ரகசியமா ஒரு இன்ஸ்டா கணக்கு வச்சுருக்கோம்ல., அதில் தான் அது எல்லாமே: இந்தியருக்கு பதிலளித்து மாட்டிய மஸ்க்!

|

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஒரு ரகசிய இன்ஸ்டாகிராம் கணக்கை வைத்திருப்பதாக வெளிப்படுத்தியுள்ளார். இந்த ரகசிய இன்ஸ்டாகிராம் கணக்கு குறித்து எலான் மஸ்க் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் ஸ்பேஸ்எக்ஸ்-ன் பேஸ்புக் கணக்குகளை 2018-ல் நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் எலான் மஸ்க்கிற்கு என அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியர் டுவிட்டிற்கு மஸ்க் அளித்த பதில்

இந்தியர் டுவிட்டிற்கு மஸ்க் அளித்த பதில்

புனேவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர் பிரனய் பத்தோலின் டுவிட்டிற்கு மஸ்க் பதிலளித்தார், அவருடன் எலான் மஸ்க் மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் தொடர்ந்து ஈடுபாட்டில் இருக்கிறார். எலான் மஸ்க் டுவிட்டர் கணக்கை மஸ்க்கே தான் இயக்குகிறார் என நினைக்கும் நபர்களை கேலி செய்து பத்தோல் டுவிட் செய்திருந்தார் அவருக்கு மஸ்க் வெளிப்படையாக பதிலளித்துள்ளார். எலான் மஸ்க் தற்போது ஒரு சமூகவலைதள கணக்கை மட்டுமே பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.

ஒரு ரகசிய இன்ஸ்டாகிராம் கணக்கு

எலான் மஸ்க் டுவிட்டர் கணக்கை 94.6 மில்லியன் பயனர்கள் பின் தொடர்கின்றனர். இந்த நிலையில் மஸ்க் தனது நண்பர்கள் அவருக்கு அனுப்பிய இணைப்புகளை பார்க்க "cheesy secret Instagram account" அதாவது ஒரு ரகசிய இன்ஸ்டாகிராம் கணக்கை பயன்படுத்துவதாக ஒப்புக் கொண்டுள்ளார். டுவிட்டரில் துடிதுடிப்பாக இருக்கும் பிரபலங்களில் பிரதானமானவர் மஸ்க், டுவிட்டரில் எந்தவொரு பயனர்களும் கேட்கப்படும் பயனுள்ள கேள்விக்கு மஸ்க் தாராளமாக பதிலளிப்பார். இதன்படி, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரான எலான் மஸ்க், தற்போது "ஒரு ரகசிய இன்ஸ்டாகிராம் கணக்கையும் இயக்குவதாக வெளிப்படுத்தியுள்ளார்". ரகசிய இன்ஸ்டாகிராம் கணக்கில் தனது நண்பர்கள் அனுப்பும் இணைப்புகளை பார்ப்பது வழக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நண்பர்கள் அனுப்பும் இணைப்புகளை செக் செய்வதற்கு

"என்னிடம் ஒரு ரகசிய இன்ஸ்டாகிராம் கணக்கு உள்ளது, அதன்மூலம் நண்பர்கள் தனக்கு அனுப்பும் இணைப்புகளை என்னால் கிளிக் செய்து பார்க்க முடியும்" என மஸ்க் பத்தோல் என்ற டுவிட்டர் பயனருக்கு பதிலளித்துள்ளார். பத்தோல் செய்யும் பெரும்பாலான டுவிட்டுக்கு மஸ்க்கிடம் பதில் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. ரகசிய இன்ஸ்டாகிராம் கணக்கு மஸ்க் வைத்திருப்பது என்பது தனது நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கங்களை நீக்கும் முடிவுக்கு எதிராக இருப்பதாக கூறப்படுகிறது. காரணம், எலான் மஸ்க் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா பேஸ்புக் கணக்குகளை 2018-ல் நீக்கினார். அதில் ஒவ்வொன்றும் சுமார் 2.6 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டிருந்தன.

டுவிட்டரில் மிக பிரபலமானவர் எலான் மஸ்க்

டுவிட்டரில் மிக பிரபலமானவர் எலான் மஸ்க்

எலான் மஸ்க் டுவிட்டரில் மிக பிரபலமானவர். எலான் மஸ்க் டுவிட்டரை வாங்குவது உறுதி செய்யப்படுவதற்கு முன்பே டுவிட்டரின் 9.2% பங்குகளை மஸ்க் தன் கைவசம் வைத்திருந்தார். மஸ்க் டுவிட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்குவது என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட இருந்த நிலையில் டுவிட்டரின் ஆதார ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டன.

5% மட்டுமே போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள்

5% மட்டுமே போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள்

இதில், டுவிட்டரில் 5% மட்டுமே போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் டுவிட்டரில் மஸ்க்கை பின்தொடர்பவர்களில் பாதி பேர் போலியானவர்கள் சமீபத்திய தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில் மஸ்க் டுவிட்டரில் 5% மட்டுமே போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள் இருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை இதுவரை பார்க்கவில்லை என குறிப்பிட்டார்.

20 முதல் 25% வரையிலான ஆட்டோமேட்டட் கணக்குகள்

20 முதல் 25% வரையிலான ஆட்டோமேட்டட் கணக்குகள்

மேலும் டுவிட்டரில் 20 முதல் 25% வரையிலான ஆட்டோமேட்டட் கணக்குகள் இருக்கலாம் என கணக்கிப்படுவதாக குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து டுவிட்டரில் 5% மட்டுமே போலி மற்றும் ஸ்பேம் கணக்குகள் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் வரை டுவிட்டரை வாங்கப் போவதில்லை என மஸ்க் குறிப்பிட்டுள்ளார். டுவிட்டரை மஸ்க் வாங்குவது உறுதி செய்யப்பட்ட உடன் டுவிட்டரின் பங்கு சரிவை சந்தித்தது. இதையடுத்து டுவிட்டரை வாங்குவதாக மஸ்க் அறிவித்தபோது இந்த பங்கு மதிப்பு தற்போது இல்லை. டுவிட்டர் தளத்தில் 5 சதவீதத்துக்கும் குறைவான ஸ்பேம் கணக்குகள் மட்டுமே இருக்கிறது என குறிப்பிடப்படுகிறது. ஆனால் இதற்கான ஆதாரங்கள் தற்போது வரை முறையாக சமர்பிக்கப்படவில்லை. குறைந்த விலையில் ஒப்பந்தம் என்பது கேள்விக்கு அப்பாற்பட்டது. ஒருவர் குறிப்பிடுவதை விட மோசமான ஒன்றுக்கு நீங்கள் அதே விலையை கொடுத்து வாங்க முடியாது என மஸ்க் குறிப்பிட்டிருக்கிறார்.

Best Mobiles in India

English summary
Elon Musk Says He Has a Secret Instagram Account to Follow Friends Post

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X