யார் பெற்ற மகளோ நீ.. ட்விட்டருக்கு பெண் CEO.. லிண்டா யாக்கரினோ யார்.?
உலகின் மிகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்க் (Elon Musk) 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், முன்னணி சமூக வலைதளமான ட்விட்டர் (Twitter) நிறுவனத்தை வாங்கினார். சுமார் ரூ.3.30 லட்சம் கோடி செலவு செய்து வாங்கப்பட்ட ட்விட்டரில், லாபத்தை அதிகரிக்கும் நோக்குடன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய சில நாட்களிலேயே முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களை ஒரே நாளில் பணிநீக்கம் செய்து, ஷாக் கொடுத்தார். அந்த நேரத்தில், சிஇஓவாக இருந்த பராக் அகர்வால் உள்பட பல முக்கிய நிர்வாகிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதன்பின் ட்விட்டரின் புதிய சிஇஓ (Twitter New CEO) நியமிக்கப்படும் வரை தற்காலிக சிஇஓவாக எலான் மஸ்க் செயல்பட தொடங்கினார்.

இதனால் ட்விட்டர் நிறுவனம் பல்வேறு அதிரடி மாற்றங்களை சந்தித்தது. பிரபலங்களுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக்கிற்கு மாதாந்திர கட்டணம் விதிக்கப்பட்டது. இந்த டிக்கை போலவே கோல்டன், கிரே கலர்களில் வெரிஃபைட் டிக் அம்சங்கள் கொண்டுவரப்பட்டன. உலகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்களை கொண்ட பிரபலங்கள், தங்களது மாதாந்திர சந்தாவை கட்டாவில்லை என்று கூறி அவர்களின் ப்ளூ டிக் பறிக்கப்பட்டது.
இது மிகப்பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியதால், ப்ளூ டிக் எங்களுக்கு வேண்டாம் என்ற முடிவுக்கு பல பிரபலங்கள் வரத் தொடங்கினர். அதன்படி, ப்ளூ டிக் சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது. இப்படிப்பட்ட சூழலில், எலான் மஸ்க் ஒரு அதிரடியான அறிவிப்பை கொடுத்தார். மெட்டாவின் மெசஞ்சர் (Messenger), வாட்ஸ்அப் (WhatsApp) ஆப்ஸ்களில் இருக்கும் ஆடியோ, வீடியோ கால் வசதிகளை ட்விட்டரிலும் கொண்டுவர உள்ளதாக தெரிவித்தார்.
இதனால், ட்விட்டர் மீது அதிருப்தியில் இருந்த அதன் யூசர்கள் சற்று உற்சாகமடைந்தனர். இவர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியான செய்தியை எலான் மஸ்க் இப்போது, அறிவித்துள்ளார். ட்விட்டருக்கு புதிய சிஇஓ நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் பணியை தொடங்குவார் என்றும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு உலகம் முழுவதும் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
இந்த அறிவிப்பை வெளியிட்ட எலான் மஸ்க், அந்த புதிய சிஇஓ யார் என்பதை தெரிவிக்கவில்லை. ஆனால், லிண்டா யாக்கரினோ (Linda Yaccarino) என்னும் பெண் நிர்வாகியே ட்விட்டரின் புதிய சிஇஓவாக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. கடந்த மாதம் மியாமியில், எலான் மஸ்க் நேரடியாக, லிண்டா யாக்கரினோவிடம் நேர்காணல் செய்துள்ளதாகவும் செய்திகள் உள்ளன.
உலகின் முன்னணி சமூக ஊடகத்துக்கு பெண்ணொருவரை சிஇஓவாக நியமிக்கும், எலான் மஸ்க்கின் முடிவு வரவேற்க தக்கது என்று பலர் கருத்து தெரிவிக்க தொடங்கிவிட்டனர். இப்போது, லிண்டா யாக்கரினோ யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். லிண்டா, என்பிசி யுனிவர்சல் (NBCUniversal) நிறுவனத்தில் அட்வர்டைசிங் சேல்ஸ் துறையின் தலைவராக உள்ளார். இவர் பென் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் ஆர்ட்ஸ் அண்ட் டெலி கம்யூனிகேஷன் படிப்பை முடித்தவர்.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்நுட்பத்துறையில், சிறந்த விளங்கி வருபவர். இன்னும் 6 வாரங்களில் ட்விட்டரின் புதிய சிஇஓ பதவியேற்க உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்த நிலையில், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், லிண்டா யாக்கரினோ ட்விட்டரின் புதிய சிஇஓவாக நியமிக்கப்படுவார்.


Click it and Unblock the Notifications








