Home
News

யூடியூபை ஓரங்கட்டப் போகும் எக்ஸ்.. கிரியேட்டர்களுக்கு அதிக வருமானம்.. எலான் மஸ்க் கூறியது இதுதான்..

எலான் மஸ்கின் எக்ஸ் (X) தளத்தை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் எலான் மஸ்க் கண்டென்ட் கிரியேட்டர்களுக்கு வருமானம் வழங்குவதில் எக்ஸ் தளம் எதிர்காலத்தில் யூடியூபை மிஞ்சும் என்று கூறியுள்ளார். இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

அதாவது கண்டென்ட் கிரியேட்டர்களுக்கு வருமானம் வழங்கும் விஷயத்தில் எக்ஸ் தளம் எதிர்காலத்தில் யூடியூபை விட முன்னேறக்கூடும் என எலான் மஸ்க் சூசகமாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக எக்ஸ் தளத்தில் அசல் மற்றும் மிகவும் தரமான உள்ளடக்கங்களை ஊக்குவிக்கும் நோக்கில், பணமாக்குதல் திட்டங்களை மேலும் வலுப்படுத்தப் போவதாக எலாக் மஸ்க் கூறியுள்ளார்.

யூடியூபை ஓரங்கட்ட போகும் எக்ஸ்.. கிரியேட்டர்களுக்கு அதிக வருமானம்..

குறிப்பாக பயனர்களுக்கு உரிய வருமானத்தைக் கொடுக்காத தளங்கள் நீண்ட காலத்திற்கு நிலைக்காது என்ற கருத்துகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த விஷயத்தில் இப்போது மனம் திறந்துள்ளார். எக்ஸ் தளத்தில் தவறான முறையில் செயல்படும் கணக்குகள் மற்றும் துஷ்பிரயோகங்களை முற்றிலும் அகற்றிய பிறகே பணமாக்குதல் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என அவர் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதேசமயம் இந்த எக்ஸ் தளத்தில் அதிக வருமானம் வழங்கப்பட்டாலும், அது முழுமையாகக் கட்டுப்பாடுகளுடன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் தவறான தகவல்களை முற்றிலும் கட்டுப்படுத்துவதில் எக்ஸ் தளம் தீவிரம் காட்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கண்டென்ட் கிரியேட்டர்களுக்கு எக்ஸ் தளம் குறைந்த வருமானமே வழங்குவதாகவும், வருமான விநியோகத்தில் தாமதங்கள் ஏற்பட்டதாகவும் அவர் 2025 அக்டோபரில் எலான் மஸ்க் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருந்தார். மேலும் இந்த துறையில் கூகுளின் கீழ் இயங்கும் யூடியூப் முன்னணியில் இருப்பதாகவும் மாஸ்க் கூறியிருந்த நிலையில், தற்போது எக்ஸ் தளம் அதற்கு நேரடி சவாலாக மாறும் சூழல் உருவாகியுள்ளது.

இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை
எலான் மஸ்க்(Elon Musk) தனது சொந்த சாட்டிலைட் இன்டர்நெட் சேவையான ஸ்டார்லிங்க் (Starlink) சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளார். இந்த ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணையச் சேவை எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து வருகிறது.

இதுவரை ஸ்டார்லிங் சேவை இந்தியாவில் அறிமுகம் ஆகும் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. காரணம் என்னவென்றால் இன்னும் ஸ்பெக்ட்ராம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. பாதுகாப்பு சார்ந்த அனுமதியை இன்னும் ஸ்டார்லிங் பெறவில்லை. இது இன்னொரு காரணமாக உள்ளது.

அனைத்து வகையான அனுமதி மற்றும் மத்திய அரசின் ஸ்பெக்ட்ரம் பெற்று விரைவில் ஸ்டார்லிங் இணையதள வசதியை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட உள்ளது. அதன்பின்பு தான் விமானம், கடல்சார் துறை, அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் இந்த இண்டர்நெட் சேவைகளைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

யூடியூபை ஓரங்கட்ட போகும் எக்ஸ்.. கிரியேட்டர்களுக்கு அதிக வருமானம்..

நாம் இப்போது பயன்படுத்தும் வழக்கமான இணையம் ஆனது பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருக்கும் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் அல்லது டவர்களில் இருந்து வரும் சிக்னல் மூலம் தான் கிடைக்கிறது. குறிப்பாக அனைத்து தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கும் இந்த கேபிள்களை கொண்டு செல்வது மிகவும் கடினம்.

எனவே இந்த சிக்கலை தீர்க்க, எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் பூமியைச் சுற்றி ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை நிறுவி, அங்கிருந்து நேரடியாகச் சக்திவாய்ந்த இணையச் சேவையை வழங்குகிறது. இதன் மூலம் அனைத்து தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கும் எளிமையாக இணையச் சேவையை வழங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Elon Musk says X will pay content creators more than YouTube: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X