Home
News

X தளத்தில் கொட்ட போகும் பணம்.. எலான் மஸ்க் செய்த புது வேலை.. ஆனாலும் இதை யாரும் எதிர்பார்க்கலை..

வித்தியாசமான யோசனைக்கு சொந்தக்காரரான எலான் மஸ்க் (Elon Musk) தான் சொந்தமாக்கிக்கொண்ட எக்ஸ் (X) என்ற தளத்தை ஒரு ஆல்ரவுண்டர் தளமாக மாற்றப்போவதாக முன்பு கூறியிருந்தார். இதற்கான நடவடிக்கைகளை தான் படிப்படியாக எடுத்துவருவதாகவும் கூறியிருந்தார். இன்னும் சில வருடங்களில் எக்ஸ் தளம், தனது பயனர்களுக்கு தேவையான எல்லா சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கக்கூடிய வகையில் உருமாறும் என்று நம்பிக்கையாக தெரிவித்திருந்தார். சொன்னதை செய்து முடிப்பவர் எலான் மஸ்க் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. எலான் மஸ்க் இப்போது மீண்டும் அவருடைய X ஆட்டத்தை துவங்கிவிட்டார்.

இந்த முறை தனது எக்ஸ் தள ஆட்டத்தில், புதிதாக பேமெண்ட் சேவையை அறிமுகம் செய்யவிருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆம் மக்களே, கூகுள் பே (Google Pay), அமேசான் பேமெண்ட் (Amazon Payment), வாட்ஸ்அப் பேமெண்ட் (WhatsApp Payment) போல இனி விரைவில் உலக மக்கள் எக்ஸ் பேமெண்ட் (X Payment Service) சேவையை பயன்படுத்தப்போகிறார்கள் என்ற தகவல் இப்போது இணையத்தில் காட்டு தீ போல பரவத்துவங்கியுள்ளது.

X தளத்தில் கொட்ட போகும் பணம்.. எலான் மஸ்க் செய்த புது வேலை.. ஆனாலும் ?

X தளத்தில் கொட்ட போகும் பணம்.. எலான் மஸ்க் செய்த புது வேலை:

இது வெறும் புரளி இல்லை. உண்மையிலேயே முன்னர் டிவிட்டர் என்று அழைக்கப்பட்டு வந்த, தற்போதைய எக்ஸ் தளத்தில் இனி உங்களால் பணம் அனுப்ப முடியும் மற்றும் பணம் பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதில், உலகத்தில் உள்ள யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்ப கூடிய வகையில் பேமெண்ட் சேவைகளை நாம் எதிர்பார்க்கலாம் என்று லீக் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

எக்ஸ் தளத்தில் புதிய பேமெண்ட் சேவை அறிமுகம் செய்யப்படவிருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக, பேமெண்ட் (payment), பேலன்ஸ் (balance), ட்ரான்ஸ்ஃபர் (transfer) மற்றும் ட்ரான்ஸாக்ஷன்ஸ் (transactions) போன்ற வார்த்தைகளை எக்ஸ் தளத்தின் நேவிகேஷன் பற்களில் கண்டதாக டெக்கிரன்ச் தளம் அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த புதிய பேமெண்ட் சேவைகள் முற்றிலுமாக இன்னும் தயாராகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ் தளத்தின் புதிய பேமெண்ட் சேவை (X Payment) இறுதிக்கட்ட சோதனையில் இருப்பதாக மற்றொரு டெக் வட்டார தகவல் தெரிவிக்கிறது. எது எப்படியாக இருந்தாலும், இதுவரை வீடியோ காலிங் (X video calling) மற்றும் வாய்ஸ் கால் (X voice calling), போன்ற சேவைகளை வழங்கி வந்த எக்ஸ் ஆப்ஸ் (X mobile apps) மூலம் இனி மக்கள் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என்பதை யோசிக்கவே மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.

முழு கட்டண சேவையாக மாறப்போகும் எக்ஸ் என்ற பழைய டிவிட்டர்.. இனி எல்லாமே காசு தானா?

எப்படி வாய்ஸ் கால்ஸ் மற்றும் வீடியோ கால்ஸ் உலக பயனர்களை இணைகிறதோ, அதேபோல் இந்த பேமெண்ட் சேவையும் உலக மக்களை இணைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், எக்ஸ் தளத்தில் நாம் விரைவில் இன்னும் பல மாற்றங்களை பார்க்கவிருப்பதாக X இன் CEO, லிண்டா யக்காரினோ (Linda Yaccarino) வெளியிட்ட குளோபல் டவுன் ஸ்கொயர் என்ற வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது X இல் வரவிருக்கும் அம்சங்களைப் பற்றிய ஒரு பார்வையை நமக்குக் காட்டுவது மட்டுமல்லாமல், ஒரு இயங்குதளத்தின் மாபெரும் மாறும் தன்மையைக் குறிக்கிறது. இனி எக்ஸ் தள சேவை முழுமையாக கட்டணம் வசூலிக்கப்பட்ட பிறகு, அதன் பயனர்களை பயன்படுத்த அனுமதிக்கும் ஒரு சேவையாக மாறவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தற்போது எக்ஸ் தளத்தில் வசூலிக்கப்படும் பிரீமியம் சேவைக்கான கட்டணத்தை விட மிகமிக குறைவாக இருக்குமென்று கூறப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக, விரைவில் புதிதாக எக்ஸ் தளத்தில் எக்ஸ் பிரீமியம் பிளஸ் என்ற சூப்பர் பிரீமியம் சேவையும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரீமியம் பிளஸ் பயனர்களுக்கு விளம்பரங்கள் எதுவுமே காட்டப்படாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சங்களை இன்னும் ஒரு இரு மாதங்களில் நாம் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Elon Musk’s X Platform Is Closer To New X Payment Service Launch Soon X Users Have To Pay For Using App
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X