Home
News

கடுப்பேத்துறார் மை லார்ட்- நம்பர் 1 இடத்தை பிடித்து பெசோஸுக்கு சில்வர் மெடல் அனுப்பிய மஸ்க்: போட்டி இருக்கு!

2021 ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு பின்தங்கியிருக்கிறார். அமேசான் மற்றும் ப்ளூ ஆர்ஜின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முதலிடத்திற்கு முன்னேறியிருக்கிறார். டெஸ்லாவின் பங்குகள் விலை உயர்வை சந்தித்து வருவதன் காரணமாக எலான் மஸ்க் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.

முதல் இடத்தை பிடித்த மஸ்க்

முதல் இடத்தை பிடித்த மஸ்க்

உலகின் மிகப் பெரிய பணக்காரராக என்பதில் முதல் இடத்தை பிடித்த பிறகு, ஜெஃப் பெசோஸ்-க்கு எலான் மஸ்க் வெள்ளிப் பதக்கம் அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது. டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்., தற்போது 210 பில்லியன் டாலர் மதிப்புடன் உலகின் மிகப் பெரிய பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அமேசான் நிறுவனம் ஜெஃப் பெசோஸ் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

ப்ளூ ஆர்ஜின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்

ப்ளூ ஆர்ஜின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்

உலகின் மிகப் பெரிய பணக்காரராக முதலிடத்தில் கடந்த சில மாதங்களாகவே அமேசான் மற்றும் ப்ளூ ஆர்ஜின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் இருந்த வந்த நிலையில் டெஸ்லா பங்கு மதிப்பு உயர்ந்து வருவதையடுத்து டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார். ஜெப் பெசோஸ் 19 ஆயிரத்து 200 கோடி டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

2-வது என்ற நம்பர் வடிவ சிலை

2-வது என்ற நம்பர் வடிவ சிலை

இதுகுறித்து ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தியில், எலான் மஸ்க் உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியதை அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உடன் பகிர்ந்து கொள்ளும் வகையில், மின்னஞ்சலில் வெள்ளி பதக்கத்தையும், 2-வது என்ற நம்பர் வடிவ சிலையையும் எலான் மஸ்க் அவருக்கு அனுப்பி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மஸ்க் மற்றும் பெசோஸ்

மஸ்க் மற்றும் பெசோஸ்

மஸ்க் மற்றும் பெசோஸ் இருவரும் பல மாதங்களாகவே உலகப் பணக்காரர் பட்டியலின் முதலிடத்தை ஒருவருக்கொருவர் மாறிமாறி பகிர்ந்து வருகின்றனர். இருவருக்கும் இடையேயான போட்டி பூமியில் மட்டுமின்றி விண்ணிலும் நடந்து வருகிறது. எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ், ஜெப் பெசோஸ்-ன் ப்ளூ ஆர்ஜின் ஆகிய இரண்டு நிறுவனங்களும் விண்வெளி பயணத்துக்கான அடுத்தக் கட்டத்தை வேகமாக முன்னேறி வருகின்றனர்.

ப்ளூ ஆரிஜின் நிறுவனம்

ப்ளூ ஆரிஜின் நிறுவனம்

ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் நிறுவனம் இந்த ஆண்டு நான்காவது முறையாக தனது புதிய ஷெப்பர்ட் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. கடந்த முறை ப்ளூ ஆரிஜின் நிறுவனரும் கோடீஸ்வரருமான ஜெஃப் பெசோஸ் விண்வெளி பயணம் மேற்கொண்டு திரும்பினார். இருப்பினும் தற்போதைய கேப்ஸ்யூல்கள் மனிதர்களை கொண்டு செல்லவில்லை.

புதிய ஷெப்பர்ட் பணி

புதிய ஷெப்பர்ட் பணி

என்எஸ்-17 என அழைக்கப்படும் இந்த புதிய ஷெப்பர்ட் பணி சரக்குகளை எடுத்துச் செல்ல அர்பணிக்கப்பட்டுள்ளது. மேற்கு டெக்சாஸில் உள்ள ப்ளூ ஆரிஜினின் தனியார் தளத்தில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது. பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியதற்கு முன்பாக இது அதிகபட்சமாக 347430 அடி (105.6 கிலோ மீட்டர்) உயரத்தை அடைந்தது. என்எஸ்-17 ஏவுதளில் இருந்து கேப்ஸ்யூல்கள் தரையிறக்கம் வரை 10 நிமிடங்கள் 38 வினாடிகள் நீடித்தது.

கென்னடி விண்வெளி மையம்

கென்னடி விண்வெளி மையம்

ஃப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் இன்ஸ்பிரேஷன்-4 பொதுமக்கள் 4 பேரை ஏற்றி விண்ணுக்கு சென்றது. அமெரிக்காவின் ஷிப் 4 பேமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவரும் பெரும் கோடீஸ்வரருமான ஜாரிட் ஐசக்மேன் தலைமையில் ஆன 4 பேர் கொண்ட குழுவினர் விண்ணுக்கு பயணம் செய்தனர்.

அமெச்சூர் குழுவினர்

அமெச்சூர் குழுவினர்

ஒரு ராக்கெட் அனைத்து அமெச்சூர் குழுவினர் உடன் சுற்றுப்பாதையை நோக்கி செல்வது இதுவே முதன்முறையாகும். அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணம் கேப் கெனவெரல் நகரில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. தொழில்முறை விண்வெளி வீரர்கள் இல்லை என்பதும் அனைத்து அமெச்சூர் (அனுபவமில்லாத) குழுவினருடன் ஒரு ராக்கெட் சுற்றுப்பாதையை நோக்கி செல்வது இதுவே முதன்முறையாகும்.

Best Mobiles in India

English summary
Elon Musk Send a Silver Medal and number 2 Giant Statue to Jeff Bezos: Here the Reason
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X