Home
News

ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய Elon Musk.. ராத்திரி முழுக்க.. WhatsApp-ல் இந்த வேலை தான் நடக்குது.. அடப்பாவிகளா!

தனது ட்விட்டர் (Twitter) நிறுவனத்தில் என்ஜினீயர் (Engineer) ஆக வேலை செய்யும் ஒருவர் அளித்துள்ள புகாரை முக்கிய ஆதாரமாக முன்வைத்து, இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்ஃபாரமான வாட்ஸ்அப்பை (WhatsApp) "யாரும் நம்ப வேண்டாம்" என்று எலான் மஸ்க் (Elon Musk) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ட்விட்டரில் என்ஜினீயராக பணியாற்றும் ஃபோட் டபிரி (Foad Dabiri) என்பவர், தனது ஆண்ட்ராய்டு டாஷ்போர்டின் (Android Dashboard) ஸ்கிரீன் ஷாட்டை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த ஸ்கிரீன்ஷாட்டின் வழியாக, வாட்ஸ்அப் செயலியானது அவர் தூங்கும் போதும் கூட, பேக்கிரவுண்டில் அவரது போனின் மைக்ரோஃபோனை அணுகியது அம்பலமாகி உள்ளது.

ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய Elon Musk.. ஒட்டுக்கேட்கும் WhatsApp..?

ஃபோட் டபிரியின் கூற்றுப்படி, அதிகாலை 4:20 மணி முதல் 6:53 மணி வரை வாட்ஸ்அப் ஆனது அவரது ஸ்மார்ட்போனின் மைக்ரோஃபோனை பயன்படுத்தியுள்ளது. "நான் தூங்கிக்கொண்டிருந்தபோதும் கூட வாட்ஸ்அப் எனது போனின் மைக்ரோஃபோனைப் பயன்படுத்துகிறது.. இங்கே என்ன நடக்கிறது?" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

ஃபோட் டபிரியின் ட்வீட்க்கு ரிப்ளை செய்யும் விதமாக, ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ-வும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் (Elon Musk), "வாட்ஸ்அப்பை நம்ப முடியாது' என்று கூறியுள்ளார். வாட்ஸ்அப் மீதான இந்த குற்றசாட்டு வாட்ஸ்அப் பயனர்கள் மத்தியில் "இது ஒட்டுக்கேட்கிறதா?" என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளது. "இந்த சிக்கல் ஆண்ட்ராய்டில் (Android) உள்ள பக்கால் (Bug) ஏற்பட்டுள்ளது. அது தான் தங்கள் தனியுரிமை டாஷ்போர்டில் (Privacy dashboard) உள்ள தகவல்களை தவறாக குறிப்பிடுகிறது" என்று வாட்ஸ்அப் நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.

மேலும் தான் ஒட்டுகேட்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள ஃபோட் டபிரி பயன்படுத்திய ஸ்மார்ட்போன் ஒரு கூகுள் பிக்சல் (Google Pixel) மாடலாகும். எனவே இந்த விஷயத்தை (அதாவது ஆண்ட்ராய்டு பக் பற்றி) ஆராய்ந்து அதற்கான தீர்வை வழங்குமாறு கூகுளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் வாட்ஸ்அப் கூறியுள்ளது.

மற்றொரு ட்வீட்டில், வாட்ஸ்அப் பயனர்கள் தங்களுடைய மைக்ரோஃபோன் செட்டிங்ஸ் (Microphone settings) மீது முழு கட்டுப்பாட்டையும் கொண்டுள்ளனர். ஒரு பயனர் கால் (Call) செய்யும் போது அல்லது வாய்ஸ் நோட் (Voice Note) அல்லது வீடியோவை ரெகார்ட் (Video Record) செய்யும் செய்யும் போது மட்டுமே வாட்ஸ்அப்பால் அவரது மொபைல் போனில் உள்ள மைக்கை (Mic) அணுக முடியும்" என்றும் வாட்ஸ்அப் தெளிவுபடுத்தியுள்ளது.

தொடர்ச்சியான ட்வீட்களின் வழியாக "ட்விட்டர் பொறியாளருடன் தொடர்பு கொண்டுள்ளோம், அவர் தனது பிக்சல் போன் மற்றும் வாட்ஸ்அப்பில் சந்தித்துள்ள சிக்கலை பதிவு செய்துள்ளோம்" என்றும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பாதுகாப்பை வழங்குவதாக கூறும் வாட்ஸ்அப் மீதான இந்த குற்றசாட்டு உண்மையா பொய்யா என்பது கூகுளின் தலையீட்டுக்கு பின்னரே உறுதிசெய்யப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Elon Musk Says WhatsApp Cannot Be Trusted After know Its Using Microphone in Background
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X