எலான் மஸ்கின் அடுத்த வினோதமான ஐடியா இது தானா? VTOL நோக்கி பாய விரும்புகிறாரா மஸ்க்?

|

எலக்ட்ரிக் கார்கள் தயார் செய்து வெற்றி அடைஞ்சாச்சு, அடுத்து அதிநவீன டிரக் உருவாக்கி அதிலும் வெற்றி அடைஞ்சாச்சு, விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு திரும்பும் ரீயூசபிள் ராக்கெட்களையும் உருவாக்கி அதிலும் வெற்றி அடைஞ்சாச்சு, சாமானிய மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் விண்வெளி சுற்றுலாவையும் உருவாக்கி வெற்றி அடைஞ்சாச்சு, இப்படிப் பல ஆய்வுகளை மேற்கொண்டு வெற்றிபெற்ற எலான் மஸ்கின் அடுத்த முயற்சி என்னவாக இருக்கும் என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. வழக்கம் போல யாரும் எதிர்பார்த்திடாத பதில் மஸ்கிடமிருந்து வெளியாகியுள்ளது.

எலான் மஸ்க் அடுத்தபடியாக எந்த விஷயத்தில் களமிறங்கத் திட்டம் வைத்துள்ளார்?

எலான் மஸ்க் அடுத்தபடியாக எந்த விஷயத்தில் களமிறங்கத் திட்டம் வைத்துள்ளார்?

உலகின் முன்னணி கோடீஸ்வர அதிபர் எலோன் மஸ்க் அடுத்தபடியாக எந்த விஷயத்தில் களமிறங்கத் திட்டம் வைத்துள்ளார் என்ற கேள்வி டிவிட்டரில் எழுப்பப்பட்டது. இவரின் கவனம் வெர்டிகள் லிஃப்ட் ஆப் மற்றும் லெண்டிங் அம்சம் கொண்ட மின்சார விமானங்களின் மீது தனது கண்களை வைத்திருப்பதாக மஸ்க் அந்த ட்வீட்டில் பதில் அனுப்பியுள்ளார். வெர்டிகள் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் (VTOL) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மின்சார சூப்பர்சோனிக் ஜெட் விமானங்களை உருவாக்க அவர் "மிகவும் ஆர்வத்துடன்" இருப்பதாகக் கூறியுள்ளார்.

வழக்கத்திற்கு மாறான விஷயங்களை முயற்சிப்பதில் கெட்டிக்காரர் மஸ்க்

வழக்கத்திற்கு மாறான விஷயங்களை முயற்சிப்பதில் கெட்டிக்காரர் மஸ்க்

ஆரம்பத்தில் மிகவும் விசித்திரமாகத் தோன்றும் வழக்கத்திற்கு மாறான முடிவுகளை எடுப்பதற்கு அறியப்பட்ட மஸ்க் இந்த முடிவை எடுத்தது என்பது நம்மில் பலருக்குப் பெரிய ஆச்சரியமாக இருக்காது. காரணம், வழக்கத்திற்கு மாறான விஷயங்களை முயன்று அதில் வெற்றி அடைவதைத் தனது வழக்கமாக இவர் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, ரீயூசபிள் ராக்கெட்களை உருவாக்குவது என்பது சாத்தியமற்ற விஷயம் என்று அனைவரும் கூறிய நேரத்தில், பல முறை தோல்வியைத் தழுவிய பின்னும் விடாமல் வெற்றியை அடைந்தவர் எலான் மஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது.

எலோன் மஸ்கின் டெஸ்லா 'மேக் இன் இந்தியா'வாக மாற மோடி அரசு விரும்புகிறதா.. மஸ்கின் விருப்பம் என்ன?எலோன் மஸ்கின் டெஸ்லா 'மேக் இன் இந்தியா'வாக மாற மோடி அரசு விரும்புகிறதா.. மஸ்கின் விருப்பம் என்ன?

எந்த சிக்கலான விஷயத்தை

எந்த சிக்கலான விஷயத்தை "அடுத்து" எலான் மஸ்க் சமாளிக்க விரும்புகிறார்?

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி "அடுத்து" எந்த சிக்கலான விஷயத்தைச் சமாளிக்க விரும்புகிறார் என்று தனது பின்தொடர்பவர்களிடம் கேட்ட தொழிலதிபர் மற்றும் எழுத்தாளர் பீட்டர் எச் டயமாண்டிஸுக்கு எலான் மஸ்க்கே நேரடியாகப் பதிலளித்துள்ளார். செங்குத்து விதமாகப் புறப்படும் மற்றும் தரையிறங்கும் விமானத் துறையில் நுழைய அல்லது சிக்கல்களைச் சந்திக்கத் தாம் விரும்புவதாக அவர் பீட்டர் எச் டயமாண்டின் ட்வீட்டிற்கு பதில் அளித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

