தெய்வமே.. நன்றி சொல்ல வார்த்தை இல்லை.. Twitter வழியாக பணம் சம்பாதிக்க Elon Musk சொன்ன அடேங்கப்பா ஐடியா!
யூட்யூப் (YouTube) வழியாக பணம் சம்பாதிப்பது போல ட்விட்டர் (Twitter) வழியாவும் பணம் சம்பாதிக்கும் ஒரு புதிய யோசனையை எலான் மஸ்க் (Elon Musk) முன்வைத்துள்ளார். அதென்ன யோசனை? யாரெல்லாம் ட்விட்டர் வழியாக பணம் சம்பாதிக்க முடியும்? வாருங்கள் விளக்கமாக பார்க்கலாம்!
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், சந்தா பணம் செலுத்தி ப்ளூ டிக்கை வாங்கும் அம்சத்தை ஏற்கனவே அறிமுகம் செய்துவிட்டார். இது ட்விட்டர் பயனர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலைப்பாட்டில், "பணம் கொடுத்து வாங்கும் ப்ளூ டிக் வழியாக நீங்களும பணம் சம்பாதிக்கலாம்" என்கிற புதிய யோசனையை எலான் மஸ்க் முன்வைத்துள்ளார்.

ட்விட்டர் ப்ளூ டிக் வழியாக பணம் சம்பாதிப்பது எப்படி?
அறியாதோர்களுக்கு, சந்தா பணம் செலுத்தி ட்விட்டர் ப்ளூ டிக்கை வாங்கிய பின்னர், ப்ளூ டிக் சந்தாதாரர்களால் மிகவும் நீளமான ட்வீட்களை உருவாக்க முடியும். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் 4,000 எழுத்துகள் வரையிலான ட்வீட்களை பதிவிட முடியும்.
அப்படியாக ப்ளூ டிக்கை பெற்ற ஒரு ட்விட்டர் பயனர் மிகவும் நீளமான ட்வீட் ஒன்றை பதிவுட்டுள்ளார். அதற்கு பதிலளித்த எலான் மஸ்க் "லாங் ட்வீட் ஃபார்மெட்டை (Long Tweet Format) பயன்படுத்துவது நன்றாக இருக்கிறது! அடுத்த அப்டேட் பேஸிக் ஃபார்மெட்டிங் உடனாக இன்னும் நீளமான ட்வீட்களை (Longer Tweet) பதிவிட அனுமதிக்கும், எனவே உங்களால் ட்விட்டரில் எந்தவொரு கன்டென்ட்டையும் போஸ்ட் செய்ய முடியும்"
"அதன் மூலம் சில (ஸ்பெஷல்) கன்டென்ட்டிற்கு, மக்களிடம் இருந்து உங்களால் கட்டணமும் வசூலிக்க முடியும் மற்றும் வெறும் ஒரே கிளிக்கில் பணம் செலுத்தும் வசதியும் அணுக கிடைக்கும்" என்று கூறி உள்ளார்.
முதல் சில ட்வீட்களை இலவசமாக கொடுங்கள்.. அதன் பின்னர் கட்டணம் கேளுங்கள்!
இது தொடர்பாக மேலும் பேசுகையில் "இனிமேல் ஒரு எழுத்தாளர் / ஆசிரியர் தனது முழு புத்தகத்தையும் ட்விட்டரில் வெளியிடலாம் அல்லது ஒவ்வொரு அத்தியாயத்தை வெளியிட்டு.. முதல் சில ட்வீட்களை இலவசமாகவும், மற்றவைகளை கட்டணத்தின் கீழும் கொண்டு வரலாம்" என்றும் எலான் மஸ்க் யோசனை கொடுத்துள்ளார்.
எலான் மஸ்க்கின் இந்த புதிய யோசனை, ட்விட்டர் தளத்தில் உள்ள பயனர்கள், தங்களை பின்தொடர்பவர்களிடம் (Followers) வழியாக பணம் சம்பாதிக்க வழிவகுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இருப்பினும் இது எப்போது அறிமுகமாகும்? இதன் கீழ் ப்ளூ டிக் சந்தாதாரர்களால் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும்? போன்ற விவரங்கள் இல்லை!
இந்தியாவில் ட்விட்டர் ப்ளூ சந்தா கட்டணம் எவ்வளவு?
அறியாதோர்களுக்கு, ட்விட்டர் ப்ளூ அம்சமானது ஆண்டு சந்தா (Annual Plan) மற்றும் மாதாந்திர சந்தா (Monthly Plan) என்கிற 2 பிரிவுகளின் கீழ் கிடைக்கிறது. ஆண்டு சாந்தாவின் கீழ் மாதந்தோறும் ரூ.566.67 செலுத்த வேண்டும்; அதாவது ஆண்டுக்கு ரூ.6800 செலுத்த வேண்டும்.
மாதாந்திர சாந்தாவின் கீழ், மாதந்தோறும் ரூ.650 செலுத்த வேண்டும்; அதாவது ஆண்டுக்கு ரூ.7800 செலுத்த வேண்டும். மேலும் ரூ.650 என்பது வெப் பயன்பாட்டிற்கான சந்தா கட்டணமாகும்; மொபைல் போன்களில் இதை பயன்படுத்த வேண்டுமென்றால் ரூ.900 செலுத்த வேண்டி இருக்கும்!


Click it and Unblock the Notifications








