போது இவர் பெரும்பாலும் உச்சரிக்கும் ஒரு வார்த்தை, இது வெற்றிகரமான தோல்வி என்பதுதான். எலான் மஸ்க்கின் கனவுத் திட்டமாக கூறப்படுவது செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமாகும். சமீபத்தில் இதற்கான முன்மாதிரி விண்கலம் வடிவமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அப்போது விண்கலம் வெடித்து சிதறியது. இந்த நிகழ்வு பல்வேறு விவாதங்களுக்கு உட்பட தொடங்கிய நிலையில் எலான் மக்ஸ் கூலாக இது வெற்றிகரமான தோல்வி, தோல்வி அடைய கூடாது என்பதற்கான அனைத்து தரவுகளும் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டது என கூறினார்.

மாடல் எஸ் என்ற கார் மூலம் வெற்றி
டெஸ்லாவின் முதல் மின்சார கார் ரூ.72 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஸ்போர்ட்ஸ் காராக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் சந்தையில் நல்ல வரவேற்பை பெறவில்லை. ஆனால் இந்த உலகம் நல்ல மின்சார காரை வரவேற்க காத்திருக்கிறது என்ற நம்பிக்கை எலான் மஸ்க்கிடம் இருந்தது. தொடர்ந்து மாடல் எஸ் என்ற காரை அறிமுகப்படுத்தி எலான் மஸ்க் வெற்றி அடைந்தார். ஒவ்வொரு தோல்வியிலும் தானும் துவண்டுவிடாமல் தனது ஊழியர்களை துவண்டுபோக விடாமல் ஊக்க வார்த்தைகளை அளித்து எலான் மஸ்க் தனது நிறுவனத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்று, தற்போது ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி உலகின் முதல் பணக்காரராக உருவெடுத்தார்.


Click it and Unblock the Notifications