"கட்டளையே சாசனம்": Mars இல் மனிதர்கள் குடியேறுவார்கள், நம் வாழ்நாளில் இது நடக்கும்- எலான் மஸ்க்

|

முன்னதாக எலான் மஸ்க் தனது ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப், 2029 இல் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் என்பதை சுட்டிக்காட்டினார். திட்டம் தற்போது வரை வளர்ச்சி நிலையில் இருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

செவ்வாய் கிரகத்தில் ஒரு காலணி: எலான் மஸ்க்

செவ்வாய் கிரகத்தில் ஒரு காலணி: எலான் மஸ்க்

எலான் மஸ்க் செவ்வாய் கிரகத்தில் ஒரு காலணி (குடியிருப்பு) குறித்து பலமுறை குறிப்பிட்டுள்ளார். எலான் மஸ்க்கின் கனவு திட்டம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றுவது ஆகும். மார்ஸ் திட்டத்துக்கான சோதனையில் SpaceX நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது மஸ்க்கின் சமீபத்திய டுவிட், செவ்வாய் கிரகம் குறித்த விவாதத்தை மீண்டும் தொடங்கி இருக்கிறது.

மார்ஸ் கிரகத்தில் பலகட்ட ஆராய்ச்சிகள் தீவிரம்

மார்ஸ் கிரகத்தில் பலகட்ட ஆராய்ச்சிகள் தீவிரம்

பூமியை தவிர்த்து பிற கோள்கள் குறித்த ஆராய்ச்சிகளை உலக நாடுகள் தீவிரமாக நடத்தி வருகிறது. குறிப்பாக மார்ஸ் கிரகத்தில் பலகட்ட ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. பூமியை தாண்டி ஒரு கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியும் என்றால் அது செவ்வாய் கிரகத்தில் தான் எனவும் அதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறியும் முயற்சியும் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

மார்ஸ் இல் பெர்சவரன்ஸ் ரோவர் தீவிர ஆராய்ச்சி

நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு உலா வந்துக் கொண்டிருக்கிறது. பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்த புகைப்படங்களை ஆராய்ச்சி செய்யும் நாசா, அதை அவ்வப்போது டிவிட்டரில் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறது.

எலான் மஸ்க்கின் கனவு திட்டம்

எலான் மஸ்க்கின் கனவு திட்டம்

மார்ஸ் (செவ்வாய் கிரகம்) குறித்த தகவல் அவ்வப்போது வெளியாகி வந்தாலும், செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியும் எனவும் அங்கு ஒரு காலணி (குடியிருப்பு) உருவாக்கும் முயற்சியிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் எலான் மஸ்க். இதற்கான முயற்சியில் இவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மஸ்க் சமீபத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அது குறித்த தகவலை பார்க்கலாம்.

நம் வாழ்நாளில் இது நடக்கும்: மஸ்க்

எலான் மஸ்க் பதிவிட்ட ட்வீட்டில், நமது வாழ்நாளில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவார்கள் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து 1969 இல் சந்திரனில் மனிதனின் முதல் காலடி தடம் பதித்ததையும் சுட்டிக் காட்டிய மஸ்க் செவ்வாய் கிரகத்திலும் அதை செய்ய முடியும் என குறிப்பிட்டார்.

1969 இல் சந்திரனில் மனிதனின் முதல் காலடி

நமது வாழ்நாளில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவார்கள் என்று மஸ்க் குறிப்பிட காரணம், செவ்வாய்க்கு மனிதர்கள் செல்ல நீண்ட நாள் இல்லை எனவும் விரைவில் அது நடக்கும் எனவும் சூசகமா தெரிவித்திருக்கிறார் என கூறப்படுகிறது. 1969 இல் சந்திரனில் மனிதனின் முதல் காலடி தடத்தை அமெரிக்கா பதித்த பிறகு, உலகளவில் விண்வெளி திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்க ஒன்று.

ஸ்பேஸ்எக்ஸ் ஷிப் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும்

ஸ்பேஸ்எக்ஸ் ஷிப் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும்

செவ்வாய் கிரகம் குறித்து முதன்முதலாக தெரிவித்த மஸ்க், 2020 இன் நடுப்பகுதியில் ஸ்பேஸ்எக்ஸ் ஷிப் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் என தெரிவித்தார். இருப்பினும் திட்டம் இன்னும் வளர்ச்சி நிலையில் உள்ளதால், 2029 இல் செவ்வாய் கிரகத்தில் ஸ்பேஸ் எக்ஸ் ஷிப் தரையிறங்கும் என குறிப்பிட்டார்.

மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்

மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்

தற்போது வரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியீட்டு உரிமத்தை பெறவில்லை. அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) ஸ்டார்ஷிப்பின் முதல் சோதனையின் போது 75 நிபந்தனைகளை விதித்தது. சோதனையில் ஸ்டார்ஷிப் இதுவரை 400 அடி உயரம் வரை சென்றிருக்கிறது. இதன்மூலம் இதுவரை கட்டமைக்கப்பட்ட ராக்கெட்டில் சக்திவாய்ந்த ராக்கெட் ஸ்டார் ஷிப் தான் என தெரிவிக்கப்பட்டது. 2025 க்குள் சந்திரனில் மனிதர்களை தரையிறக்க நாசாவும் இதை தான் பயன்படுத்த விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில் உயிரனங்கள் வாழ்ந்ததா?

செவ்வாய் கிரகத்தில் உயிரனங்கள் வாழ்ந்ததா?

நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் உயிரனங்கள் வாழ்ந்ததா இல்லை உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்புள்ளதா என ஆய்வு செய்து வருகிறது. அப்படி உயிரினங்கள் வாழ முடியும் என சாத்தியக்கூறுகள் கண்டறியும் நிலையில் அங்கு மனிதர்களை அனுப்ப நாசாவும் திட்டமிட்டிருக்கிறது.

செவ்வாய் கிரக உருவகப்படுத்தல் இடம்

செவ்வாய் கிரக உருவகப்படுத்தல் இடம்

செவ்வாய் கிரக உருவகப்படுத்தல் இடம், அதாவது செவ்வாய் கிரக மாதிரி சூழல் ஹூஸ்டனின் அருகே பாலைவனப் பகுதியில் மணற்குன்றின் மீது உருவாக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரக உருவகப்படுத்தல் ஆனது மிகக்கடினமான சூழலாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் மனிதர்களை ஓராண்டு தங்கியிருந்து பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

File Images

Best Mobiles in India

English summary
Elon Musk Says Humanity Will Reach Mars in Your Lifetime

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X