டெஸ்லா முதல் ஸ்பேஸ்எக்ஸ் வரை எல்லாவற்றையும் உண்மையாக்கிய விடா முயற்சி

டெஸ்லா முதல் ஸ்பேஸ்எக்ஸ் வரை எல்லாவற்றையும் உண்மையாக்கிய விடா முயற்சி

மஸ்க் முதன்முதலில் எலக்ட்ரிக் கார்களைப் பற்றிப் பேசியபோது, தொழில்நுட்பம் மற்றும் வணிக ரீதியான சவால்கள் காரணமாக, அவற்றின் சாத்தியக்கூறுகள் பற்றி பலர் நம்பவில்லை. பின்னர் டெஸ்லா களமிறங்கி, முடியாத காரியம் என்று சொன்னவர்கள் முன்னாள் உண்மையானது. அதேபோல், எலான் மஸ்கின் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகளை உருவாக்கும் முயற்சியை யாரும் நம்பவில்லை, ஆனால், ஸ்பேஸ்எக்ஸ் மூலம் இதையும் அவர் சாத்தியமாக்கி விண்வெளி ஆய்விற்கான எளிமையான கதவைத் திறந்துவைத்தார்.

வெறும் ரூ.129 விலையில் அமேசான் பிரைம் சந்தா வாங்கலாம் தெரியுமா? ஆனால் டிவிஸ்டை செக் செய்யுங்கள்..வெறும் ரூ.129 விலையில் அமேசான் பிரைம் சந்தா வாங்கலாம் தெரியுமா? ஆனால் டிவிஸ்டை செக் செய்யுங்கள்..

விமானப் போக்குவரத்து..

விமானப் போக்குவரத்து.. "என் மூளையை வெடிக்க வைக்கும்"

விண்வெளி ஆய்வு, மின்சார கார்கள் மற்றும் பசுமை ஆற்றல் தத்தெடுப்பு ஆகியவற்றை மாற்றியமைப்பதில் எலோன் மஸ்க் பெரும் பங்கு வகித்துள்ளார். "அடுத்து அவர் எந்தத் தொழிலைச் சமாளிக்க விரும்புகிறார்? எனது விருப்பம் விமானப் போக்குவரத்து... உங்களுடையது என்ன? " XPRIZE அறக்கட்டளையின் நிறுவனர் டயமண்டிஸ் ட்வீட்டில் கூறினார்.

மஸ்க் குறிப்பிட்டுள்ள ஈமோஜி எதை குறிக்கிறது?

மஸ்க் தனது கவனம் மின்சார விமானம் மீது இருக்கிறது பதிலளித்த போதிலும், கடைசி இரண்டு ஈமோஜிகள், அவருக்கு அதிக வேலைகளைச் சேர்ப்பது "என் மூளை வெடிக்க வைக்கும்" என்ற கருத்தில் பதிவிட்டுள்ளார்.

புதுசா ஒன்பிளஸ் 5ஜி போன் வாங்க ரெடியா? பட்ஜெட் விலையில் கிடைக்கும் இந்த மாடலை மிஸ் பண்ணிடாதீங்க..புதுசா ஒன்பிளஸ் 5ஜி போன் வாங்க ரெடியா? பட்ஜெட் விலையில் கிடைக்கும் இந்த மாடலை மிஸ் பண்ணிடாதீங்க..

எலான் வேறு எந்தெந்த நிறுவனங்களை எல்லாம் நிர்வகிக்கிறார் என்று தெரியுமா?

எலான் வேறு எந்தெந்த நிறுவனங்களை எல்லாம் நிர்வகிக்கிறார் என்று தெரியுமா?

பல பில்லியன் நிறுவனங்களான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவற்றுக்குத் தலைமை தாங்குவதைத் தவிர, எலான் மஸ்க், நரம்பு இணைப்பை இணைத்துப் பொருத்தக்கூடிய மூளை இயந்திர சிப்களை உருவாக்கும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அதேபோல், சுரங்கப்பாதை தோண்டும் முயற்சியான தி போரிங் கம்பெனி ஆகியவற்றை நிர்வகித்துவருகிறார். இவர் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வகமான OpenAI இன் இணை நிறுவனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அது தவிர, அவர் அடிக்கடி தனது ட்விட்டர் கணக்கு மூலம் கிரிப்டோ தொழில் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்கிறார்.

மின்சார VTOL மீதான மஸ்கின் ஆர்வம் புதியதல்ல

மின்சார VTOL மீதான மஸ்கின் ஆர்வம் புதியதல்ல

ஸ்பேஸ்எக்ஸ் மூலம், மஸ்க் செவ்வாய் கிரகத்தை காலனித்துவப்படுத்தி மனிதர்களைத் தங்க வைத்து "பல கோள் உயிர் வாழ்விகளாக" உருவாக்க விரும்புவதாகக் கூறினார். மஸ்க் மின்சார விமானங்களில் ஆர்வம் காட்டுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் ஜூலை மாதத்தில், அவர் இதே போன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதற்கு முன், 2018 ஆம் ஆண்டில் ஜோ ரோகனின் போட்காஸ்டில், மஸ்க் மின்சார VTOL-களை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து தனக்கு சிறந்த யோசனைகள் இருப்பதாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Elon Musk Says He Is Dying To Make Supersonic Electric Jets Using VTOL Technology : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X