Elon Musk-ன் நேரடி மிரட்டல்! என் மேல கை வச்சா.. அடுத்தது இது தான் நடக்கும்! மன உளைச்சலில் Google, Apple!

|

ட்விட்டர் (Twitte) நிறுவனத்தை "சல்லி சல்லியாக" பெயர்த்து வரும் அந்நிறுவனத்தின் புதிய உரிமையாளரும், உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் (Elon Musk), தற்போது கூகுள் (Google) மற்றும் ஆப்பிள் ( Apple) நிறுவனத்திற்கு எதிராக "ஒரு நேரடி மிரட்டலை" விடுத்துள்ளார் என்றே கூறலாம்!

அதென்ன மிரட்டல்? உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் எலான் மஸ்க் மோதுவதற்கான பின்னணி என்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

நேற்று வரை ஒரு பஞ்சாயத்தும் இல்லை!

நேற்று வரை ஒரு பஞ்சாயத்தும் இல்லை!

ஆம்! நேற்று வரையிலாக, எலான் மஸ்க்கிற்கும் ஆப்பிள் மற்றும் கூகுளுக்கும் எந்த பஞ்சாயத்தும் இல்லை. ஆனால் இனிமேல் அப்படி இருக்க போவதில்லை.

ட்விட்டர் தளத்தில் எலான் மஸ்க் நிகழ்த்தும் அதிரடி மாற்றங்கள் ஆனது உலகம் முழுவதும் உள்ள அனைவரையுமே கடுப்பாக்கி உள்ளது.

குறிப்பாக ப்ளூ டிக்கிற்கான கட்டணம் (Blue Tick Charge) 100-க்கு 99 ட்விட்டர் யூசர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது என்றே கூறலாம். இதானால் பலரும் ட்விட்டரை விட்டு வெளியேறி மாற்று தளங்களில் நுழைந்த வண்ணம் உள்ளனர்.

இதென்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா? iPhone-ல் மட்டுமே இருக்கும் அம்சம்.. இப்போது Samsung போன்களில்!இதென்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா? iPhone-ல் மட்டுமே இருக்கும் அம்சம்.. இப்போது Samsung போன்களில்!

புதிய குடைச்சல்!

புதிய குடைச்சல்!

ஏற்கனவே ட்விட்டரில் ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்க, ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய இரண்டுமே ஒரு புதிய குடைச்சலை கொண்டு வந்துள்ளன.

அதாவது ஆப்-இன்-ஆப் பரிவர்த்தனைகளில் ஒரு குறிப்பிட்ட கமிஷனை, அதாவது 15 - 30% வரையிலான கமிஷனை தங்களுக்கு செலுத்துமாறு ஆப்ஸ் டெவலப்பர்களிடம் ஆப்பிளும், கூகுளும் கேட்கின்றன.

ஒரு ஆப்பிற்குள் நடக்கும் பண பரிவர்த்தனைகள் என்று வரும் போது - பணம் கொடுத்து வாங்கப்பட உள்ள ட்விட்டர் ப்ளூ டிக்கும் கூட "தொழில்நுட்ப ரீதியாக" ஒரு ஆப்-இன்-ஆப் பர்சேஸே ஆகும். ட்விட்டர் நிறுவனமானது ஆப்பிள் மற்றும் கூகுளுக்கு கமிஷன் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

என் மேல கை வச்சா?

என் மேல கை வச்சா?

இந்த "கமிஷன்" விஷயத்தை எலான் மஸ்க் எப்படி கையாள போகிறார் என்கிற கேள்விக்கு அவரே ஒரு பதில் அளித்துள்ளார். அதை பதில் என்று கூறுவதை விட ஒரு நேரடி மிரட்டல் என்றே கூறலாம்!

எலான் மஸ்க் ஒரு சமீபத்திய ட்வீட்டில் "ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் ஆனது ட்விட்டர் ஆப்பை,தத்தம் ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்கினால்.. எனக்கு வேறு வழியே இல்லை, நான் ஒரு மாற்று ஸ்மார்ட்போனை உருவாக்குவேன்" என்று கூறி உள்ளார்.

இது தொடர்பாக கேள்வி எழுப்பிய ஒரு ட்விட்டர் யூசருக்கு பதில் அளிக்கும் வண்ணம் - "நிச்சயமாக இப்படி எதுவும் நடக்காது என்று நம்புகிறேன். ஆனால் மீறி நடந்தால்.. எனக்கு வேறு வழியில்லை என்றால், நான் மாற்று ஸ்மார்ட்போனை உருவாக்குவேன்" என்று எலான் மஸ்க் கூறி உள்ளார்!

நல்லதே நடக்கும்! 13 ஆண்டுகளுக்கு பிறகு ISRO செய்யப்போகும் காரியம்! கொஞ்சம் மிஸ் ஆனாலும் மானம் போயிடும்!நல்லதே நடக்கும்! 13 ஆண்டுகளுக்கு பிறகு ISRO செய்யப்போகும் காரியம்! கொஞ்சம் மிஸ் ஆனாலும் மானம் போயிடும்!

யார் வேணும்னாலும் வாய் பேசலாம் ராஜா.. செய்ய முடியுமா?

யார் வேணும்னாலும் வாய் பேசலாம் ராஜா.. செய்ய முடியுமா?

உண்மையில் எலான் மஸ்க்கால் ஒரு மாற்று ஸ்மார்ட்ப்போனை உருவாக்க முடியுமா?

ஏன் முடியாது? அவர் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர் ஆவார். அவர் நினைத்தால் "மாற்று" ஸ்மார்ட்போனை மட்டுமல்ல, அவர் விரும்பும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நீங்கள் நினைக்கலாம்!

ஆனால் உண்மை என்னவென்றால், அப்படி செய்வது மிகவும் கடினமான ஒரு காரியமாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் எலான் மஸ்க்கின் இந்த மிரட்டல் கேட்பதற்கு வேண்டுமானால் மிகவும் யதார்த்தமாக இருக்கலாம் ஆனால் இது அவ்வளவு எளிதில் சாத்தியமாகாது.

மிரட்டுனா.. பயப்படுறா ஆளா இவங்க!

மிரட்டுனா.. பயப்படுறா ஆளா இவங்க!

மாற்று ஸ்மார்ட்போனை உருவாக்குவதை தவிர்த்து, ஆப்பிள் மற்றும் கூகுளுக்கு பணம் செலுத்துவதைத் தவிர்க்க எலான் மஸ்க் மற்றும் ட்விட்டர் பின்பற்றக்கூடிய வேறு சில தீர்வுகளும் உள்ளன. ஆனால், மஸ்க் அதை எவ்வாறு கையாள போகிறார் என்பது தான் இங்கே எழும் முக்கியமான கேள்வி!

அதுமட்டுமின்றி, மாற்று ஸ்மார்ட்போனை உருவாக்குவேன் என்று எலான் மஸ்க் "அச்சுறுத்தினாலும்" கூட, கூகுள் மற்றும் ஆப்பிள் ஆகிய இரண்டுமே தங்கள் ஆப் ஸ்டோர் கொள்கைகளில் இருந்து கண்டிப்பாக விலக மாட்டார்கள் என்பதும் வெளிப்படை!

Best Mobiles in India

English summary
Elon musk says i will make an alternative phone Is it really a threat to apple and Google

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X